மணிக்கு 1,000 மைல் வேக சாதனைக்காக ஆஸ்திரேலியா உருவாக்கிய ராக்கெட் கார்!

By Saravana

மணிக்கு 1,000 மைல் வேகத்தை எட்டும் வல்லமை கொண்ட ராக்கெட் கார் ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் குழு உருவாக்கி வருகிறது. பிளட்ஹவுன்ட் எஸ்எஸ்சி என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் கார் குறித்த முழுமையான விபரங்களை ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொறியாளர் குழு ஒன்றும் புதிய ராக்கெட் காரை உருவாக்கியிருக்கிறது. அதாவது, இங்கிலாந்தின் பிளட்ஹவுன்ட் எஸ்எஸ்சி ராக்கெட் காருக்கு முன்னதாக மணிக்கு 1,000 மைல் வேகத்தை எட்டிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இந்த ராக்கெட் காரை உருவாக்கியிருக்கின்றனர். இந்த புதிய ராக்கெட் காரின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய ராக்கெட் கார்

புதிய ராக்கெட் கார்

ஆஸ்திரேலிய பொறியியல் வல்லுனர்கள் குழு உருவாக்கியிருக்கும் காருக்கு ஆஸி இன்வேடர் ஆர்5 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தரையில் அதிவேகமாக செல்லும் வாகனம் என்ற பெருமையை பெறுவதற்காக இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வியக்க வைக்கும் சக்தி

வியக்க வைக்கும் சக்தி

ஆஸி இன்வேடர் ஆர்5 ராக்கெட் காரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 2 லட்சம் குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

எரிபொருளை குடிக்கும்...

எரிபொருளை குடிக்கும்...

அதிகபட்ச வேகத்தில் செல்லும்போது 25 வினாடிகளில் கிட்டத்தட்ட 2.8 டன் எரிபொருளை இந்த கார் ஸ்வாகா செய்திருக்கும்.

செயல்திறன்

செயல்திறன்

துவக்க நிலையியிலிருந்து மணிக்கு 1,000 மைல் வேகத்தை வெறும் 20 வினாடிகளில் எட்டிவிடும் என்றால், இதன் வலிமையை கொஞ்சம் கற்பனை கண்ணால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 எடை

எடை

ஆஸி இன்வேடர் ஆர்5 ராக்கெட் கார் 16 மீட்டர் நீலம் கொண்டது. 9.2 டன் நிகர எடை கொண்டது.

வலிமையான சக்கரங்கள்

வலிமையான சக்கரங்கள்

ராக்கெட் எஞ்சினின் திறனுக்கு ஈடுகொடுத்து செல்லும் வகையிலும், அதிக வெப்பத்தை தாங்கும் விதத்திலும் விமான தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உயர்தர அலுமினிய சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சக்கரமும் 140 கிலோ எடை கொண்டது.

சக்கர சுழற்சி

சக்கர சுழற்சி

அதிகபட்ச வேகத்தை இந்த ராக்கெட் கார் தொடும்போது, இதன் சக்கரங்கள் நிமிடத்திற்கு 10,000 முறை சுழலும்.

பைலட்

பைலட்

இந்த ராக்கெட் காரை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பைலட் ராஸ்கோ மெக்ளாசன் செலுத்த இருக்கிறார். இவர் தரையில் அதிவேகமாக காரை செலுத்தி, சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு உடல் வலிமையும், மன வலிமையும் அதிகம் இருக்க வேண்டும்.

சாதனைக்கான இடம்

சாதனைக்கான இடம்

இங்கிலாந்தின் பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி காரை அதிவேகத்தில் செலுத்தி சாதனை படைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், ஆஸி இன்வேடர் ஆர்5 காரை அதிவேகத்தில் செலுத்தும் முயற்சிக்கான இடத்தை இதனை வடிவமைத்தவர்கள் தேடி வருகின்றனர்.

ஓடுபாதை

ஓடுபாதை

இந்த ராக்கெட் காரை அதிகபட்ச வேகத்தை எட்டும் முயற்சிக்காக 27 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஓடுபாதை தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளட்ஹவுன்ட் எஸ்எஸ்சி ராக்கெட் கார்

ரத்தத்தை உறைய வைக்கும் வேகம்... பிளட்ஹவுன்ட் எஸ்எஸ்சி ராக்கெட் கார் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

செய்திகள் உடனுக்குடன்...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Australia is aiming to upstage the United Kingdom's Bloodhound SSC's attempt to become the first vehicle to reach 1000mph (1609.34km/h) and claim the land speed record by using the rocket powered vehicle known as the Aussie Invader R5.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X