விவிஐபி நம்பருடன் சேல்ஸ்க்கு வரும் நடிகரின் பைக்! பாதிக்கும் கம்மி விலையில விற்க போறதா அறிவிச்சிருக்காரு!

ரோஹித் ராய், இந்த பெயரை அறியாத இந்தி பட ரசிகர்களே இருக்க முடியாது. இவர் இந்தி படங்களில் மட்டுமல்ல நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் படங்களில் நடிப்பதில் மட்டுமல்ல வாகனங்களை நேசிப்பதிலும் பெயர்போன நபராக உள்ளார். இதற்கு சான்றாக அவரிடத்தில் ஏகப்பட்ட ஆடம்பர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கார்கள் மட்டுமல்ல சில விலை உயர்ந்த டூ-வீலர்களையும் அவர் வைத்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. அதில் ஒன்றையே விற்பனைச் செய்ய தான் முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரோஹித் ராய் அவருடைய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்போர்ட்ஸ் எடிசன் (Indian FTR1200 Sports Edition) பைக்கையே விற்பனைச் செய்ய முன் வந்துள்ளார். இதை தன்னுடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாகவும் அவர் உறுதிப்படுத்தி இருக்கின்றார். ஆமாங்க, இந்த தகவலை நடிகர் ரோஹித் தன்னுடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாகவே உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

Rohit roy selling his indian ftr 1200 superbike

குறிப்பாக, இந்த பைக்கை இப்போது விற்பனையில் இருக்கும் இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்கைக் காட்டிலும் பாதிக்கும் குறைவான விலையிலேயே விற்பனைச் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கின்றார். இதுதவிர, இந்த பைக் பற்றிய இன்னும் பல்வேறு சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்திருக்கின்றார்.

மிக முக்கியமாக தான் விற்பனைச் செய்ய முன் வந்திருக்கும் அந்த பைக் ஓர் ஸ்போர்ட் எடிசன் என்பதையும், அது 2019 மாடல் என்பதையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இத்துடன், இப்போது வரை அந்த பைக் வெறும் 1,000 கிமீ தூரம் வரை மட்டுமே பயணித்திருப்பதாகவும், அதை 8.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே விற்பனைச் செய்ய இருக்கின்றேன் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

இதுமட்டும் அல்ல அந்த பைக் விவிவிஐபி (VVVIP) பதிவெண்ணைக் கொண்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. 'எம்எச் 04 கேஇ 500' (MH 04 KE 500) எனும் பதிவெண்ணையே அந்த பைக் கொண்டிருக்கின்றது. இந்த பதிவெண்ணிற்கே அவர் லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்போர்ட் பைக்கின் உயர்நிலை தேர்வு ரூ. 23 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதிக விலைக் கொண்ட விலைக் கொண்ட பைக்கையே ரூ. 8.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைச் செய்ய இருக்கின்றார், ரோஹித் ராய்.

Indian ftr 1200 superbike

அவர் விற்பனைச் செய்ய இருக்கும் இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்போர்ட் 2019 மாடலாக இருந்தாலும், பார்க்க ஷோரூம் கன்டிஷனில் புத்தம் புதியதுபோல் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், அவர் சொல்லியிருக்கும் அந்த விலைக்கு சற்றே ஒர்த்தான பைக்காக இது இருக்கும் என தெரிகின்றது.

இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்போர்ட் பைக் ஓர் ரோட்ஸ்டர் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கில் 1203 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, வி-ட்வின் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 121.6 பிஎஸ் ஆற்றலையும், 117.9 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

Rohit roy s indian ftr 1200 superbike

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர்கள் இதுபோன்று தாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாகனங்களை விற்பனைச் செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இந்த மாதிரியான சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே பலரின் கவனத்தைக் கவரும் விதமாக நடிகர் ரோஹித் ராய் தான் பயன்படுத்தி வந்த பைக்கை பாதிக்கும் குறைவான விலையில் விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 20:28 [IST]
English summary
Rohit roy lists his indian ftr 1200 superbike for sale at less than half price
மேலும்... #celebrity bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X