4.2 கோடி ரூபாய் காரில் மனைவியுடன் ஷாப்பிங் சென்ற கிரிக்கெட் வீரர்! இந்த கார்ல இவ்வளவு விஷயம் இருக்குதா?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் தனது மனைவியுடன் தனது சொந்தமான காஸ்ட்லியான லாம்போகினி உரூஸ் காரில் ஷாப்பிங் வந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான். இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரரும் இந்தியா முழுவதும் பிரபலமான வீரர்களாக இருக்கிறார்கள். பிரபலமான விளையாட்டு போட்டி என்பதால் இவர்கள் அதிக அளவிலும் சம்பாதிக்கிறார்கள். இதனால் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை முறையும் சொகுசு வசதிகள் நிறைந்ததாகவே இருக்கிறது. பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு சொந்தமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கிலான மதிப்பு கொண்ட கார்களை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பலரிடம் பல விதமான கார்கள் இருக்கிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கராஜில் ஏகப்பட்ட காஸ்ட்லியான கார்களை வைத்துள்ளார். அதில் முக்கியமானது லாம்போர்கினி உரூஸ் கார் தான். இந்த காரை கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா பலமுறை தானே ஒட்டி இந்திய சாலைகளில் வலம் வந்துள்ளார். அந்த வீடியோக்கள் எல்லாம் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் இருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது மனைவி ரித்திகா உடன் தனது இனி காரில் ஷாப்பிங் வந்துள்ளார். இதை அப்பகுதியில் இருந்த இவரது ரசிகர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோவில் அவர் நீல நிற லம்போர்கினி ஒரு காரில் வந்து இறங்குகிறார். இந்த லம்போர்கினி உரூஸ் எஸ்யூவி காரை இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த காரை ஓட்டி வந்தது அவர் அல்ல அவரது மனைவியாகும்.
இந்த கார் வரும்போது பலர் ரோகித் சர்மா தான் இந்த காரை ஓட்டி வருவார்கள் என நினைத்தார்கள் ஆனால் இந்த தம்பதி இறங்கும் போது தான் ரோகித் சர்மாவின் மனைவி காரை ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. ரோகித் சர்மா பக்கத்தில் பயணிகள் சீட்டில் அமர்ந்து வந்துள்ளார். இருவரும் இறங்கி ஷாப்பிங்கிற்காக ஒரு கடைக்குள் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பி வரும்போது அப்பகுதியில் கூட்டம் அதிகமாக கூறிவிட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் காரின் பின் சீட்டில் ஏறிவிட்டனர் காரை வேறு ஒருவர் ஓட்டி சென்றார். இந்த காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவாகியுள்ளது. அ்ந்த வீடியோ தான் தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
லாம்போர்கினி நிறுவனத்தின் பிரபலமான எஸ்வி காராக இந்த உரூஸ் கார் இருக்கிறது. லம்போகினி எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது என தெரிந்த உடனேயே பலர் இந்த காரை வாங்க ஆர்வம் ஆகிவிட்டனர். ரோஹித் சர்மா வாங்கியுள்ளது ப்ளூ எலியோஸ் நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட காராகும். இது கிட்டத்தட்ட நீல நிற ஷேடில் இருக்கும். இந்த காரை அவர் இந்தியன் கிரிக்கெட் டீம் ஜெர்சி நிறத்தை ஒத்து இருப்பதால் இதை வாங்கியுள்ளார்.
ரோஹித் சர்மா வாங்கியுள்ள இந்த லாம்போர்கினி உரூஸ் காரின் உட்புற பகுதியில் முழுவதும் ரோஸ் ஆலா என்ற செர்ரீ ரெட் நிறத்திலும் நீரோ பிளாக் நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் தான் ஆடி ஆர்எஸ்க்யூ8, பென்ட்லி பென்டக்யா, போர்ஷே கேயன் ஆகிய கார்கள் உருவாக்கப்பட்டது.
இந்த லாம்போர்கினி உரூஸ் காரின் இன்ஜினை பொருத்தவரை 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 650 பிஎஸ் பவரையும் 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு இசட் எஃப் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் விலையை பொறுத்தவரை இந்தியாவில் ரூபாய் 4.2 கோடி என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்களின் கஸ்டமைசேஷனுக்கு ஏற்ப இதன் விலையில் மாறுபாடுகள் இருக்கலாம். இந்த ரூபாய் 4.2 கோடி என்பது அடிப்படை விலை தான். அதற்கு மேல் கஸ்டைமசேஷன் செய்தால் அதற்கான விலை தனி.
கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் கராஜில் ஏகப்பட்ட நீல நிற கார்கள் உள்ளன. குறிப்பாக இந்த லாம்போர்கினி உரூஸ் காரை தவிர பிஎம்டபிள்யூஎம்5 காரும் இவரது கராஜில் இதே நீல நிற ஷேடில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் அவரது மனைவிக்கும் நீல நிறம் என்பது பிடித்த நிறமாக இருக்கலாம் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஏராளமான கார் கலெக்ஷன்கள் உள்ளன. கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது மனைவியுடன் அடிக்கடி இந்த காரில் உலா வருகிறார். இந்த கார் அவருக்கு பிடித்தமான காராக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








