வாங்கிய கோப்பைகளை விட லக்சரி கார்களின் எண்ணிக்கை கம்மி தான் - மும்பை ஹீரோவின் கார் கலெக்ஷன்ஸ்!!
ரோஹித் சர்மா (Rohit Sharma), இணையத்தை திறந்தாலே தற்போதைக்கு இவரது பெயராக தான் உள்ளது. பார்படோஸில் சூறாவளியின் காரணமாக இன்னும் ரோகித் சர்மா & கோ இந்தியாவை வந்தடையவில்லை. ஆனால் அவர்களை கொண்டாடுவதற்கு நாட்டில் அனைத்தும் தயாராக உள்ளன. ஏனெனில், கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பிறகு ஐசிசி கோப்பையையும், சுமார் 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி 20-ஓவர் கோப்பையையும் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. இதற்கு முக்கிய அடித்தளமாக இருந்தவர், அணியை வழிநடத்தி சென்ற கேப்டன் ரோஹித் சர்மா.
மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களை போலவே, ரோஹித் சர்மாவும் கார் பிரியர் ஆவார். குறிப்பாக, கார்களில் அதிவேகமாக பயணிப்பதற்கு விரும்பக்கூடியவர். கடந்த ஆண்டில் கூட அதிவேகமாக 200kmph வேகத்திற்கு மேல் கார் ஓட்டியதற்காக ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இத்தகைய கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மாவிடம் உள்ள லக்சரி கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus): கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் வாங்கிய விலையுயர்ந்த கார் லம்போர்கினி உருஸ் ஆகும். இவரிடம் உள்ள விலையுயர்ந்த காரும் இது எனலாம். 0-இல் இருந்து மணிக்கு 100kmph வேகத்தில் செல்லக்கூடிய இந்த லம்போர்கினி காரின் டாப்-ஸ்பீடு 305kmph ஆகும். இந்த காரை கடந்த 2024 மார்ச் மாதத்தில் ரோஹித் சர்மா வாங்கினார்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3): இந்த வரிசையில் நாம் பார்க்கவுள்ள 2வது கார் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆகும். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது இந்த பிஎம்டபிள்யூ காரில் பொல்லார்ட் உள்ளிட்டோருடன் ரோஹித் சர்மா பயணம் செய்துள்ளதை பார்த்திருக்கிறோம். இவரிடம் இருப்பது, 2017ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 3ஆம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் ஆகும்.

பிஎம்டபிள்யூ எம்5 (BMW M5): ரோஹித் சர்மாவின் கனவு வாகனம் இது எனலாம். இதனால், அவரது கார் கலெக்ஷன்களில் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்த கார் இது ஆகும். இதன் காரணமாகவே, இந்த பவர்ஃபுல்லான பிஎம்டபிள்யூ காரில் ரோஹித் சர்மா அவ்வப்போது மும்பை சாலைகளில் காட்சி தந்துள்ளார். இந்த காரில் பொருத்தப்படுகின்ற டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 560 பிஎச்பி மற்றும் 680 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ் 350டி (Mercedes GLS 350d): லம்போர்கினி உருஸ் அளவிற்கு இல்லையென்றாலும், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் 350டி கார் ஆனது ரோஹித் சர்மாவிடம் உள்ள அழகான மற்றும் பவர்ஃபுல்லான கார் ஆகும். இதில் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 255 பிஎச்பி மற்றும் 620 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.8 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடக்கூடியது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): லம்போர்கினி, மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ கார்களை உபயோகப்படுத்தாத நாட்களில் ரோஹித் சர்மா பரவலாக பயன்படுத்தும் கார், ஃபார்ச்சூனர் ஆகும். இந்த டொயோட்டா காருக்கு இந்தியாவில் பல ரசிகர்கள் உள்ளனர். இதில் ரோஹித் சர்மாவும் ஒருவராக இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ஓர் கார் பிரியர் ஆவார். அவரிடம் இத்தனை கார்கள் இருப்பதில் பெரியதாக எந்த ஆச்சிரியமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த கார்களின் எண்ணிக்கை குறைவான ஒன்றே. வரும் காலங்களில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இன்னும் மேலும் பல லக்சரி கார்களை ரோஹித் சர்மா வாங்குவார் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









