லாம்போர்கினி காரில் மனைவியுடன் ரோஹித் ஷர்மா செய்த மோசமான காரியம்! போலீஸ் கேமராவில் சிக்கியதால் அபராதம்!

தனது லாம்போர்கினி காரில் 215 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. உலகில் உள்ள பல முக்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அணியை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்.

rohit sharma traffic challans

இந்நிலையில் இன்று இந்தியா- வங்கதேசம் கிரிக்கெட் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்த போட்டி புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியத்தில் வைத்து நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோகித் ஷர்மா தனது லாம்போர்கினி காரில் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் புனேவிற்கு இந்திய அணியுடன் சேர்ந்து விளையாடுவதற்காக சென்று கொண்டு இருந்தார். தனது குடும்பத்தினருடன் இவர் காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இவர் தான் லாம்போர்கினி காரை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கார் சுமார் 200 முதல் 215 கிலோ மீட்டர் வேகம் வரை பயணித்ததாக கூறப்படுகிறது. இது அப்போது அங்கிருந்த ஸ்பீடு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த கேமராக்களில் உள்ள தரவுகள் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு வேகமாக கார் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் என்று நடந்தது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பெரும்பாலும் கடந்த திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மும்பை புனை எக்ஸ்பிரஸ் சாலையில் வேகமாக பயணித்ததன் காரணமாக இவருக்கு மூன்று விதமான அபராத செல்லான்கள் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலை என்பது ஆறு வழிச்சாலையாகும் இது மும்பை மற்றும் புனை ஆகிய இரண்டு நகரங்களை இணைப்பதற்கான மிக முக்கிய பிரதான சாலையாக இருக்கிறது. இது சுமார் 94 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு தான் இந்த சாலை முதல்முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த சாலை வந்தது முதல் மும்பை மற்றும் புனே இடையிலான பயண நேரம் வெகுவாக குறைந்தது. ஆனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை காண முடிகிறது. பலர் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்துள்ளனர். பலர் தங்கள் உயிரையே இழந்துள்ளனர். இதற்கு எல்லாம் முக்கியமான காரணம் வேகமாக வாகனம் ஓட்டியது தான் என கூறப்படுகிறது.

இப்போது மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என விதிமுறை இருக்கிறது. பெரும்பாலான எக்ஸ்பிரஸ் சாலைகளில் 180 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கலாம் என விதிமுறை இருந்தாலும், இந்த குறிப்பிட்ட மும்பை புனை எக்ஸ்பிரஸ் சாலையில் வேகம் 100 கிலோமீட்டர் தான் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த சாலை கட்டமைக்கப்பட்டுள்ள பகுதி தான்.

இந்த சாலை பல அபாயகரமான வளைவுகள் நிறைந்த சாலையாக இருப்பதால், இந்த சாலையில் பயணிப்பது என்பது சற்று சிரமமான விஷயம் இதனால் அதிக வேகமாக பயணிக்கும் போது இது சாலையில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா இந் சாலையில் சுமார் 200 கி.மீக்கு மேலான வேகத்தில் பயணித்தது என்பது சட்டப்படி குற்றமான விஷயமாகும். அதற்காக தான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் என்பது வாகனங்கள் வேகமாக பயணிப்பதற்காக கட்டப்பட்ட சாலைகள் தான். இருந்தாலும், ஒவ்வொரு சாலைக்கும் வேக கட்டுப்பாடு என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதை எக்காரணத்தைக் கொண்டும் மீறக் கூடாது. மீறினால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் நீங்கள் பயணிக்கும் போதும் அதிக வேகமாக பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 19, 2023, 12:22 [IST]
English summary
Rohit sharma received traffic citations for exceeding the speed limit in mumbai pune express way
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+