அண்ணன் என்ன தம்பி என்ன இந்த அவசரமான உலகத்திலே!! காரில் கீறல் போட்டதுக்கு தனியா அழைத்து போய் பேசி இருக்கலாம்!

ரோகித் சர்மா (Rohit Sharma), இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்பதை நான் சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை புரிந்துள்ள ரோகித் சர்மா, ஓர் கார் பிரியர் ஆவார். லம்போர்கினி (Lamborghini), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW), ரேஞ்ச் ரோவர் (Range Rover) போன்ற பிரபலமான லக்சரி கார் கம்பெனிகளின் விலையுயர்ந்த கார்களை ரோகித் சர்மா வைத்துள்ளார். அதிலிலும் குறிப்பாக, இவரிடம் உள்ள லம்போர்கினி உருஸ் கார் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது ஆகும்.

லம்போர்கினி உருஸ் கார்களின் சிறப்பம்சமே அவற்றின் மஞ்சள் நிற பெயிண்ட் ஆகும். ஆனால், ரோகித் சர்மா லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை நீல நிறத்தில் வைத்துள்ளார். இதனாலேயே, நீல நிறத்தில் உருஸ் கார் எதாவது மும்பை சாலைகளில் தென்பட்டாலே ரோகித் சர்மாவின் கார் என ரசிகர்கள் குழம்பி போகும் அளவிற்கு இவரது லம்போர்கினி கார் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது ஆகும்.

cricketer rohit sharma scolded brother

2023ஆம் ஆண்டில் வாங்கிய இந்த லம்போர்கினி காரை தான் ட்ரீம் 11 போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்படி, ரோகித் சர்மா பரிசாக வழங்கினார். சுமார் ரூ.4 கோடி அளவிற்கு விலை கொண்ட இந்த காரை பரிசாக வழங்கியுள்ள ரோகித் சர்மா, அதேநேரம் தனது விலை குறைவான & பட்ஜெட் விலையிலான காரை சேதப்படுத்தியதற்காக தனது சகோதரர் விஷால் சர்மா (Vishal Sharma)-ஐ கடிந்துக் கொண்டுள்ளார்.

நீல நிறத்திலான லம்போர்கினி உருஸ் காரை ரசிகருக்கு வழங்கிவிட்டாலும், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் (S-Class), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (GLS), பிஎம்டபிள்யூ எம்5 (M5) மற்றும் ரேஞ்ச் ரோவர் எச்.எஸ்.இ லாங்-வீல்பேஸ் (HSE LWB) உள்ளிட்ட சொகுசு கார்களையும் வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் குடும்பத்தாரிடம் குறைந்த விலையிலான ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) என்கிற செடான் (Sedan) ரக காரும் உள்ளது.

cricketer rohit sharma scolded brother

விர்டுஸ் காரின் விலைமிக்க ஜிடி (GT) வேரியண்ட்டை டார்க் கிரே நிறத்தில் ரோகித் சர்மா வைத்துள்ளார். இந்த ஃபோஸ்வேகன் காரின் பின்பக்கத்தில் காரின் அழகை கெடுக்கும் விதமாக சில உராய்வுகள் இருப்பதை கண்டதும் ரோகித் சர்மாவுக்கு உடனடியாக கோபம் வந்துவிட்டது. பின்னர் இதற்கு காரணம் யார் என்று சகோதரர் விஷால் சர்மாவிடம் ரோகித் சர்மா கேட்க, தன்னால் தான் இவ்வாறு நடந்தது என விஷால் சர்மா கூறியதும் ரோகித் சர்மா இன்னும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

காரின் சேதங்களை காண்பித்து சகோதரரை பொது வெளியில் ரோகித் சர்மா திட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், பொது வெளி என்பதால் சகோதரர் மீது பெரியதாக எந்த கோபத்தையும் காட்டாமல் கட்டுப்படுத்தி கொண்டார். இந்த நிகழ்வில் காட்டப்பட்டுள்ள விர்டுஸ் ஜிடி கார் ஆனது சகோதரர்கள் இருவரில் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், முன்பு இந்தியாவில் விற்பனையில் இருந்த ஃபோக்ஸ்வேகன் வெண்டோ (Vento) காருக்கு பதிலாக விர்டுஸ் கடந்த 2022 ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் விர்டுஸ் கார் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டது.

ரூ.11.21 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட விர்டுஸ் கார்கள், கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனையில் 50 ஆயிரம் என்கிற இமாலய மைல்கல்லை கடந்தது. விர்டுஸ் ஜிடி கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.08 லட்சத்தில் இருந்து ரூ.19.40 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த சொகுசு கார்கள் பல இருந்தாலும், விலை குறைவான கார் ஒன்றை சேதப்படுத்தியதற்காக இந்த அளவிற்கு கொந்தளிப்பது கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் பொறுப்புணர்ச்சியை காட்டுகிறது. இருப்பினும், பொது வெளியில் இந்த அளவிற்கு கூட சகோதரரிடம் ரோகித் சர்மா கோபம் காட்டாமல் இருந்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 24, 2025, 20:13 [IST]
English summary
Rohit sharma scolded his brother vishal sharma after spotted scratch on volkswagen virtus
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+