காரை வழிமறித்த ரசிகரிடம் ரோகித் சர்மா செய்த காரியம்!! வாழ்நாள் பலனை அடைஞ்சிட்டாரு!
ரோகித் சர்மா (Rohit Sharma), இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி, ரோகித் சர்மா ஓர் சிறந்த மனிதாபிமானம் உள்ள மனிதர் என்று சொல்லலாம். இதற்கு சான்றாக, சமீபத்தில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) காரில் சென்றுக் கொண்டிருந்த போது ரசிகர் இடைமறித்து கேட்ட ஆட்டோகிராபை ரோகித் சர்மா வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு குறித்தும், ரோகித் சர்மா பயணித்த இன்னோவா ஹைகிராஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரசிகர்களினால் தான் எந்தவொரு சினிமா நட்சத்திரமும் சரி, கிரிக்கெட் வீரரும் சரி பிரபலமாகி உள்ளனர். ரசிகர்கள் இல்லையென்றால் எவரொருவருக்கும் வேலை இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், ரசிகர்களை எல்லா சினிமா ஸ்டார்களும், கிரிக்கெட் பிரபலங்களும் மதிப்பதில்லை. இதற்காக அவர்களையும் நம்மால் குறை சொல்ல முடியாது; அந்த அளவிற்கு அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

சிலர் மட்டுமே அவர்களது ரசிகர்களை எப்போதும் ஞாபகம் வைத்து அவர்களுக்கான மரியாதையை வழங்குகின்றனர். இதன் காரணமாகவே, அத்தகைய சிலர் மட்டுமே மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகின்றனர். அத்தகைய பிரபலங்களுள் ஒருவர்தான் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆவார். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் ரசிகர் ஒருவர் தன்னை தேடி ஓடி வருவதை அறிந்து சென்றுக் கொண்டிருந்த காரை நிறுத்தி அவருக்கு ஆட்டோகிராப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், வெள்ளை நிறத்திலான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் ரோகித் சர்மா செல்வதையும், அவர் செல்லும் காரை துரத்திக் கொண்டே பின்னால் ஒரு ரசிகர் ஓடுவதையும் காணலாம். இந்திய தேசிய கொடியின் நிறத்தில் உடல் முழுவதும் கலர் செய்துக் கொண்டுள்ள இந்த ரசிகர் குறிப்பாக ரோகித் சர்மாவின் தீவிரமான ரசிகர் ஆவார்.

அதன் வெளிப்பாடாகவே முதுகில் '45' என்கிற ரோகித் சர்மாவின் ஜெர்சி நம்பரை வரைந்துள்ளதை பார்க்க முடிகிறது. டொயோட்டா இன்னோவா காரில் ரோகித் சர்மா மட்டுமின்றி, டிரைவர் உள்பட இன்னும் சிலர் அமர்ந்திருப்பதை பார்க்கலாம். வீடியோவில், ஒரு வளாகத்திற்குள் இருந்து வெளியே வரும் ரோகித் சர்மா செல்லும் இன்னோவா காரை அந்த ரசிகர் துரத்தியப்படி செல்கிறார்.
இதற்கேற்ப ரோகித் சர்மா காரினுள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்து உள்ளார். ரசிகர் ஓடிவருவதினாலேயே அவர்கள் சென்ற இன்னோவா காரை மெதுவாக ஓட்டியப்படி சென்றனர். ரசிகர் விடாப்பிடியாக இருந்தாலும், வளாகத்திற்குள் இருந்து வெளியே வந்ததும் காரை நிறுத்தி ரோகித் சர்மா தனது ஆட்டோகிராபை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும், அந்த ரசிகர் உடன் வந்தவர் வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர் தன்னுடன் எடுத்துவந்த பேப்பரை நீட்டி ரோகித் சர்மாவிடம் ஆட்டோகிராபை பெற்றுக் கொண்டுள்ளார். மேலும், ரோகித் சர்மா உடன் இணைந்து இவர்கள் சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். ரோகித் சர்மா இவ்வாறு ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல. சில தினங்களுக்கு முன்பு கூட ரோகித் சர்மா தனது விலையுயர்ந்த லம்போர்கினி உருஸ் காரில் மும்பையில் சென்றுக் கொண்டிருந்த போது ரசிகை உடன் கைகுலுக்கி தனது அன்பை பரிமாறி கொண்டார்.
மும்பையில் டிராஃபிக்கில் தனது லம்போர்கினி காரில் நின்றுக் கொண்டிருந்த போது ரசிகை ஒருவர் அடையாளம் கண்டதை அடுத்து அவருக்காக காரின் ஜன்னல் கண்ணாடியை திறந்து ரோகித் சர்மா அவருடன் பேசினார். அப்போது அந்த ரசிகை தனக்கு இன்று பிறந்தநாள் என கூறியவுடன் அவருடன் ரோகித் சர்மா கைகுலுக்கி கொண்டார். ரோகித் சர்மாவிடம் லம்போர்கினி உருஸ் கார் பளிச்சிடும் நீல நிறத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுதான், கிரிக்கெட் வீரர்களிலும் நிறைய பேர் இவ்வாறு ரசிகருக்காக தாங்கள் செல்லும் காரை நிறுத்துவதில்லை. இந்த விஷயத்தில் ரோகித் சர்மா உண்மையாலுமே சிறந்த தலைவன் தான். இணையத்திலும் அவரது இந்த செயலை பலரும் பாராட்டுவதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications








