உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

சமீபத்தில் ஆர்டிஓ-வால் பறிமுதல் செய்யப்பட்ட நடிகர் அமிதாப்பச்சன் பயன்படுத்திய ரோல்ஸ்ராய்ஸ் காரின் தற்போதைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்தரப்பட்டோர் இடையே விமர்சனங்களை பெற்றுவரும் இந்த அபராதத் தொகை குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

சமீபத்தில் நமது செய்திதளத்தில் நடிகர் அமிதாப்பச்சன் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 17 சொகுசு கார்கள் பெங்களூரில் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தோம். வேற்று மாநிலத்தின் பதிவெண் உடன் பயன்படுத்தப்பட்டு வருவது உள்பட ஏகப்பட்ட காரணங்களுக்காக இந்த லக்சரி கார்களை சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் (RTO) கைப்பற்றியுள்ளனர்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

ஆடி ஆர்8, ஜாகுவார் எக்ஸ்.ஜே எல் மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக், போர்ஷே, ஃபெராரி உள்ளிட்டவை அடங்கும் இந்த சொகுசு கார்கள் அனைத்தும் பெங்களூரில் யெலஹங்கா ஆர்டிஓ அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் நியூஸாக, இதில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆர்டிஓ-விடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

இதனுடன் கைப்பற்றப்பட்ட மற்ற கார்களும் விடுவிக்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. ரோல்ஸ் ராய்ஸ் காரின் தற்போதைய உரிமையாளருக்கு ரூ.5,500 அபராதமாக விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றின் விலை பல கோடிகளில் உள்ளது. அதனை செகண்ட் ஹேண்டில் வாங்கி இருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதால், நிச்சயம் கோடியில் தான் விலையினை நிர்ணயித்து இருப்பர்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

அவ்வளவு விலையினை கொடுத்து ஒருவர் வாங்கியுள்ளார் என்றால், அவருக்கு இந்த ரூ.5,500 எல்லாம் பெரிய தொகையாகவே இருக்காது என்று தான் நினைக்கிறேன். முன்பு அமிதாப்பச்சன் பயன்படுத்திய இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் தற்போதைய உரிமையாளரிடம் மாசு உமிழ்வு சான்றிதழ் மற்றும் இன்ஸ்சூரன்ஸ் உள்பட கார் உரிமை குறித்த சில ஆவணங்கள் இல்லாததினால் ஆர்டிஓ-வால் பறிமுதல் செய்யப்பட்டது.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இது ரோல்ஸ் ராய்ஸின் பாண்டோம் மாடலாகும். MH 02 BB 2 என்ற அமிதாப்பச்சன் பயன்படுத்திய அதே ஃபான்சி பதிவெண் உடன் தான் இந்த காரை பறிமுதல் செய்யப்படும் வரையில் புதிய உரிமையாளர் பயன்படுத்தி வந்துள்ளார். சல்மான் கான் என்ற பெயர் கொண்ட புதிய உரிமையாளர் ட்ரைவிங்கின் போது ஆர்டிஓ-வால் நிறுத்தப்பட்டு, போதுமான ஆவணங்களை சமர்பிப்பதில் தவறியுள்ளார்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

அதுமட்டுமின்றி ஏற்கனவே கூறியதுபோல், இந்த பாண்டோம் கார் இன்ஸ்சூரன்ஸ் செய்யப்படாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக விதிக்கப்பட்ட ரூ.5,500 அபராதத் தொகையில் ரூ.3,000 மாசு சான்றிதழ் வைத்தில்லாததற்கும், ரூ.2,000 இன்ஸ்சூரன்ஸ் கவர் செய்யாததற்கும், மீதி ரூ.500 நீண்ட நாட்களாக இயங்கும் மாநிலத்தின் பதிவெண்ணை கொண்டில்லாததற்கும் ஆகும்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அதிகாரிகள், எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த கார்களை கைப்பற்றினோம். ஆனால் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவற்றை விடுவித்தோம். உண்மையில் நாங்கள் இந்த விஷயத்தில் விரக்தியடைந்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும்.

இடம்பெயர்ந்த நாளில் இருந்து 11 மாதங்களுக்கு அப்பால் மற்றொரு மாநில பதிவு எண்ணுடன் ஒரு வாகனம் இயங்க அனுமதி இல்லை என கூறியுள்ளனர். நாங்கள் எங்கள் கடமையை செய்தோம். உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்பிக்க தவறியதால் நாங்கள் கார்களை பறிமுதல் செய்தோம். கார்கள் விடுவிக்கப்பட்டது குறித்து தன்னிடம் பதில் இல்லை என பெங்களூர் கூடுதல் போக்குவரத்து ஆணையர் நரேந்திர ஹோல்கர் தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

பறிமுதல் செய்யப்பட்ட 17 சொகுசு கார்களில் அமிதாப்பச்சனின் முன்னாள் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு தான் வெறும் ரூ.5,500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதே தவிர்த்து, இதில் சில கார் உரிமையாளர்களுக்கு லட்ச கணக்கில் அபாரதங்கள் அவர்களது அலட்சியத்திற்கு ஏற்ப விதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ஒரு உரிமையாளருக்கு அதிகப்பட்சமாக ரூ.30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக இதுகுறித்து வெளியாகி வரும் செய்திகள் கூறுகின்றன.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரை 2007ல் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிய எக்லாவ்யா என்ற திரைப்படத்திற்காக அதன் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா பரிசாக வழங்கினார். அதன்பின் 2019ல் இந்த காரை எந்தவொரு கஸ்டமைஸ்ட்டும் செய்யாமல் யூசூப் ஷரிஃப் என்பவருக்கு ரூ.3.5 கோடிக்கு அமிதாப்பச்சன் விற்றார்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம்!! வெறும் ரூ.5,500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட, ரோல்ஸ் ராய்ஸ்

இந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரை விற்றாலும், தற்போதும் ஏகப்பட்ட லக்சரி கார்களுக்கு உரிமையாளராக அமிதாப்பச்சன் விளங்குகிறார். இவரிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ், டொயோட்டா காம்ரி, மினி கூப்பர், ஆடி ஏ8 எல், பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி, மெர்சிடிஸ்-பென்ஸ் வி-க்ளாஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் தற்சமயம் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rolls-Royce Car Which Registered In Amitabh Bachchan Name Released By RTO.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X