சாதாரண ஆள் இல்லப்பு! இவங்கதான் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார வாங்கன முதல் இந்தியரா! அம்பானி மனைவி, மகளே அப்புறம்தான்!

ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதற்கு இந்தியாவின் பிரபலமான பெண்களும் விதிவிலக்கு அல்ல. இந்த செய்தியில் இந்தியாவின் பிரபலமான பெண் ரோல்ஸ் ராய்ஸ் கார் உரிமையாளர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

மன்யாட்டா தத் (Manyata Dutt): இவர் பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் (Sanjay Dutt) மனைவி ஆவார். இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) கார் இருக்கிறது. இது மன்யாட்டா தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சஞ்சய் தத்தால் பரிசாக வழங்கப்பட்டது ஆகும்.

Manyata Dutt With Rolls Royce Ghost

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில், 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி12 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 562 பிஹெச்பி பவர் மற்றும் 780 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் ஆரம்ப விலையே (Price) 6.95 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.95 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Isha Ambanis Rolls Royce Cullinan

இஷா அம்பானி (Isha Ambani): அம்பானி என்ற பெயர் இல்லாமல் இந்த செய்தியை நிச்சயமாக நிறைவு செய்ய முடியாது. தொழில் அதிபர் (Businessman) முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகள் இஷா அம்பானியிடம், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் இருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் பொருத்தப்பட்டிருப்பது 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 563 பிஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை 6.95 கோடி ரூபாய் ஆகும்.

இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் (Variant) மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்தான்.

நீடா அம்பானி (Nita Ambani): அம்பானி குடும்பத்தில் நிறைய பேர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானியிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Black Badge) எடிசன் இருக்கிறது. இது முகேஷ் அம்பானியால் நீடா அம்பானிக்கு பரிசாக வழங்கப்பட்டது ஆகும்.

Abhini Sohan Roy With Rolls Royce Cullinan

அபினி சோஹன் ராய் (Abhini Sohan Roy): இவர் துபாயை (Dubai) சேர்ந்த இந்திய தொழில் அதிபர் சோஹன் ராயின் மனைவி ஆவார். இவரிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்தான் உள்ளது. ஆனால் அம்பானி குடும்பத்தை காட்டிலும் இவருக்கு ஒரு பெருமை உண்டு. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தான்! இது கணவர் சோஹன் ராயால், அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்கள் சமீப காலமாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுவதை இந்த பட்டியலின் மூலம் நம்மால் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் தவிர நடிகர்கள், தொழில் அதிபர்கள் பலரும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வைத்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 3, 2023, 17:18 [IST]
English summary
Rolls royce cars owned by indian women nita isha ambani manyata dutt
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X