யாருக்கு கொடுத்து வெச்சியிருக்கோ... கண்ணை கவரும் மஞ்சள் நிறத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்! படங்கள் இணையத்தில் வைரல்
இப்படியொரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை பார்த்தே இருக்க மாட்டீர்கள் என்பதுபோல் கண்ணை கவரக்கூடிய மஞ்சள் நிறத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் ஒன்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. நம்ம நாட்டு சாலைகளில் இப்படியொரு காரை கண்டதே கிடையாது என்கிற அளவிற்கு இருக்கும் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்திற்கு அறிமுகமே தேவையிருக்காது என நினைக்கிறேன். நிச்சயம் நம்மில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் கார் கனவு வாகனமாக இருக்கும். அதேநேரம் வாங்கும் காரை வாடிக்கையாளர் தனது விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளும் வசதியையும் ரோல்ஸ்-ராய்ஸ் வழங்குகிறது.

அதாவது, காரின் பெயிண்ட்டில் இருந்து உள்ளே இருக்கைக்கு தையல் வரையில் கூட காரை வாங்குபவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப அலங்கரித்து கொள்ள முடியும். 10 கோடி ரூபாய்க்கு ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்குபவர்கள் ரூ.1- 2 கோடிக்கு காரை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்கின்றனர். இதனாலேயே ஒரே மாதிரியான ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை பார்ப்பது அரிது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிகின்றனர்.
சிலரது கஸ்டமைஸ் விருப்பங்கள் மற்றவர்களையும் கவர்வது மட்டுமின்றி, இணையத்தில் வைரலாகியும் உள்ளன. அந்த அளவிற்கு, உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி சாலையில் இயங்கும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கூட வெறித்து பார்க்கக்கூடிய ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். 'கார் கிரேஸி இந்தியா' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் குறித்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கண்ணை கவரக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் மும்பையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேட் என்ற சற்று சொரசொரப்பான ஷேடில் வழங்கப்பட்டுள்ள இந்த மஞ்சள் நிற பெயிண்ட்டிற்கு ஏற்ப காரின் முன்பக்க க்ரில், சைடு விண்டோ சரவுண்ட்ஸ், ரியர் ஸ்பாய்லர் கார்னர்கள் மற்றும் பதிவெண் தகடுவிற்கு இருப்பக்கங்களில் பளபளப்பான கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கண்ணை பறிக்கக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரில் அந்த கருப்பு நிற பாகங்கள் மட்டும் தனித்து தெரிகின்றன. கதவு கைப்பிடிகள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டவைகளாக உள்ளன. அலாய் சக்கரங்களில் எந்த மாற்றமும் இல்லை. உட்பக்கத்தில் மஞ்சள் - வெள்ளை நிறங்களில் கேபின் உள்ளது. நமக்கு கிடைத்துள்ள படங்கள் காரின் பெயிண்ட்டை மட்டுமே ஹைலைட்டாக காட்டுப்பவையாக உள்ளன. ஆனால், காரின் தொழிற்நுட்ப அம்சங்களிலும் சில மாற்றங்களை ஓனர் செய்திருப்பார்.

Image Courtesy: Car Crazy India/Instagarm
காரின் நிறத்தை மாற்றுவது கூட ஓர் குற்றத்தை மறைக்கக்கூடும். இதனாலேயே கார்களின் நிறத்தை மாற்றுவதை போலீஸார் தடை செய்கின்றனர். ஆனால் தற்காலிகமாக மறைக்கக்கூடிய வ்ராப்-ஐ ஒட்டி கொள்ளலாம். அவ்வாறான மஞ்சள் நிற பெயிண்ட் வ்ராப் தான் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரில் ஒட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கஸ்டமைஸ் வேலைப்பாடுகள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் டீலர்ஷிப் மையத்தின்கீழ் நடந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பெரும்பாலும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் (குறிப்பாக கல்லீனன்) வெள்ளை, கிரே, கருப்பு போன்ற அடர் நிறங்களையே வாங்கப்படுவது வழக்கம். சிவப்பு, பச்சை அல்லது மஞ்சள் போன்ற பளிச்சிடும் நிறங்களில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை அவ்வளவாக பார்க்க முடியாது. இதனாலேயே, மஞ்சள் நிறத்தில் ஓர் கல்லீனன் காரை பார்த்துவுடன் நம்மை அறியாமலேயே அதன் அழகில் விழுந்துள்ளோம்.


Click it and Unblock the Notifications









