இவர்கிட்ட அப்படி எவ்வளவு காசு இருக்குனு தெரியலயே... புதிய காரை பற்றி தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls Royce) கார்களையும் இந்திய பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியையும் பிரிக்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் ஏகப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. குறிப்பாக, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) கார்கள் மட்டும் முகேஷ் அம்பானியிடம் 9 கார்கள் உள்ளன. இந்த நிலையில், 10வது கல்லீனன் காரை முகேஷ் அம்பானி குடும்பம் புதியதாக வாங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மும்பை சாலையில் முகேஷ் அம்பானியின் புதிய ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி, உலகின் மிக பெரும் தொழிலதிபராக விளங்கும் முகேஷ் அம்பானி விலையுயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதில் ஆர்வமிக்கவர் என்பது உலகமறிந்த விஷயம். இதற்கு சாட்சியாக, மும்பையில் கம்பீரமாக அவரது வீடும், அதனுள் நூற்றுக்கணக்கான கார்களும் நிற்கின்றன. சாதாரணமாக, பாதுகாவலர்களுக்கு கூட விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் கார்களை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர்.

10th cullinan owned by ambani

அப்படியிருக்கையில், தங்களது சொந்த பயன்பாட்டிற்காக எத்தகைய சொகுசு கார்களை அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்துவார்கள் என்பதை யோசித்து பாருங்கள். ஏற்கனவே கூறியதுபோல், அம்பானி குடும்பத்தில் ஏற்கனவே 9 கல்லீனன் கார்கள் இருந்தன. இந்த நிலையில் தற்போது 10வது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை முகேஷ் அம்பானி குடும்பம் வாங்கியுள்ளது.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், முகேஷ் அம்பானியின் புதிய கல்லீனன் காருக்கு முன்னாலும், பின்னாலும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் உள்பட பாதுகாப்பு வாகனங்கள் செல்வதை காணலாம். வழக்கமாக, கல்லீனன் காரின் பிளாக் பேட்ஜ் வெர்சனை தான் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் வாங்குவது வழக்கம்.

10th cullinan owned by ambani

ஆனால், இந்த புதிய கல்லீனன் கார் ஆனது பிளாக் பேட்ஜ் வெர்சன் கிடையாது. இது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரின் லேட்டஸ்ட் சீரிஸ்-2 மாடல் ஆகும். இந்த கார் இந்தியாவில் கடந்த மே மாதத்தில் தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள் முகேஷ் அம்பானி இந்த காரை புக் செய்து, டெலிவிரியும் பெற்றுள்ளார்.

முன்னதாக, தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது அடுத்த விலையுயர்ந்த காரை எலக்ட்ரிக் காராக வாங்குவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துவந்த நிலையில், அவற்றை நிராகரிக்கும் விதமாக மீண்டும் ஒரு கல்லீனன் காரை வாங்கியுள்ளார். இந்த புதிய காரின் நம்பர் பிளேட்டில் 'MH 01 EV 1' என குறிப்பிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் காரை தான் வாங்கவில்லை; குறைந்தது இவி பெயரை ஆவது நம்பர் பிளேட்டில் வைப்போம் என முகேஷ் அம்பானி வைத்துள்ளார் போல...

10th cullinan owned by ambani

இவரது 10வது கல்லீனன் கார் வெள்ளை நிறத்தில் கண்ணை கவரக்கூடியதாக காட்சியளிக்கிறது. கடைசியாக, 9வது கல்லீனன் காரை இந்த 2024ஆம் ஆண்டு துவக்கத்தில் முகேஷ் அம்பானி வாங்கியிருந்தார். அது, பெப்பீள் பாரடிசோ என்கிற நிறத்திலான கல்லீனன் பிளாக் பேட்ஜ் கார் ஆகும். கல்லீனன் கார்களை புதியதாக வாங்குவது மட்டுமின்றி, அவற்றின் நிறங்களையும் அவ்வப்போது மாற்றுவதை முகேஷ் அம்பானியின் குடும்பம் வாடிக்கையாக கொண்டுள்ளது.

அந்த வகையில், சில வருடங்களுக்கு முன் கல்லீனன் கார் ஒன்று சுமார் ரூ.1 கோடி செலவில் புதியதாக பெயிண்ட் செய்யப்பட்டு இருந்தது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் உள்ள 10 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்களில் அனைத்தும் இந்தியாவில் இல்லை. சில கார்கள் துபாய் போன்ற வெளிநாடுகளில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி துபாயில் கல்லீனன் காரில் காட்சி தந்திருந்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி காராக 6 வருடங்களுக்கு முன்னர் கல்லீனன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து வருடத்திற்கு குறைந்தது ஒரு கல்லீனன் காரை ஆவது முகேஷ் அம்பானியின் குடும்பம் தொடர்ந்து வாங்கி கொண்டிருக்கிறது. கல்லீனன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.8- 9 கோடி இருக்கும். இருப்பினும், முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு இது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2024, 23:20 [IST]
English summary
Rolls royce cullinan series 2 owned by mukesh ambani spotted check video here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X