பாரம்பரியத்த மறக்கல! 14 கோடி ரூபா காருக்கு தேங்கா, பழம் வெச்சு பூஜை போட்ட ஓனர்! கடைசில ஐயர் செஞ்சதுதான் ஹைலைட்

இந்தியாவில் புதிய வாகனங்களை வாங்கினால், கோயில்களில் அவற்றுக்கு பூஜைகளை நடத்துவது வழக்கம். கோயில் வாசல்களில் பூஜைக்காக ஏராளமான புதிய வாகனங்கள் நிற்பதை நாம் அடிக்கடி காண முடியும். இன்னும் ஒரு சிலர் ஐயர்களை வீடுகளுக்கே வரவழைத்து புதிய வாகனங்களுக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த வரிசையில் புதிய கார் ஒன்றுக்கு, அதன் உரிமையாளருக்கு டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய், பழம் எல்லாம் வைத்து பூஜை மேற்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

புதிய வாகனங்களுக்கு பூஜை செய்வதெல்லாம் வழக்கமான ஒரு விஷயம்தான். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? என நீங்கள் நினைப்பது புரிகிறது. இதில் ஆச்சரியம் இருக்கவே செய்கிறது. அதனால்தான் இந்த பூஜை நிகழ்வு செய்தியாக மாறியுள்ளது. தற்போது வைரலாக பரவி வரும் புகைப்படங்களில் நாம் பார்ப்பது சாதாரண கார் அல்ல.

Rolls Royce Cullinan Series II Vahan Pooja

அது மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II (Rolls Royce Cullinan Series II) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 10.50 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் பிளாக் பேட்ஜ் (Black Badge) வெர்ஷனின் விலையோ 12.25 கோடி ரூபாயாக இருக்கிறது.

இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) முறையே 13.50 கோடி ரூபாய் மற்றும் 15.25 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். ஆனால் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் புகைப்படங்களில் நாம் பார்ப்பது வழக்கமான வெர்ஷனா? அல்லது பிளாக் பேட்ஜ் வெர்ஷனா? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.

Rolls Royce Cullinan Series II

எனினும் இதை வழக்கமான வெர்ஷன் என வைத்து கொண்டாலே, ஆன்-ரோடு விலை 13.50 கோடி ரூபாய் வருகிறது. இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காருக்கு ஹிந்து பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டுள்ள காரணத்தால்தான், இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, செய்தியாக மாறியுள்ளது.

இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியது யார்? என்பதும் சரியாக தெரியவில்லை. இருப்பினும் பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த ஒருவர்தான் இந்த காரை வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. சமூக வலை தளங்களில் நாம் காணும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II கார் ஆர்டிக் ஒயிட் (Arctic White) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனும் கூட வெள்ளை உள்பட பல்வேறு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II மற்றும் அதன் பிளாக் பேட்ஜ் ஆகிய 2 வெர்ஷன்களிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

அது 6.75 லிட்டர் வி12 ட்வின் டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆகும். வழக்கமான வெர்ஷனில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 571 ஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 600 ஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுவாக புதிய வாகனங்களுக்கு பூஜை செய்து முடித்தவுடன் ஐயர்கள் புறப்பட்டு விடுவார்கள். புகைப்படம் எல்லாம் எடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II காருக்கு பூஜை செய்து முடித்தவுடன், அந்த காரை ஐயர் போட்டோ எடுத்துள்ளார்.

இதன் மூலம் அவரும் ஒரு கார் ஆர்வலராக இருக்கலாம் என கருதப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த காரை வாங்கியிருப்பது யார்? என தெரியவில்லை. எனினும் பெங்களூர் நகரை சேர்ந்த தொழில் அதிபர்கள் அல்லது திரையுலக நட்சத்திரங்கள் யாராவது ஒருவர் இந்த காரை வாங்கியிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 24, 2025, 16:38 [IST]
English summary
Rolls royce cullinan series ii vahan pooja viral pics full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+