இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை பார்த்து எல்லாரும் வாயடைத்து போயிட்டாங்க!! காரின் சக்கரத்தில் தான் மேட்டரே இருக்கு!

இந்தியாவின் முதல் தங்க நிற சக்கரங்களை கொண்ட ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் எஸ்யூவி (Rolls-royce Cullinan SUV) கார் டெல்லியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் இப்போது அடைந்திருக்கும் உயரத்துக்கு முக்கிய காரணம், அது வழங்கும் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள பல்வேறு விதமான ஆப்ஷன்களை ரோல்ஸ்-ராய்ஸ் வழங்குகிறது. இதனாலேயே, பல ஆண்டுகள் கடந்த போதிலும், ரோல்ஸ்-ராய்ஸ் கார் மீதான ஈர்ப்பு அப்படியே உள்ளது.

cullinan with golden clor wheels

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு கல்லீனன் என்ற லக்சரி எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லக்சரி எஸ்யூவி காரை இந்தியாவில் செல்வந்தர்கள் பல பேர் வாங்கி உள்ளனர். குறிப்பாக, அம்பானி குடும்பத்தாரிடம் மட்டும் 4 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் உள்ளன.

இந்த நிலையில் இவர்கள் எல்லாரை விடவும் புதுமையாக, டெல்லியில் ஒரு டீலர்ஷிப் மையத்தில் இருந்து தங்க நிறத்தில் சக்கரங்களை கொண்ட ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை கஸ்டமர் ஒருவர் பெற்றுள்ளார். கஸ்டமருக்கு டெலிவிரி செய்வதற்காக ஷோரூமில் இருந்து, கோல்டன் கலர் சக்கரம் பொருத்தப்பட்ட அந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை வெளியே கொண்டுவரும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு உள்ளது.

டெல்லியில் ரோல்ஸ்-ராய்ஸ் ஷோரூம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள இந்த வீடியோவில், ஷோரூமின் படிக்கட்டுகளில் இருந்து கார் கம்பீரமாக கொண்டுவரப்படுவதை காணலாம். இந்தியாவில், இவ்வாறான பிரத்யேகமான தங்க நிறத்திலான சக்கரங்களை கொண்ட கல்லீனன் காரை பார்ப்பது இதுவே முதல்முறை. இந்த சக்கரங்களில் உண்மையான தங்கமும் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்த கோல்டன் கலர் சக்கரங்கள் மட்டுமின்றி, இந்த குறிப்பிட்ட கல்லீனன் காரின் உட்பக்க கேபின் ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மற்றப்படி, இந்த கஸ்டமைஸ்சேஷன் ரோல்ஸ்-ராய்ஸ் காரை பற்றிய இதர விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. அதாவது, இந்த கோல்டன் வீல் கல்லீனன் காரை வாங்கியுள்ள வாடிக்கையாளர் யார்? இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர் அவர்? என்ற விபரங்கள் இல்லை.

cullinan with golden clor wheels

இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.6.95 கோடியாக உள்ளது. கல்லீனனில் 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் என்ஜினை ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் வழங்குகிறது. அதிகப்பட்சமாக 571 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த எஸ்யூவி கார் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் ஆகும். கடைசியாக மேம்படுத்தப்பட்ட கல்லீனன் 2018இல் அறிமுகம் செய்யப்பட்டது. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் ஸ்பெக்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை சென்னையில் ஒரு கஸ்டமர் வாங்கியதை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.

cullinan with golden clor wheels

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோல்டன் நிற சக்கரங்கள் நிச்சயமாக எவரொருவரது கவனத்தையும் ஈர்க்கும். அதிலிலும், ரோல்ஸ்-ராய்ஸ் போன்ற விலையுயர்ந்த காரில் வழங்கப்பட்டு இருப்பது, காருக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது. இப்போதுதான் வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்யப்பட்டு உள்ளதால், இந்த குறிப்பிட்ட கல்லீனன் கார் குறித்த படங்களும், வீடியோக்களும் அடுத்தடுத்து இணையத்தில் வெளியாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 19:17 [IST]
English summary
Rolls royce cullinan suv with golden color wheels check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X