ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு உண்டான மரியாதையே போச்சு! மானத்தை வாங்கி விட்ட உரிமையாளர்! இனி ஒரு பய மதிக்க மாட்டான்!
இந்திய சாலைகளில் இன்றளவும் கூட ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களை பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயம்தான். சென்னை (Chennai), பெங்களூர் (Bangalore), ஐதராபாத் (Hyderabad) மற்றும் மும்பை (Mumbai) உள்ளிட்ட பெரு நகரங்களில் வேண்டுமானால், ஒரு சில ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பார்க்க முடியும். ஆனால் அதுவும் கூட மிகவும் அரிதான ஒரு விஷயம்தான். ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை பல கோடி ரூபாய் வரும் என்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சாலையிலேயே பார்க்க முடியாத சூழல் உள்ளபோது, சாதாரண லோக்கல் மெக்கானிக் ஷாப்களில் எல்லாம் அவற்றை பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அதிக விலை கொடுத்து வாங்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, அதன் உரிமையாளர்கள், அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே சர்வீஸ் செய்வார்கள்.

ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் I (Rolls Royce Ghost Series I) காரின் உரிமையாளர் ஒருவர், லோக்கல் மெக்கானிக் ஷாப்பிற்கு வந்துள்ளார். ஆம், இது உண்மைதான். லோக்கல் மெக்கானிக் ஷாப்பில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் I கார் பழுது பார்க்கப்படும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
ஏர் சஸ்பென்ஸன் (Air Suspension) அமைப்பில் பிரச்னை ஏற்பட்டதால், அதை சரி செய்வதற்காகவே லோக்கல் மெக்கானிக் ஷாப்பிற்கு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் I கார் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் டீலர்ஷிப்பில் இந்த பிரச்னையை சரி செய்ய சுமார் 5-10 லட்ச ரூபாய் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் லோக்கல் மெக்கானிக் ஷாப்பில், இதை விட பல மடங்கு குறைவான செலவில் இந்த பிரச்னையை சரி செய்து விட முடியும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் I கார், லோக்கல் மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் தற்போதெல்லாம் யூஸ்டு கார் மார்க்கெட்டில் சொகுசு கார்கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கின்றன. ஷோரூமில் இருந்து வாங்கப்படும் புத்தம் புதிய காருடன் ஒப்பிடும்போது, அதே காரை சுமார் 40 சதவீதம் குறைவான விலையில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்க முடியும்.
இதன் காரணமாக தற்போதெல்லாம் யூஸ்டு கார் மார்க்கெட்டில் இருந்து மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பலர் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் பிரச்னை வரும்போது, அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்களில், அவர்களில் பலரால் ரிப்பேர் செய்ய முடிவதில்லை. மிகவும் அதிகமாக செலவாகும் என்பதுதான் இதற்கு காரணம்.
சம்பந்தப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் I காரின் உரிமையாளர் கூட யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கி விட்டு தற்போது லோக்கல் மெக்கானிக் ஷாப்பில் பழுது பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதை உறுதி செய்ய முடியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சரி, லோக்கல் மெக்கானிக் ஷாப்பில் சர்வீஸ் செய்வது என்பது அவ்வளவு மோசமான விஷயமா? என்றால், இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும். லோக்கல் மெக்கானிக் ஷாப்பில் கார்களை சர்வீஸ் செய்வதில் தவறு இல்லை. ஆனால் இது முழுக்க முழுக்க மெக்கானிக்குகள், அவர்களின் அனுபவம் மற்றும் திறமை, அவர்களிடம் இருக்கும் கருவிகள் ஆகியவற்றை பொறுத்தது.
மேற்கண்ட விஷயங்களில் எல்லாம் ஒரு மெக்கானிக் ஷாப் சிறந்து விளங்கினால், தாராளமாக அவர்களிடம் காரை வழங்கலாம். அவர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தால், அது கூடுதல் பலம். உண்மையில் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்கள் உடன் ஒப்பிடும்போது, லோக்கல் மெக்கானிக் ஷாப்களில் குறைவாகவே செலவு ஆகும்.
ஒரு அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பிற்கு புதிய கார்களை விற்பனை செய்வதன் மூலமாக வரும் வருமானத்தை விட, கார்களை சர்வீஸ் செய்வதன் மூலமாக வரும் வருமானமே அதிகம். அதாவது அங்கு சர்வீஸ் செய்தால், உங்களுக்கு அதிக செலவு ஏற்படும். எனவே லோக்கல் மெக்கானிக் ஷாப்களை நாடுவதில் தவறில்லை. ஆனால் அவர்களின் திறமை, நம்பகத்தன்மை ஆகியவற்றை எல்லாம் முன்கூட்டியே பரிசோதித்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








