ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
கரோல் பாக் (Karol Bagh) பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. இது டெல்லிக்கு (Delhi) அருகே உள்ள ஒரு பிரபலமான இடம் ஆகும். இங்கு கார் மெக்கானிக் ஷாப்கள் (Car Mechanic Shops) அதிகம். எனவே கார்களை பழுது பார்க்கவும், மாடிஃபிகேஷன்கள் (Modifications) செய்யவும் நிறைய பேர் கரோல் பாக் வந்து செல்கின்றனர்.
ஆனால் கரோல் பாக் பகுதியில் உள்ள கடைகளில் சாதாரண கார்களைதான் நம்மால் அதிகம் பார்க்க முடியும். அப்படி இருக்கும்போது கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு சாலையோர மெக்கானிக் ஷாப்பிற்கு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) கார் வந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

இதை பெரும்பாலானவர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் இந்த விசித்திரமான சம்பவம் உண்மையில் நடைபெற்றுள்ளது. கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு சாலையோர மெக்கானிக் கடையில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் டயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக கரோல் பாக் மட்டுமின்றி, இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும், சாலையோர மெக்கானிக் ஷாப்களுக்கு எல்லாம் விலை உயர்ந்த கார்களின் உரிமையாளர்கள் வர மாட்டார்கள். ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படக்கூடிய சாதாரண கார்களின் உரிமையாளர்கள் மட்டுமே சாலையோர மெக்கானிக் ஷாப்களுக்கு வருகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் பல கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் டயர்கள், சாலையோர மெக்கானிக் ஷாப்பில் மாற்றப்பட்டுள்ள சம்பவம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் ஆரம்ப விலையே 6.95 கோடி ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.95 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரின் டயர்கள், சாதாரண மெக்கானிக் ஷாப்பில் மாற்றப்பட்டிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான்!
ஆனால் சமூக வலை தளங்களில் நெட்டிசன் பலரும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் உரிமையாளரை கிண்டலடித்து வருகின்றனர். ஒரு காரை வாங்குவதை விட, அதை பராமரிப்பதுதான் சிரமமானது என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளனர். இந்த கருத்தில் உண்மை இருக்கவே செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் போன்ற மிகவும் விலை உயர்ந்த ஒரு கார் சாலையோர மெக்கானிக் ஷாப்பிற்கு வந்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இது முதல் முறை அல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக இதே டெல்லியில், பல கோடி ரூபாய் மதிப்படைய ஆடி ஆர்8 சூப்பர் கார் (Audi R8 Super Car), பெயிண்ட் வேலைகளுக்காக சாலையோர மெக்கானிக் ஷாப்பிற்கு வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதே போல் மும்பை (Mumbai) நகரில் உள்ள ஒரு சாலையோர மெக்கானிக் ஷாப்பில், பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) கார் ரிப்பேர் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








