செம கெத்து... நம்ம சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... ஏன் தெரியுமா?

ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் சென்னை ஐஐடி ஆகிய நிறுவனங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம கெத்து... சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... எதற்காக தெரியுமா?

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் ஒரு சிலரால் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் வாடிக்கையாளர்களாக மாற முடிகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், சாதாரண மனிதர்களால் வாங்க முடியாது. பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் வாடிக்கையாளர்களாக மாற முடியும்.

செம கெத்து... சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... எதற்காக தெரியுமா?

இதனால் இந்தியாவில் ஒரு சிலரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்கள் இருக்கின்றன. அவர்களை விரல் விட்டு எண்ணி விட முடியும். ஆனால் பல கோடி ரூபாய்களை கொட்டி கொடுத்தாலும் கூட, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் அதற்கு 'வொர்த்' ஆனவைதான். இதனால்தான் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கவர்ந்திழுத்துள்ளது.

செம கெத்து... சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... எதற்காக தெரியுமா?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களில் கிடைக்கும் சொகுசு வேறு எந்த நிறுவனத்தின் காரிலாவது கிடைக்குமா? என்பது சந்தேகமே. உண்மையில் நாம் காரில்தான் பயணிக்கிறோமா? அல்லது உல்லாச கப்பலில் பயணம் செய்கிறோமா? என்ற சந்தேகத்தை ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஏற்படுத்தும். அந்த அளவிற்கு அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க முடியும்.

செம கெத்து... சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... எதற்காக தெரியுமா?

மிகவும் பழமை வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், இங்கிலாந்தின் டெர்பியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், சென்னை ஐஐடி உடன் தற்போது கைகோர்த்துள்ளது. ஆம், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும், சென்னை ஐஐடி-யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளன.

செம கெத்து... சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... எதற்காக தெரியுமா?

ஆராய்ச்சி பணிகளுக்காகதான், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் சென்னை ஐஐடி ஆகியவை கூட்டணி சேர்ந்துள்ளன. கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சென்னை-யுடன் (Indian Institute of Technology Madras - IIT-M), புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

செம கெத்து... சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... எதற்காக தெரியுமா?

இந்த ஒப்பந்தத்தின்படி, தங்களது சில பொறியாளர்களை உயர் கல்விக்காக, சென்னை ஐஐடி-க்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் எதிர்கால தொழில்நுட்ப தேவைகளுக்கு பொருத்தமான பகுதிகளில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும், சென்னை ஐஐடி-யும் ஆராய்ச்சிகளை செய்யவுள்ளன.

செம கெத்து... சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... எதற்காக தெரியுமா?

மேலும் சென்னை ஐஐடி-யுடன் இணைந்து, தனது நிறுவனத்தின் தேர்ந்து எடுக்கப்பட்ட ஊழியர்கள் சிலருக்கு மாஸ்டர்ஸ் மற்றும் பிஎச்டி அளவிலான படிப்புகளுக்கு, ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பான்ஸரும் செய்யவுள்ளது. இந்த திட்டத்திற்கு தேர்வாக வேண்டுமென்றால், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன ஊழியர்கள் முதலில், சென்னை ஐஐடி தேர்வு வழிமுறைகளை க்ளியர் செய்ய வேண்டும்.

செம கெத்து... சென்னை கல்வி நிறுவனத்தை தோஸ்த் ஆக்கி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்... எதற்காக தெரியுமா?

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜினியரிங் சென்டரில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் அனைவராலும் இந்த திட்டத்தில் பங்கேற்க முடியும். அவர் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் 36 மாதங்கள் சேவையை நிறைவு செய்தவர்கள் ஆவர். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rolls Royce - IIT Madras Sign MoU. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X