ரோல்ஸ்ராய்ஸ் மெர்லின்... 20 நூற்றாண்டின் சிறந்த எஞ்சின்களில் ஒன்று...!!

20ம் நூற்றாண்டின் சிறந்த எஞ்சின்களில் ஒன்றாக ரோல்ஸ்ராய்ஸ் மெர்லின் குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நேசநாட்டுப் படைகள் பயன்படுத்திய 40 போர் விமானங்களில் இந்த எஞ்சின்தான் உயிர் கொடுத்து பலரது உயிரை வாங்கியுள்ளது.

முன்னதாக, இந்த எஞ்சின் பி51 மஸ்டாங் விமானத்தில் பயன்படுத்தப்பட்டது. குறைவான சக்தி கொண்டதாக இருந்த இந்த எஞ்சின்தான் பின்னர் அதிசக்திகொண்ட மெர்லின் எஞ்சினாக மாறியது. மெர்லின் எஞ்சின் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 முதல் சோதனை

முதல் சோதனை

முதன்முதலில் 1933ம் ஆண்டு அக்டோபர் 15ந் தேதி மெர்லின் எஞ்சின் சோதனை நடத்தப்பட்டது.

முதல் ஆகாய சோதனை

முதல் ஆகாய சோதனை

1935ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த முதல் ஆகாய சோதனை ஓட்டத்தில் வெற்றிப்பெற்ற இந்த எஞ்சின் 790 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்தது.

 அரசு உதவி

அரசு உதவி

இந்த எஞ்சினை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் பி-12 என்று பெயரிட்டிருந்தது. அதன்பின் இந்த எஞ்சின் உருவாக்கத்திற்கு இங்கிலாந்து அரசு நிதி உதவி அளித்ததால் மெர்லின் என்று பெயரிடப்பட்டது.

 ரோல்ஸ்ராய்ஸ் கெஸ்ட்ரெல்

ரோல்ஸ்ராய்ஸ் கெஸ்ட்ரெல்

ரோல்ஸ்ராய்ஸ் கெஸ்ட்ரெல் எஞ்சின் அடிப்படையில் அதிசக்திவாய்ந்த எஞ்சினாக மெர்லின் உருவாக்குப்பட்டது.

ஹாக்கருக்கு உயிர்

ஹாக்கருக்கு உயிர்

லிக்யூடு கூல்டு வி-12 எஞ்சினான மெர்லின் முதலில் ஹாக்கர் விமானத்தில் பொருத்தி இயக்கப்பட்டது.

தொழில்நுட்ப பிரச்னை

தொழில்நுட்ப பிரச்னை

முதலில் மெர்லின் எஞ்சின் கூலண்ட் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தனது நம்பகத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, மெர்லின் எஞ்சினை மேம்படுத்தி மெர்லின் எஃப் அறிமுகமானது.

 கணித மேதை உதவி

கணித மேதை உதவி

குறைந்த உயரத்தில் பறக்கும்போது மெர்லின் எஞ்சினின் சூப்பர் சார்ஜர்கள் போதுமான சக்தியை வெளிப்படுத்தவில்லை. இதனை சர் ஸ்டான்லி ஹூக்கர் என்ற கணித மேதைதான் தனது கணக்கியல் மூலம் சரிசெய்தார். இதன் அடிப்படையில்தான் மெர்லின் எக்ஸ்எக்ஸ் எஞ்சின் வடிவமைக்கப்பட்டது.

விமானங்கள்

விமானங்கள்

ஸ்பிட்ஃபயர் மற்றும் ஹூரிக்கேன் விமானங்களில் இந்த எஞ்சின் பொருத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டது. மேலும், முன்பைவிட 35 கிமீ., அதிவேகத்திலும் செல்லும் வல்லமை பெற்றன.

இன்னொரு பிரச்னை

இன்னொரு பிரச்னை

குறைந்த உயரத்தில் சிறப்பாக செயல்பட்ட மெர்லின் எக்ஸ்எக்ஸ் எஞ்சின் அதி உயரத்தில் செல்லும்போது சிறப்பாக செயல்படவில்லை. இந்த குறையை சரிசெய்து இரண்டு சூப்பர்சார்ஜர்கள் பொருத்தப்பட்ட மெர்லின் 61ஆக மாறியது. இது ஸ்பிட்ஃபயர் மார்க்-9 விமானத்தில் பொருத்தப்பட்டது.

குண்டு பொழியும் விமானம்

குண்டு பொழியும் விமானம்

குண்டு மழை பொழிவதற்காக விசேஷமாக உருவாக்கப்பட்ட அவ்ரோ லாண்ட்காஸ்டர் பாம்பர் விமானத்தில் இரண்டு மெர்லின் எக்ஸ்எக்ஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டன. ஒரு எஞ்சின் 1,480 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகளின் ஆதிக்கத்துக்கு பெரும் பங்கு வகித்தன.

 உற்பத்தி நிறுத்தம்

உற்பத்தி நிறுத்தம்

1950ம் ஆண்டு மெர்லின் எஞ்சின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மொத்தம் 1.50 லட்சம் மெர்லின் எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்தது. அதேவேளை, இங்கிலாந்தின் போர் வலிமையை பரைசாற்றுவதற்காக பராமரிக்கப்படும் பழைய போர் விமானத்தில் மெர்லின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2013, 14:52 [IST]
English summary
The legendary Rolls-Royce Merlin engine powered numerous aircraft used by the RAF during World War Two. The Merlin engine was used in forty aircraft during World War Two.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+