அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

நடிகர் அமிதாப்பச்சன் உபயோகப்படுத்திய Rolls-Royce கார் உள்பட பெங்களூரில் 17 சூப்பர் கார்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி பெங்களூர் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த சூப்பர் கார்களில், பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் உபயோகப்படுத்திய Rolls Royce Phantom காரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற கார்கள் குறித்த விபரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர். ஆனால் இதுகுறித்து வெளியாகி வரும் செய்திகளில் இந்த 17 சூப்பர் கார்களில் Rolls Royce Phantom உடன் Land Rover Range Rover Evoque, Jaguar XJ L, Ferrari, Audi R8 மற்றும் Porsche கார்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

இவை அனைத்தும் தற்போது பெங்களூர் ஆர்டிஓ அதிகாரிகளின் வசம் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் பறிமுதல் செய்ய வெவ்வேறு விதமான காரணங்கள் உள்ளதாகவும், இந்த கார்களை பற்றிய விபரங்களை பரிவாஹன் சேவா இணையத்தளத்தில் சரிபார்த்ததில் பொருத்தமான/ சரியான ஆவணங்கள் இல்லை என்றும் பெங்களூர் ஆர்டிஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக துணை ஆணையர் ஒருவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நாங்கள் பெங்களூரில் உள்ள லக்சரி வர்த்தக பகுதியான யுபி நகரத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

மஹாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட Rolls Royce உட்பட ஏழு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் Rolls Royce கார் 2019இல் அமிதாப்பச்சன் பெயரில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் பெங்களூருவை சேர்ந்த பில்டர் ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

நாங்கள் இந்த Rolls Royce காரை பறிமுதல் செய்தபோது அதனை சல்மான் கான் என்ற நபர் பயன்படுத்தி கொண்டு இருந்தார். அவர் கார் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க தவறிவிட்டார். காரும் காப்பீடு இல்லாமல் ஓடி கொண்டிருந்தது. சட்ட விதிகளின்படி காரை பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

பறிமுதல் செய்யப்பட்டுள்ள 17 சூப்பர் கார்களும் கர்நாடகா அல்லாமல் இந்தியாவின் வெவ்வேறான பகுதிகளில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். இந்த விலைமிக்க கார்களின் உரிமையாளர்களிடம் காரின் தற்போதைய ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கேட்டுள்ளனர்.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

இதில் யாரிடமும் சரியான ஆவணங்களை இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே கார்களை அதிரடியாக ஆர்டிஓ தூக்கியுள்ளது. மேலும், முறையான ஆவணங்களை சேகரித்த பின்னர் கார்களின் உரிமையாளர்களை தகுந்த அதிகாரிகளை சென்று சந்திக்க வலியுறுத்திவிட்டு போலீஸார் சென்றுள்ளனர்.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

எனவே சரியான ஆவணங்களை அதிகாரிகளிடம் உரிமையாளர்கள் காண்பித்தால் அவர்களின் இந்த சூப்பர் கார்கள் விடுவிக்கப்படும். ஒருவேளை போதிய ஆவணங்களை சமர்பிக்க உரிமையாளர் தவறினாலோ, அல்லது ஆவணங்கள் சரிப்பார்ப்பின் போது அதிகாரிகளுக்கு போதிய திருப்தி ஏற்படாவிட்டாலோ கார்கள் வழங்கப்படாதாம்.

கார்கள் திரும்ப வழங்கப்படவில்லை என்றால், அவை ஏலத்திற்கு விடப்படுமாம். கார்களின் பதிவெண்களை கண்காணிப்பதில் கர்நாடக அரசு எப்போதும் தீவிரமாக இருக்கும். அதுமட்டுமின்றி, அதிக சாலை வரி விதிக்கும் மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

இதனாலேயே கர்நாடகாவில் அண்டை மாநிலங்களுக்கு அருகில் வசிப்போரில் பலர் மாற்று மாநிலத்தில் வாகனத்தை பதிவு செய்கின்றனர். அதிலும் சொகுசு கார்களை வாங்கும் செல்வந்தர்கள், வேறு மாநிலத்தில் உள்ள டீலர்ஷிப்பில் காரை வாங்கி அங்கேயே பதிவு செய்து கொண்டு கர்நாடகாவிற்கு கொண்டுவந்துவிடுகின்றனர்.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

ஏனெனில் இவ்வாறான சட்ட விரோதமான செயல்களில் லட்ச கணக்கில் சேமிக்க முடியும். ஆனால் கர்நாடக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்படும். இதனால் தான் கர்நாடக போலீஸார் இவ்வாறு வாகனங்களை பதிவு செய்வோரை தேடிச்சென்று அபராதம் விதித்து வருகின்றனர்.

அமிதாப்பச்சன் பயன்படுத்திய காரை பெங்களூரில் ‘தூக்கிய’ ஆர்டிஓ!! எல்லாமே லக்சரி கார்கள்- வீடியோ!

கர்நாடகாவில் மட்டுமல்ல, எல்லா மாநிலத்திலும் வேற்று மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றாகும். அந்த மாநிலத்தில் தான் இனி வசிக்க போகிறீர்கள் என்றால் பழைய மாநில பதிவெண்ணை அந்த மாநில வட்டார போக்குவரத்து அலுவலத்தில் ஒப்படைத்துவிட்டு, புதியதாக குடியேறிய மாநிலத்தில் வாகனத்தை மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rolls-Royce Car Seized By Police Registered In Amitabh Bachchan Name.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X