5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

5 பேர் பயணிக்கும் வசதியுடன் புதிய பறக்கும் மின்சார வாகனத்தின் மாதிரி மாடலை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டுள்ளது. மேல் எழும்பி பறக்கவும், தரை இறக்கவும் வசதி கொண்ட பறக்கும் வாகன வடிவமாக உருவாக்கப்படுகிறது.

By Saravana Rajan

5 பேர் பயணிக்கும் வசதியுடன் புதிய பறக்கும் மின்சார வாகனத்தின் மாதிரி மாடலை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டு இருக்கிறது. ஆட்டோமொபைல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த புதிய பறக்கும் வாகனம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக, பறக்கும் கார்கள் மற்றும் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 2020ம் ஆண்டு துபாய் மற்றும் அமெரிக்காவின் டல்லாஸ் ஆகிய நகரங்களில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் உபேர் ஈடுபட்டுள்ளது. அதுபோன்று, கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் துவங்கிய கிட்டி ஹாக் பறக்கும் கார் நிறுவனம் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் வாய்ப்பையும் வழங்கி வருகிறது.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

இந்த நிலையில், ஆடம்பர கார் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தற்போது பறக்கும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கி இருக்கிறது. இதன்படி, பேட்டரியில் இயங்கும் புதிய பறக்கும் வாகனத்தின் கான்செப்ட்டை வெளியிட்டு இருக்கிறது.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

பறக்கும் கார் என்றால் தரையிலும் ஓட வேண்டும், வானிலும் பறக்க வேண்டும். ஆனால், இந்த வாகனம் ஹெலிகாப்டர் போன்று இருந்த இடத்திலிருந்து நேரடியாக மேல் எழும்பி பறக்கவும், தரை இறக்கவும் வசதி கொண்ட VTOL என்ற ட்ரோன் வகையின் மேம்பட்ட பறக்கும் வாகன வடிவமாக உருவாக்கப்படுகிறது. அதாவது, உபேர் நிறுவனத்தின் பறக்கும் டாக்சிக்கு போட்டியாக அமையும்.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் மின்சார பறக்கும் வாகனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 804 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் பெற்றிருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்த பறக்கும் மின்சார வாகனமாக வருவது கூடுதல் சிறப்பு.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

உபேர் தயாரிக்கும் பறக்கும் வாகனம் குறைந்த தூரமே பயணிக்கும் என்பதால், நகர்ப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் பறக்கும் மின்சார வாகனத்தை பெரு நகரங்களில் பயன்படுத்த முடியும் என்பதுடன், அருகருகே உள்ள நகரங்களுக்கும் செலுத்த முடியும்.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

மேலும், மின் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஹைப்ரிட் மாடலிலும் உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஹைப்ரிட் மாடலானது, சென்னை மற்றும் பெங்களூர் போன்று அருகாமையிலுள்ள பெரு நகரங்களை இணைக்கும் வகையில் பயன்படுத்த முடியும்.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கார் தயாரிப்பில் எந்த அளவுக்கு புகழ்பெற்றதோ, அதைவிட விமானங்களுக்கான எஞ்சின் தொழில்நுட்பத்தில் நெடிய பாரம்பரியத்தை கொண்டது. விமான எஞ்சின் தயாரிப்பில் இருக்கும் நீண்ட அனுபவத்தை பயன்படுத்தி, இந்த மின்சார பறக்கும் வாகனத்தை உருவாக்கி வருவதாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் மின்சார தொழில்நுட்பத் துறை தலைவர் ராவ் வாட்சன் தெரிவித்துள்ளார்.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் பறக்கும் மின்சார வாகன கான்செப்ட மாடலில் மின்மோட்டார்கள் துணையுடன் இயங்கும் 6 புரொப்பெல்லர்கள் பொருத்தப்பட்டிருக்கும். மிக குறைவான சப்தத்தை வெளிப்படுத்தும் சிறப்பம்சத்துடன் இந்த புரொப்பெல்லர்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

இதன் இறக்கைகள் இருந்த இடத்திலிருந்து மேல் எழும்புவதற்கும், தரை இறங்குவதற்கும் வசதியாக 90 டிகிரி கோணத்தில் திரும்பும் வகையில் வடிவைக்கப்படுகிறது. போதுமான உயரத்தை அடைந்தவுடன், இதன் புரொப்பெல்லர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வாகனம் முன்னோக்கி பறப்பதற்கான த்ரஸ்ட் விசையை வழங்கும்.

5 பேர் செல்வதற்கான பறக்கும் வாகனத்தை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்!!

வரும் 2020ம் ஆண்டு இந்த பறக்கும் மின்சார வாகனத்தை பறக்கவிட்டு சோதனை செய்ய ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும்,அடுத்த 18 மாதங்களுக்குள் புரோட்டோடைப் எனப்படும் முழுமையான பரிசோதனை வாகனத்தை உருவாக்குவதற்கும் ரோல்ஸ்ராய்ஸ் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ள இந்த காலக்கட்டத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 20, 2018, 12:30 [IST]
English summary
Rolls Royce Reveals Electric Flying Taxi Concept.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+