சென்னை ரோட்டில் மிதக்கப்போகும் ரூ 9கோடி கார்! இந்தியாவிலேயே முதல் கார் இது தான்!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் முதல்முறையாக வாங்கப்பட்டுள்ளது. இந்த காரை அதன் உரிமையாளர் சென்னையில் தான் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது. ரூ 9 கோடி மதிப்பிலான இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரோல்ஸ்ராய்ஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் சொகுசு வாகனங்களை தயார் செய்து விற்பனை செய்யும் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதனால் இந்த கார்கள் எல்லாம் அதிக விலை கொண்ட கார்களாக இருக்கிறது. இந்த காரை வைத்திருந்தால் சமூகத்தில் அவர்களுக்கு நல்ல கௌரவம் மரியாதையும் கிடைக்கும். என்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கிய வருகின்றனர்.

rolls royce spectre in chennai

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முதல் முறையாக ஸ்பெக்டர் என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் தற்போது சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இதுவரை அறிமுகமாகவில்லை. இருந்தாலும் இந்த காரை வெளிநாட்டில் இருந்து வாங்கி சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் இதை சென்னையில் இறக்குமதி செய்துள்ளார்.

இந்த கார் விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு. விமான நிலையத்திலிருந்து காரின் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் டெலிவரி செய்யப்பட்டது. இந்த கார் லாரியிலிருந்து இறக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டோமொபைல் ஆர்டென்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி உள்ளன.

rolls royce spectre in chennai

இதில் ஒரு புகைப்படத்தில் லாரிக்குள் இந்த கார் ஸ்டார்ட் செய்யப்பட்ட நிலையில் இருப்பது தெரிகிறது. காரின் பின்பக்க லைட் எரிந்தபடி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு புகைப்படத்தில் இந்த காரை டிரைவர் ஒருவர் லாரியிலிருந்து ரிவர்ஸில் கீழே இறக்குகிறார். அப்பொழுது டயர்கள் சரியாக இருக்கிறதா என செக் செய்து ரிவர்ஸில் எடுக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் இந்த காரின் கதவுகள் மற்றும் முன்பக்க பேனட் ஆகியவை திறக்கப்பட்ட நிலையில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காரை சென்னையை சேர்ந்த யார் வாங்கியுள்ளார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் கார் இதுவரை இந்தியாவில் வெளியாகாத நிலையில் 2024-ம் ஆண்டு தான் இந்த கார் இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு இந்த காரை இந்தியாவில் உள்ள ஏகப்பட்ட வாங்கி குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

rolls royce spectre in chennai

இந்த எலெக்ட்ரிக் ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் காரை பொருத்தவரை முற்றிலும் அடிப்படையிலிருந்து எலெக்ட்ரிக் காராக இதை உருவாக்க வேண்டும் என ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கியது. இதன் டிசைனை பொருத்தவரை வழக்கமான ரோல்ஸ்ராய்ஸ் கார் எப்படி இருக்குமோ அதே போன்ற டிசைனிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கிரில் இந்த காரின் முன் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் வழக்கமான ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் லோகோ மற்றும் ஸ்பிரிட் ஆஃப் எஸ்டஸி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரின் முன் பக்கத்தில் எல்இடி டிஆர்எல் மற்றும் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை 23 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தை பொருத்தவரை ரோல்ஸ் ராய்ஸ் வாரித் கார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலீக்கான ஷார்ப்பான ரூஃப் டிசைன்கள் மினிமாலான லுக்கிங் கொண்ட எல்இடி டெயில் லைட் ஆகிய உள்ளன.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை நல்ல தரமான லெதர்கள் மற்றும் உட்டன் இன்லைன்கள் கொண்டு இதன் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டல் ஆக்சஸரீஸ்களும் இதில் உள்ளன. மேலும் இந்த காரில் முதல்முறையாக ஸ்டார் லைட் டோர்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 4796 எல்இடி லைட்டுகள் கொண்டு ஸ்டார் போல வடிவம் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்ட்டில் ரோல்ஸ் ராய்ஸ் லோகோ லுமினிட் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பவர்டெரைனை பொறுத்தவரை இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது பிஎம்டபிள்யூ இ-டிரைவ் மோட்டார் இதில் உள்ளது. இந்த கார் 577 எச்பி பவரையும் 900என்னும் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் ஒரு தடவை சார்ஜ் போட்டால் 418 கிலோமீட்டர் பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இந்த ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் வந்து இறங்கி இருந்தாலும் இதை வாங்கியவர் யார் என தெரியவில்லை. இந்த காரை இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் ரூ 9கோடி செலவு செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு இந்த கார் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மூலமே இந்தியாக்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். அப்பொழுதும் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது.

Article Published On: Saturday, November 11, 2023, 10:13 [IST]
English summary
Rolls royce spectre arrives in chennai 9 crore
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X