இன்னும் நம்பர் கூட வரல! அதுக்குள்ள சின்னாபின்னமான 11 கோடி ரூபா கார்! இனி பேரிச்சம் பழத்துக்கு கூட தேறாது!

உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. இதில், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனமும் ஒன்றாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஸ்பெக்டர் (Rolls Royce Spectre) என்ற எலெக்ட்ரிக் காரை கடந்த 2024ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்தியாவில் தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த காரை தற்போது அதிகளவில் வாங்கி வருகின்றனர்.

Rolls Royce Spectre Accident

இந்தியாவை பொறுத்தவரையில், முகேஷ் அம்பானி (Mukesh Ambani) போன்ற தொழில் அதிபர்களிடமும், தனுஷ் (Dhanush) போன்ற திரையுலக நட்சத்திரங்களிடமும், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் உள்ளது. இந்தியா மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச சந்தைகளிலும், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், வங்கதேசமும் (Bangladesh) ஒன்றாகும். அங்கு ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் தற்போது மிக பயங்கரமான விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு (Dhaka) அருகே உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கார் அப்துர் சாபூர் (Abdur Sabur) என்ற தொழில் அதிபருக்கு சொந்தமானது என தெரிகிறது.

Rolls Royce Spectre Crash

இவர் மாஸ்கோ குழுமத்தின் (Masco Group) தலைவர் (Chairman) ஆவார். வங்கதேசத்தில் டெக்ஸ்டைல் உள்பட பல்வேறு தொழில்களில் மாஸ்கோ குழுமம் ஈடுபட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சம்பவத்தன்று (ஜூலை 19), விபத்தில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார், அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காருக்கு உள்ளே அப்துர் சாபூர் மற்றும் அவரது மகன் இருந்துள்ளனர். அவர்கள் தவிர இன்னும் 2 பேரும் காருக்கு உள்ளே இருந்தனர். சம்பவம் நிகழ்ந்தபோது கார் என்ன வேகத்தில் சென்றது? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் மணிக்கு 100 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் கார் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காருக்கு உள்ளே இருந்த அனைவரும் உயிர் தப்பி விட்டனர். இருப்பினும் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்காக அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காருக்கு உள்ளே இருந்த அனைவரும் உயிர் தப்பி விட்டாலும் கூட, இந்த விபத்தில், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. கார் முற்றிலுமாக சேதமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் விலை உயர்ந்த ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 7.50 கோடி ரூபாய் என்ற அளவில் வருகிறது. வங்கதேசத்தில் இந்த காரின் விலை சுமார் 15 கோடி வங்கதேச டாக்கா (Taka) என கூறப்படுகிறது. இங்கே டாக்கா என்பது வங்கதேசத்தின் கரன்ஸி ஆகும்.

இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால், வங்கதேசத்தில் இந்த காரின் விலை சுமார் 11 கோடி ரூபாய் வருகிறது. இவ்வளவு விலை உயர்ந்த கார், சாலை விபத்தில் முற்றிலுமாக சேதம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இது புத்தம் புதிய கார் ஆகும்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று Aminur Rahman என்பவரின் யூடியூப் (YouTube) சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும்போது, சாலை விபத்தில் சிக்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரில், முறையான நம்பர் பிளேட் இல்லை என்பது நமக்கு தெரிய வருகிறது.

அதற்கு பதிலாக AFR என குறிப்பிடப்பட்டுள்ளது. Applied For Registration என்பதன் சுருக்கம்தான் AFR ஆகும். அதாவது வாகன பதிவிற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதன் அர்த்தம். வங்க தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக, அந்நாட்டு காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் முற்றிலுமாக சேதமடைந்திருந்தாலும் கூட, பயணிகள் அனைவரும் உயிர் தப்பி விட்டது நல்ல விஷயம். இருப்பினும் அதிவேகத்தை தவிர்த்திருந்தால், இந்த விபத்தையும் தவிர்த்திருக்கலாம். முதற்கட்ட விசாரணையில் அதிவேகம்தான் இந்த விபத்திற்கான காரணம் என்பது தெரிய வந்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அதிவேகத்தை தவிர்ப்பது சிறந்தது.

Image Source: @Aminur Rahman via YouTube

More from DriveSpark

Article Published On: Monday, July 21, 2025, 13:57 [IST]
English summary
Rolls royce spectre electric car accident viral video full details here
மேலும்... #road accident
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+