சென்னையில் சுத்தும் 11 கோடி ரூபாய் கார்! ஆசியாலயே மொத ஆளா வாங்கியிருப்பது அவரா! யார்னு தெரிஞ்சா மெரண்டுருவீங்க
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் கோடீஸ்வரர்களால் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாற முடியும். உண்மையை சொல்வதென்றால், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை நேரில் பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு பாக்கியம் சென்னை (Chennai) மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. அதுவும் சென்னை மக்களுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது, ஏதோ சாதாரண ரோல்ஸ் ராய்ஸ் கார் கிடையாது. இந்தியாவிலேயே இல்லை... இல்லை... ஆசியாவிலேயே இருக்கும் ஒரே ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகும்.

இந்த காருக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் (Rolls Royce Spectre) காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்!
பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் (Baashyaam Constructions) நிறுவனத்தின் பாஷ்யம் யுவராஜ் (Baashyaam Yuvaraj), ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை தற்போது வாங்கியுள்ளார். தற்போதைய நிலையில் ஆசிய கண்டத்தின் அளவிலேயே இவர் ஒருவரிடம் மட்டும்தான் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார், சென்னை சாலைகளில் வரும் வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகின்றன. இதில் யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோவை மட்டும் இந்த செய்தியின் மூலம் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம்.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரின் எக்ஸ் ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 9 கோடி ரூபாய் வருகிறது. ஆன் ரோடு விலை (On-Road Price) சுமார் 10.50 கோடி ரூபாய் வரும். கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை (Customization Options) தேர்வு செய்தால், இதன் விலை இன்னும் உயர்ந்து விடும்.
பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்குபவர்கள், தங்களுக்கு ஏற்ற வகையில், நிறைய மாற்றங்களை செய்வார்கள். இதன்படி பாஷ்யம் யுவராஜ் கூட, கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்திருப்பார் என்றே கூறப்படுகிறது. ஆனால் அவர் என்னென்ன விஷயங்களை எல்லாம் தனது ஸ்பெக்டர் காரில் செய்துள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான், ஸ்பெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தற்போது அதன் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கியுள்ளன. எனவே வரும் காலங்களில் இன்னும் நிறைய பேர் இந்த காரை வாங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்தினர் நிச்சயமாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்காமல் இருக்க மாட்டார்கள் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில் அவர்களிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) உள்பட நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கின்றன.
சரி, ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காருக்கு வருவோம். இந்த எலெக்ட்ரிக் காரில், 2 எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் கூடிய பேட்டரி தொகுப்பு (Battery Pack) வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 575 பிஹெச்பி மற்றும் 900 என்எம் டார்க் ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.5 வினாடிகளில் எட்டி விடும்.
அதே நேரத்தில் ஸ்பெக்டர் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 520 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும் என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. இதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கே உரித்தான பாணியில் பல்வேறு அதிநவீன மற்றும் சொகுசு வசதிகள் (Features) எல்லாம் ஸ்பெக்டர் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் சென்னை சாலைகளில் மட்டுமே உலா வந்து கொண்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை, எதிர்காலத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் காண முடியும் என நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பலரும் இந்த காரை வாங்க ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் இதனை சொல்கிறோம்.


Click it and Unblock the Notifications








