9 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியது நம்ம சென்னையை சேர்ந்த தொழிலதிபரா!! யாருங்க அவரு?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காரை சென்னயைச் சேர்ந்த ஓர் நபர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதமாக விமானம் வாயிலாக இறக்குமதி செய்யப்பட்ட, அந்த சொகுசு கப்பல் ரக கார் டெலிவரிக்காக வாகனம் ஒன்றில் ஏற்றப்படும் புகைப்படங்கள் வெளியாகின.
ஆனால், யார் இந்த சொகுசு காரை வாங்கியது? என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையிலேயே, இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காரை சென்னை வாசி ஒருவர் வாங்கி இருக்கின்றார் என்கிற ஆச்சரியம் அளிக்கும் தகவல் வெளியாகி இருக்கின்றது. புகழ்பெற்ற பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரே இந்த ஆடம்பர காரை வாங்கி இருக்கின்றார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காருடன் பாஷ்யம் யுவராஜ் நின்றுக் கொண்டிருக்கும் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே சென்னையைச் சேர்ந்த இந்த பிசினஸ் மேன் வாங்கி இருக்கின்றார்.
இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். மேலும், இதுவே ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் வாகனமும் கூட. இந்த காரையே சுமார் 10.5 கோடிக்கும் அதிகமான தொகைக் கொடுத்து பாஷ்யம் யுவராஜ் வாங்கி இருக்கின்றார். இதேபோல், இந்தியாவில் வேறு யாரிடத்திலும் இந்த கார் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே உரிமையாளராக பாஷ்யம் யுவராஜ் மாறி இருக்கின்றார். ரோல்ஸ் ராய்ஸ் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான பேந்தம்-ஐ தழுவியே இந்த எலெக்ட்ரிக் காரை வடிவமைத்து இருக்கின்றது. இருப்பினும், பேந்தம்-ஐ காட்டிலும் அதிக சிறப்புகளைத் தாங்கியதாக இந்த ஸ்பெக்ட்ரே காட்சியளிக்கின்றது.
உதாரணமாக இந்த காரில் இலுமினேட் ஆகக் கூடிய க்ரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது மிக சிறந்த தோற்றத்தை இரவு நேரங்களில் இந்த காருக்கு வழங்கும். மேலும், இந்த காரின் டிராக் கோ-எஃபீசியன்ட் 0.25 சிடி என கூறப்படுகின்றது. இதற்கேற்பவே ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசியை ரோல்ஸ் ராய்ஸ் இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, முதல் முறையாக ரோல்ஸ் ராய்ஸின் இரண்டு கதவுகள் கொண்ட இந்த கார் மாடலில் 23 அங்குல வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்பெக்ட்ரேவின் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளைப் போலவே பின் பக்கத்திற்கும் மிகவும் சிம்பிளான அழகு தோற்றத்தை ரோல்ஸ் ராய்ஸ் சேர்த்திருக்கின்றது.
ஆகையால், கவர்ச்சிக்கு சற்றும் குறைச்சல் இல்லாத வாகனமாக இந்த எலெக்ட்ரிக் கார் காட்சியளிக்கின்றது. இதேபோல், இந்த காரின் உட்பக்கமும் மிகுந்த அழகு கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. உதாரணமாக இந்த காரில் பயணிக்கும் போது வான்வெளியை பார்ப்பதைப் போன்ற உணர்வை வழங்கக் கூடிய ஸ்டார் லைட்டுகள் ரூஃபில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க, மிகுந்த அமைதியான பயண அனுபவத்தையும் இந்த கார் வழங்கும். சாலை மற்றும் வெளிப்புறத்தில் கேட்கக் கூடிய சத்தங்கள் துளியளவும் காரின் உட்பக்கத்தில் கேட்காது. அந்த அளவிற்கு மிகுந்த லக்சூரியான ரைடு அனுபவத்தையே இந்த கார் அதன் பயணிகளுக்கு வழங்கும். மேலும், இந்த காரில் பயணிக்கும்போது சிறியது முதல் பெரியது வரை என எந்த விதமான மேடு பள்ளமும் தெரியாது.
ஆமாங்க, கப்பலில் மிதந்துக் கொண்டு போவதைப் போன்ற அனுபவத்தையே இந்த கார் வழங்கும். இதுபோன்று பன்முக சிறப்புகளை இந்த கார் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே முகேஷ் அம்பானி முதல் பலரின் பிரியமான சொகுசு காராக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன.
ஆனால், தற்போது சென்னை தொழிலதிபர்கள் வாங்கி இருக்கும் ஸ்பெக்ட்ரே கார் மாடலை அவர் வாங்க தவறிவிட்டார் என்றே கூறலாம். இந்த எலெக்ட்ரிக் காரை அலுமினியம் ஆர்கிடெக்சர் மற்றும் புதிய ஸ்பிரிட் சாஃப்ட்வேர் ஆர்கிடெக்சர் ஆகிய தளங்களைக் கொண்டோ ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கி இருக்கின்றது.
ஆகையால், மற்ற ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகளில் இல்லாத சில தனித்துவமான அம்சங்களை இந்த காரில் பார்க்க முடிகின்றது. உதாரணமாக, காரில் பயணிகள் பக்கம் ஸ்பெக்ட்ரே என ஒளிரும் இலுமினேட்டர்கள் இடம் பெற்றிருக்கும். இதை கார் இயக்கமற்ற நிலையில் பார்க்க முடியாது. இயக்க நிலையில் இருக்கும்போது மட்டுமே அதைக் காண மிடியும்.
ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மின்சார மோட்டார் 593 பிஎஸ் பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மின்சார மோட்டார் வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.
இதுமட்டுமில்லைங்க, ஓர் முழு சார்ஜில் 520 கிமீ தூரம் வரை இந்த காரில் பயணிக்க முடியும். இது மிக சிறந்த ரேஞ்ஜ் திறன் ஆகும். இதேபோல் இந்த கார் நம்மை ஆடம்பர அம்சங்கள் விஷயத்திலும் மிரட்டிவிட்டிருக்கின்றது என கூறலாம். உதாரணமாக ஏற்கனவே கூறப்பட்ட ஸ்டார்லைட் வசதி இருக்கின்றது.
இந்த வசதிக்காக மென்மையாக ஒளிரக் கூடிய 4,796 நட்சத்திர லைட்டுகள் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்று இன்னும் பல ஆடம்பர மற்றும் பிரீமியம் அம்சங்களை இந்த காரில் மிக தாராள மனதுடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. இதனால்தான் இதன் விலை ரூ. 10 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இந்த காரிலேயே விரைவில் பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தின் நிறுவனர் தன்னுடைய பயணங்களை மேற்கொள்ள இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காரை சென்னயைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வாங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. ஆகையால், விரைவில் இந்த 9 கோடி ரூபாய் மிதக்கும் கார் சென்னை சாலைகளில் வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









