இப்படி ஒரு இன்ஜினை நீங்க கேள்வியே பட்டிருக்க மாட்டீங்க! ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்த வேற லெவல் இன்ஜின்!
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமானங்களுக்கான புதிய ஹைபிரிட் எலக்ட்ரிக் இன்ஜினை தயாரித்துள்ளது. இது ஒரே நேரத்தில் எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் பவரின் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக முதல் கட்ட சோதனையை செய்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் தற்போது மாசு கட்டுப்பாட்டுக்கான கொள்கையை வகுத்து அதற்கான முயற்சியை செய்து வருகிறது. இதற்காக உலகம் முழுவதும் செயல்படும் வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசுவை கட்டுப்படுத்த எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து அதன் விற்பனையை அரசு சார்பில் ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் டூவீலர் செக்மெண்டில் ஸ்கூட்டரில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக விற்பனையாக தொதுவங்கிவிட்டன. விரைவில் எலெக்ட்ரிக் பைக்குகளில் விற்பனையும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நேரத்தில் எலக்ட்ரிக் கார்களும் ஒவ்வொன்றாக வர துவங்கி விட்டன. அதன் விற்பனையும் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இது எல்லாம் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் விமானம் போன்ற அதிகம் மாசுவை வெளியிடும் வாகனங்களில் எலெக்ட்ரிக் இதுவரை பெரிய அளவில் வரவில்லை. இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சினில் ஹைபிரிட் இன்ஜினை புதிதாக உருவாக்கி அதை முதற்கட்ட சோதனை செய்துள்ளது. இந்த இன்ஜின் ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் பவரில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினை பயன்படுத்துவதால் விமானங்களில் இருந்து வெளியேறும் மாசு மிகக் குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த இன்ஜினை காம்பேக்ட் பவர் டன்ஸ் டர்பைன் உடன் குறைந்த எடை கொண்ட டர்போ ஜெனரேட்டர் சிஸ்டத்தை வைத்து உருவாக்கியுள்ளது. விமான போக்குவரத்துக்கான அட்வான்ஸ் தொழில்நுட்ப மார்க்கெட்டில் இந்த டர்போ ஜெனரேட்டர் முக்கிய இடத்தை வகிக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த தொழில்நுட்பத்தை ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் வெர்டிகல் டேக் ஆஃப் பயன்பாட்டிற்காகவும், ஃபைட்டர் ஜெட் போன்ற விமானங்களில் பயன்படுத்தப்படும் சார்ட் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் அதாவது குறைந்த தூரம் ஓடுபாதையிலேயே டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யும் வகையிலான இன்ஜினை தயாரிக்கவும், சிறிய ரக விமானத்தை தயாரிக்கவும், 19 சீட்டு கொண்ட பயணிகள் விமானத்தை தயாரிக்கவும் பயன்படுத்த முடியும் என தெரிகிறது.

இந்த டர்போ ஜெனரேட்டர் சிஸ்டம் 500 கிலோ வாட் முதல் 1200 கிலோ வாட் வரை அதன் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும் என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளை வைத்து அதிக தூரம் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது எலெக்ட்ரிக் பேட்டரியை பயன்படுத்தி செயல்படும் விமானங்களின் புதிய மற்றும் நீண்ட தூர பாதைகளை தேர்வு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த ஹைபிரிட் சிஸ்டத்தின் மூலம் விமானம் பறக்கும் போது அது எரிபொருளில் செயல்பட வேண்டுமா அல்லது எலெக்ட்ரிக் பவரில் செயல்பட வேண்டுமா என விமானிகள் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷன் இருக்கும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து விமானத்திலேயே கொண்டு செல்லும் படி இது டிசைன் செய்யப்பட உள்ளது.
தற்போது இந்த ஹைபிரிட் இன்ஜினுக்கான முதல் சோதனையை ரோஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. இந்த இன்ஜினை இனி விமானங்களில் பயன்படுத்தும் படி மாற்றியமைத்து அதை வைத்து விமானங்களில் இந்த இன்ஜினை பொருத்தி சோதனை செய்யும் முயற்சி எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்க உள்ளது. இனி விரைவில் ஹைபிரிட் இன்ஜின் கொண்ட விமானங்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமானங்களின் இன்ஜினை தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட நிறுவனம் தான். இந்நிறுவனம் பின்னர் நாளடைவில் மற்ற வாகனங்களையும் தயாரித்து வந்தாலும் இந்நிறுவனத்தின் தலையான பணியான விமான இன்ஜின் தயாரிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. இதில் ஹைபிரிட் இன்ஜினை உருவாக்கி இது விமான துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









