அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

பாபி செம்மனூரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸியை ஓட்டும்போது கேமரா கண்களில் சிக்கினார் அல்லவா? அவரை பற்றிதான் இங்கே பேசி கொண்டுள்ளோம். அவரது பெயர் தற்போது செய்திகளில் மீண்டும் இடம்பெற தொடங்கியுள்ளது.

அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி (Mercedes-Benz EQC) காரை அவர் வாங்கியிருப்பதுதான் இதற்கு காரணம். இதுதான் இந்தியாவின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். கேரளாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் பிரிட்ஜ்வே மோட்டார்ஸில், புத்தம் புதிய இக்யூசி காரை பாபி தற்போது டெலிவரி எடுத்துள்ளார். அத்துடன் அந்த புகைப்படங்களை இணையத்திலும் பகிர்ந்துள்ளார்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி கார், வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி கிடைக்கிறது. அதே சமயம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கிடைக்கும் அதிக சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி கொண்டுள்ளது.

அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

இதன் எக்ஸ் ஷோரும் விலை 99.30 லட்ச ரூபாய் ஆகும். அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இக்யூசி காரின் விலையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வரும் வாரங்களில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 400 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரில், 85kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பேட்டரியை பல்வேறு வழிகளில் சார்ஜ் செய்ய முடியும். ஸ்டாண்டர்டு 15A டொமஸ்டிக் சாக்கெட் பயன்படுத்தினால், பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு சுமார் 21 மணி நேரம் ஆகும்.

அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

அதே சமயம் 7.5kW வால்-பாக்ஸ் சார்ஜர் பயன்படுத்தினால், பேட்டரி முழுமையாக நிரம்ப சுமார் 10 மணி நேரம் ஆகும். இதுதவிர டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் உள்ளது. 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், பேட்டரியை வெறும் 90 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் கோனா, எம்ஜி இஸட்எஸ் மற்றும் டாடா நெக்ஸான் போன்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் விட பல்வேறு வழிகளில் மேம்பட்டதாக மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.

அடேங்கப்பா... ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸி உரிமையாளர் வாங்கிய புதிய காரின் விலை இவ்வளவு ரூபாயா?

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ள பாபி செம்மனூர், ரோல்ஸ் ராய்ஸ் காரை டாக்ஸியாக பயன்படுத்த தொடங்கிய பிறகு மிகவும் பிரபலம் ஆனார். அவரிடம் இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VII (Rolls Royce Phantom VII) கார் ஆகும். இந்த ரோல்ஸ் ராய்ஸ் டாக்ஸியை கடந்த சில வாரங்களுக்கு முன் அவரே ஓட்டும்போது கேமரா கண்களில் சிக்கினார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rolls Royce Taxi Owner Buys Mercedes-Benz EQC. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X