பெரிய பாறையே விழுந்தும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒன்னுமே ஆகலயா? வைரலாக பரவி வரும் வீடியோவின் உண்மை என்ன?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் கார் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டாலும் காருக்கு பெரிய அளவில் சேதமாகாது என்ற வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது .இந்த வீடியோ உண்மைதானா இப்படியாக கல்லை போட்டால் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் எதுவும் ஆகாதா? கல் தான் உடையுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
காஸ்ட்லியான கார் என்றால் பெரும்பாலும் rolls-royce நிறுவனத்தின் காரைத்தான் நாம் எல்லாரும் உடனடியாக சொல்லுவோம். அந்த அளவுக்கு சர்வதேச அளவில் இந்த நிறுவனம் பெயர் பெற்று உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமாகவும் ஒவ்வொரு காருக்கும் தனித்துவமான கவனம் கொடுத்து இந்நிறுவனம் தயாரிப்பதால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் கார்களை பார்ப்பது அரிதான விஷயமாக இருக்கும்.

அதே நேரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இவ்வளவு காஸ்ட்லியாக இருக்கிறது என்பதற்கு பலர் சொல்லும் காரணம் அந்த கார் அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட கார்களாக இருக்கும் என கூறுகிறார்கள். அதனால் பலர் rolls-royce நிறுவனத்தின் காரில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் காரில் இருப்பவர்களுக்கு எதுவும் ஆகாது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல இந்த காரில் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், விபத்து ஏற்படும் நிகழ்வை பொருத்து காரில் இருப்பார்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் போஸ்டு கார் மீது பெரிய பாறாங்கல்லை போடுகிறார்கள். அவ்வளவு பெரிய பாறாங்கல் போட்டும் பெரிய அளவில் காருக்கு சேதமாகவில்லை. மாறாக கல் தான் உடைந்து விடுகிறது. இந்த வீடியோவை பலர் பரப்பி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் அதிக விலை மதிப்பு கொண்ட காரணமாக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் எவ்வளவு பாதுகாப்பாக இவ்வளவு தரமாக தயாரிப்பதுதான் என கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த வீடியோவை நாம் ஒன்று கவனிக்கும்போது இது உண்மையான வீடியோ இல்லை என்பது நமக்கு தெளிவாக புரியும். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பங்கள் மிகப்பெரிய அளவில் வந்து விட்டதால் அந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவாக இது இருக்கிறது. இந்த வீடியோவின்படி rolls-royce நிறுவனத்தின் கோஸ்ட் கார் மீது மிகப்பெரிய பாறாங்கல் ஒன்று விழுகிறது.
அப்பொழுது கார் அப்பளம் போல நொறுங்கிவிடும் என நாம் நினைப்போம். கார் பெரிய அளவில் சேதமாகாமல் பெரிய பாறாங்கள் துண்டதுண்டாக உடைவது போல் இந்த காட்சி அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் இப்படியாக ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது இவ்வளவு பெரிய பாறாங்கல்லை தூக்கி போடும்போது பாறாங்கல் எல்லாம் உடையாது கார்தான் அப்பளம் போல நொறுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த வீடியோவில் பாறைகள் உடைவதை பார்க்கும் போது நமக்கு அது இயற்கையாக பாறைகள் உடைவது போல இல்லை. அதில் கிராபிக்ஸ் இருப்பது நமக்கு தெளிவாக தெரிந்தது. இதன் மூலம் இதை நாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என சொல்லலாம். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் rolls-royce நிறுவனத்தின் கார்கள் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் .இந்த நம்பிக்கையை முதலீடாக வைத்து மக்களை கவர்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மையான வீடியோ அல்ல. இதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். சமீப காலமாக இப்படியான வீடியோக்கள் பல வைரலாக பரவி வருகிறது. இதன் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்


Click it and Unblock the Notifications









