பிறந்தநாளுக்கு ரூ.4 கோடியில் சூப்பர் கார் வாங்கிய ரொனால்டோ

போர்ச்சுகல் கால் பந்து அணியின் முன்னணி வீரர் ரொனால்டோ. கால் பந்து விளையாட்டில் இருக்கும் அதே அளவுக்கு கார்கள் மீதும் காதல் வைத்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடிய ரொனால்டோ தனது நீண்ட நாள் கனவான லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காரை வாங்கி ஆசையை தீர்த்துக்கொண்டார்.
கருப்பு நிறத்தில் மின்னும் அந்த காரை அவர் தனது பிறந்த நாள் அன்று டெலிவிரி கொடுக்கும் வகையில் புக்கிங் செய்து வாங்கியுள்ளார். லம்போர்கினியின் மியூசிலகா சூப்பர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலான அவென்டேடாரில் 6.4 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த எஞ்சின் அதிகபட்சம் 700 பிஎச்பி(நம்ம நானோ காரின் எஞ்சின் அதிகபட்சம் 37 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்) ஆற்றலை வாரி இறைக்கும் ஆற்றல் கொண்டது.
வெறும் 4 நொடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்ட இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 324 கிமீ வேகத்தில் செல்லும்.
தற்போது வாங்கியுள்ள லம்போர்கினி அவென்டேடார் கார் உள்பட ரொனால்டோவிடம் ஏராளமான சூப்பர் கார்கள் உள்ளன. ஆடி நிறுவனம் பரிசாக வழங்கிய ஆர்-8, ஃபெராரி 599 ஆகிய சூப்பர் கார்களை இதற்கு முன் பயன்படுத்தி வந்தார்.
இதில், ஃபெராரி 599 ஜிடிஓ புதிய மாடல் காரை வாங்க தனது பழைய ஃபெராரி 599 காரில் சென்றபோது, இங்கிலாந்து, மான்செஸ்டரிலுள்ள சுரங்கச் சாலையில் அவரது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








