மெரீனா கடற்கரையில் அந்தரத்தில் பறக்கப்போகும் கார்கள்! இதுல அப்படி என்ன இருக்குது?

சென்னை மெரினா பீச்சில் ரோப் கார் வசதியை ஏற்படுத்தி தர தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படியாக ரோப் கார்கள் என்றால் என்ன இதை சென்னை மெரினா பீச் பகுதியில் கட்டமைப்பதன் மூலம் என்ன விதமான பலன் கிடைக்கும் மக்கள் இதனால் எப்படி பயன்பெறப் போகிறார்கள். இது என்ன தொழிற்நுட்பத்தில் வேலை செய்கிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

சென்னை மக்கள் மெரினா கடற்கரை பகுதியில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வர வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கும் விதமாக அரசு ஏற்கனவே சென்னை மெரினா பீச் முதல் பெசன்ட் நகர் வரை கட்டமைக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த அறிவிப்பை செயல்முறைக்கு கொண்டு வரும் பணிகளை துவங்கியுள்ளது.

rope car in marina beach

அதன்படி சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்த ரோப் கார் கட்டமைக்கும் பணியை செய்ய சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த ரோப் கார்களை கட்டமைப்பதற்கான டெண்டர்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இதன் மூலம் ரோப் கார் கட்டமைக்கும் நிறுவனங்கள் தங்கள் டென்டரை சமர்ப்பிக்க தயாராகி வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் விண்ணப்பத்தில் சென்னை மெரினா பீச் பகுதியில் ரோப் கார் அமைப்பதற்கான டெண்டர் என்ற தகவல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. எந்த பகுதியில் இருந்து எந்த பகுதி வரை ரோப் கார் அமைக்க போகிறார்கள் என்ற தகவல் இடம் பெறவில்லை. இந்த டெண்டருக்கான உத்தேச பட்ஜெட்டாக ரூபாய் 25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வரும் 17ம் தேதியை கடைசி தேதியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்குள் இந்த டெண்டரை பெறுவதற்கான தகுதியுள்ள நிறுவனங்கள் டெண்டருக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ரோப் கார் ஆரம்பிப்பதால் சென்னைக்கு என்ன பலன் என பார்ப்போம்.

சென்னை இந்தியாவின் மிக முக்கியமான நகரமாக இருக்கிறது. வர்த்தகத்துக்கு மட்டுமல்லாமல் சென்னையில் பல்வேறு விதமான சுற்றுலா தளமும் இருக்கிறது. இதனால் ஆண்டுதோறும் சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வர சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன் முக்கிய பகுதியாக தான் சென்னை மெரினா பீச் பகுதியில் ரோப் கார் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி வழங்கி உள்ளது. ரோப் கார்கள் அமைக்கும்போது சாதாரண பகுதி என்றால் அதன் சாதாரண விதிமுறைகள் தான் பின்பற்ற வேண்டியது இருக்கும். ஆனால் பீச் பகுதி என்பதால் அதிக காற்று வீசக்கூடிய பகுதியாக இருக்கும். இந்த பகுதியில் ரோப் கார் அமைப்பது சற்று சிரமமானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அதுவும் சென்னை போன்ற நகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் புயலை சந்திக்க கூடிய ஒரு நகரமாக இருப்பதால் இந்த பகுதியில் ரோப் கார் அமைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த ரோப் கார்களை அமைக்க முடியும். இந்த ரோப் கார்கள் வந்துவிட்டால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும்.

சென்னை மெரினா பீச் பகுதியை ரோப் கார் மூலம் உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு மிக பிரம்மிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் சூரிய உதயத்தை பகிர்ந்து கொண்டே பார்த்தால் நிச்சயம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதற்காக திட்டமிட்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மாநகராட்சி மேல் நிர்வாகம் சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் கொண்டு வருவது குறித்து எடுத்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் சென்னைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் சென்னை மாநகரத்தின் வளர்ச்சி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த முயற்சிக்கு நாம் பாராட்டுக்களை தெரிவிப்போம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 4, 2024, 16:05 [IST]
English summary
Rope car marina beach tender chennai corporation technical details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+