ராஸ்வெல் FS-II பறக்கும் தட்டு கான்செப்ட்டின் படங்கள் மற்றும் விபரங்கள்!

By Saravana

பறக்கும் தட்டு, அதுபோன்ற மர்ம பொருள் பறப்பதாகவும், விழுவதாகவும் செய்திகள் தினசரி காண முடிகிறது. போதாக்குறைக்கு வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் சகட்டு மேனிக்கு வரும் புரளிகளையும், அதனை ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது.

அதேநேரத்தில், இந்த பறக்கும் தட்டு பற்றி முதல்முறையாக செய்திகள் கிளம்பியது அமெரிக்காவின் ராஸ்வெல் சம்பவத்திலிருந்துதான். 1947ல் அமெரிக்காவின் ராஸ்வெல் பகுதியில்தான் முதன்முதலாக வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியானது. இந்த நிலையில், ராஸ்வெல் பறக்கும் தட்டு நிகழ்வு இடத்தின் பெயரிலேயே, இப்போது ஒரு புதிய பறக்கும் தட்டு கான்செப்ட் ஒன்றை பிரபல டிசைனர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார்.

கான்செப்ட்

கான்செப்ட்

ராஸ்வெல் எஃப்எஸ் - II என்று அழைக்கப்படும் இந்த கான்செப்ட் 1950ல் தயாரிக்கப்பட்ட அவ்ரோ கனடா நிறுவனத்தின் பறக்கும் தட்டு கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கியுள்ளனர்.

வடிவம்

வடிவம்

இந்த பறக்கும் தட்டு 35 அடி விட்டமும், 6.6 அடி தடிமனும் கொண்டதாக வடிவமைத்துள்ளார். மேலும், இந்த பறக்கும் தட்டின் நடுப்பகுதியில் 13 அடி விட்டம் கொண்ட டர்போரோட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பறக்கும் தட்டில் இரண்டு பிரான்ட் அண்ட் விட்னி எஃப்135 டர்போஃபேன் எஞ்சின் உள்ளது. இதனைவிட குறைந்த சக்திகொண்ட எஞ்சினையும் பயன்படுத்த முடியும்.

பயன்பாடு

பயன்பாடு

தரையிலிருந்து செங்குத்தாக மேலே எழும்பவும், கீழே இறங்கவும் முடியும் என்பதால், ஹெலிகாப்டருக்கு மாற்றான போக்குவரத்து சாதனமாக இதனை பயன்படுத்த முடியும்.

அதிவேகம்

அதிவேகம்

ஹெலிகாப்டர் போன்று செங்குத்தாக மேலே எழும்பவும், கீழே இறங்கவும் வசதி கொண்ட இந்த பறக்கும் தட்டு மாக் 2 வேகத்தில் பறக்கும். அதாவது, மணிக்கு 2,450 கிமீ வேகம் வரை செலுத்த முடியுமாம்.

 சாதக அம்சங்கள்

சாதக அம்சங்கள்

தற்போதைய இலகு எடை கொண்ட கட்டுமான உலோகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பங்கள் இருப்பதால், இந்த பறக்கும் தட்டு கான்செப்ட்டை உருவாக்குவது சாத்தியமே என்று இதன் டிசைனர் அடோல்போ எஸ்குவெல் தெரிவித்திருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Monday, July 13, 2015, 16:55 [IST]
English summary
The Roswell FS-II is a flying saucer that can take off vertically and fly at speeds up to Mach 2. It was inspired by the Canadian Avro VZ-9 concept built in 1959. It would be powered by two F135 turbofan engines and use vectored thrust in combination with an electromagnetic turborotor to take off from aircraft carriers and fly on covert missions around the world.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+