ரேஞ்ச்ரோவரில் முதல் பயணம் செய்த இங்கிலாந்தின் குட்டி இளவரசர்!
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியினருக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்து உலகமே பேராவலில் இருந்தது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. லண்டனில் உள்ள புனித மேரி மருத்துமனையில் ராஜ குடும்பத்துக்கு புதிய ஆண் வாரிசு பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இங்கிலாந்து மக்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். அரச குடும்பத்துக்கு தங்களது வாழ்த்துக்களை அனுப்பிய வண்ணம் உள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உள்பட பல்வேறு தலைவர்களும் குட்டி இளவரசருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குழந்தை பிறந்து ஒருநாள் ஆன நிலையில், மருத்துவமனையில் இருந்து வில்லியம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ரேஞ்ச்ரோவர் காரில் நேற்று வீடு திரும்பினார்.

மன்னராகும் வாய்ப்பு
குட்டி இளவரசராக அழைக்கப்படும் வில்லியம்- கேட் மிடில்டனின் ஆண் குழந்தை இங்கிலாந்தின் மன்னராகும் வாய்ப்பில் 3வது இடத்தில் இருக்கிறது.

மருத்துவமனையில் இருந்து...
மருத்துவமனையிலிருந்து குழந்தையுடன் வெளியே வரும் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதி.

உற்சாகம்
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் வெளியில் குட்டி இளவரசரை பார்க்க குவிந்திருந்த மக்களை பார்த்து கையசைக்கும் இளவரசர் வில்லியம்.

மிடில்டன் நெகிழ்ச்சி
தனது குழந்தையை பார்க்க குவிந்த மக்களை பார்த்து மிகவும் நெகிழ்ந்துவிட்டதாக கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் பாசம்
குட்டி இளவரசரை படம் பிடிக்க போட்டியிட்ட பத்திரிக்கை புகைப்படக்காரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு தனது குழந்தையுடன் போஸ் தரும் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதி.

முதல் பயணம்
காரில் ஏறுவதற்கு குழந்தையை தூக்கி வரும் இளவரசர் வில்லியம்.

முதல் பயணம்
காரில் முதல் பயணத்தை துவங்கும் குட்டி இளவரசர்.

புறப்படும்போது...
காரில் முதல் பயணத்தை துவங்கும் குட்டி இளவரசர்.

பிரிட்டிஷ் பிராண்டுக்கு முக்கியத்தும்
இங்கிலாந்து அரச குடும்பத்தினர் லேண்ட்ரோவர் மற்றும் ஜாகுவார் பிராண்டு கார்களை பயன்படுத்துவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக, முக்கிய நிகழ்வுகளில் குறிப்பிட்ட காரை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், பட்டம் சூட்டுவதற்கான தகுதி பட்டியலில் 3வது இடத்தில் வந்திருக்கும் தற்போதைய குட்டி இளவரசரை ரேஞ்ச்ரோவர் காரில் வைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ரேஞ்ச்ரோவர்
உலக அளவில் ஆஃப்ரோடு சாகசங்களுக்கும், சொகுசு அம்சங்களையும் ஒருங்கே தரும் எஸ்யூவியாக ரேஞ்ச்ரோவர் புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், இங்கிலாந்தின் பாரம்பரியத்தையும், தொழில்நுட்ப வல்லமையையும் உலகுக்கு கொண்டு சென்று அந்நாட்டுக்கு பெருமையை தேடி தந்ததில் இந்த எஸ்யூவிக்கும் முக்கிய பங்கு உண்டு.

சொகுசு
பயணிகளுக்கு களைப்பு வராத வகையிலான அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சொகுசான இருக்கைகள், பொழுதுபோக்கு அம்சங்களை ரேஞ்ச்ரோவர் கொண்டிருக்கிறது. அதிர்வுகளும் குறைவாக இருக்கும் வகையிலான சேஸீ அமைப்பை கொண்டுள்ளது.

எஞ்சின்
இந்த கார் 4.2லி, 4.4லி, 5.0லி பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், 2.9லி, 3.6லி, 4.4லி ஆகிய டீசல் எஞ்சின் மாடல்களிலும் கிடைக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் எஞ்சின் ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

டாப் ஸ்பீடு
மணிக்கு 209 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த இந்த சொகுசு எஸ்யூவி, 0-100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளிலும் தொட்டுவிடும்.

4 வீல் டிரைவ் சிஸ்டம்
இந்த எஸ்யூவி ஆஃப்ரோடு சாகசங்களுக்கான 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications








