உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் டெலிவிரி: இன்டீரியரை காணும் பாக்கியம்!

Written By:

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வர்ணிக்கப்படும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் நேற்று ராயல் கரீபியன் நிறுவனத்திடம் டெலிவிரி கொடுக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் நஸையரிலுள்ள எஸ்டிஎக்ஸ் ஷிப் யார்டில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் ராயல் கரீபியன் நிறுவனத்தின் அதிபர் மைக்கேல் பெலே, தலைவர் ரிச்சர்டு பெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கப்பலில் பணியாற்ற இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் டெலிவிரி பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தநிலையில், இந்த கப்பலின் இன்டீரியர் படங்களை காணும் பாக்கியம் கிட்டியிருக்கிறது. அந்த படங்களையும், இந்த கப்பல் பற்றி வியக்க வைக்கும் கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

இரவு பகலாக...

இரவு பகலாக...

பிரான்ஸ் நாட்டிலுள்ள எஸ்டிஎக்ஸ் ஷிப் யார்டில் 2013ம் ஆண்டு செப்டம்பரில் இந்த கப்பல் கட்டும் பணிகள் துவங்கின. கிட்டத்தட்ட 2,500 பணியாளர்கள் இரவு பகலாக இந்த கப்பலை கட்டும் பணியில் ஈடுபட்டனர். 10 மில்லியன் மணி நேர மனித ஆற்றலில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் 40 மாதங்களில் கட்டப்பட்டு இருக்கிறது.

மிதக்கும் நகரம்

மிதக்கும் நகரம்

பல்வேறு பிரம்மாண்டங்களை கொண்ட இந்த மிதக்கும் நகரத்தில் 6,360 விருந்தினர்களும், 2,100 பணியாளர்கள் என மொத்தமாக ஒரே நேரத்தில் 8,500 பேர் வரை பயணிக்க முடியும்.

 பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

இந்த கப்பல் 217 அடி அகலம் கொண்டது. இதுவரை கட்டப்பட்ட சொகுசு கப்பல்களிலேயே அதிக அகலம் கொண்ட கப்பல் இதுதான். மேலும், 362 மீட்டர் நீளம், அதாவது ஈபிள் கோபுரத்துடன் ஒப்பிடும்போது 50 மீட்டர் கூடுதல் நீளம் கொண்டது. 16 அடுக்குகளை கொண்ட பிரம்மாண்ட மிதக்கும் நகரமாக இருக்கிறது.

நீர் சாகச விளையாட்டு

நீர் சாகச விளையாட்டு

இந்த சொகுசு கப்பலில் ஒரேநேரத்தில் 1,400 பேர் அமரும் வசதி கொண்ட திரையரங்கம், 16வது மாடியிலிருந்து 6வது மாடியுடன் இணைக்கப்பட்டிருக்கும் 100 அடி உயர பிரம்மாண்ட நீர் சறுக்கு, நீர் சாகச விளையாட்டு அமைப்புகளை கொண்டுள்ளது.

பயோனிக் பார்

பயோனிக் பார்

ரோபோட் மூலமாக மதுவகைகளை பரிமாறும் பயோனிக் பார் என தனது சகோதர சொகுசு கப்பல்களை விஞ்சிய வசதிகளை கொண்டிருக்கிறது.

பிரம்மாண்ட பூங்கா

பிரம்மாண்ட பூங்கா

இந்த கப்பலின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவில் 12,000 வகை தாவர வகைகள் உள்ளன. இது இந்த கப்பலில் பயணிப்போரின் மனதை கவரும் அம்சமாக இருக்கும். இதுதவிர, அதிசய உலகம் என்ற பூங்காவும் பயணிகளை குதூகலிக்கச் செய்யும்.

ஷாப்பிங் தெரு

ஷாப்பிங் தெரு

கப்பலிலேயே ஷாப்பிங் செய்வதற்கான கடைகள் அடங்கிய ஷாப்பிங் தெருவும் உள்ளது.

ஆடிட்டோரியம்

ஆடிட்டோரியம்

இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இந்த கப்பலில் மிகப்பெரிய கூட்ட அரங்கமும் உள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த கப்பலில் உள்ள 23 நீச்சல் குளங்களில் 4.7 மில்லியன் பவுண்ட் அளவு நீரை நிரப்பும் வசதி, வெந்நீர், நீர் விளையாட்டு பூங்கா போன்றவை பயணிகளுக்கு பரவசத்தை அளிக்கும் என ராயல் கரீபியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூதாட்ட விடுதி

சூதாட்ட விடுதி

இந்த கப்பலில் சூதாட்ட விடுதியும் உள்ளது.

சூட் அறைகள்

சூட் அறைகள்

இந்த கப்பலில் கடலின் அழகை ரசித்துக் கொண்டே பயணிப்பதற்கான மிக சொகுசான சூட் அறைகள் உள்ளன.

மிதக்கும் சொர்க்க லோகம்

மிதக்கும் சொர்க்க லோகம்

மொத்தத்தில் மிதக்கும் சொர்க்க லோகமாக பயணிகளை பரவசப்படுத்த தயாராகி இருக்கிறது ஹார்மோனி ஆஃப் தி சீஸ்.

இடைவெளி

இடைவெளி

கடந்த 2009ம் ஆண்டு இதன் வகையிலான ஆலூர் ஆஃப் தி சீஸ் மற்றும் 2010ம் ஆண்டு ஓஸிஸ் ஆஃப் தி சீஸ் ஆகிய சொகுசு கப்பல்களை தொடர்ந்து 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மற்றொரு உலகின் பிரம்மாண்ட சொகுசு கப்பலை சேவைக்கு களமிறக்க உள்ளது அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரீபியன் நிறுவனம்.

மதிப்பு

மதிப்பு

1.8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த கப்பல் கட்டப்பட்டு இருக்கிறது. இதுவரை கட்டப்பட்ட உலகின் மிகவும் காஸ்ட்லியான கப்பல்களில் ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது.

 முதல் பயணம்

முதல் பயணம்

பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் நஸையரில் உள்ள ஷிப் யார்டிலிருந்து வரும் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்தில் உள்ள சவுதம்ப்டன் துறைமுகத்திற்கு செல்கிறது. அங்கிருந்து மே 22ந் தேதி புறப்பட்டு பார்சிலோனா செல்கிறது. வரும் அக்டோபர் மாத இறுதியிலிருந்து சுற்றுலா பயணங்களை முறைப்படி துவங்க இருக்கிறது.

பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Source 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Royal Caribbean Takes Delivery of World's Largest Cruise Ship.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark