அரச குடும்பத்தினரின் கார்களும், அதில் மறைந்திருக்கும் சுவாரஸ்யங்களும்...!!!

Posted By:

ஆட்டோமொபைல் துறை வரலாற்றிலும், வளர்ச்சியிலும் உலகம் முழுவதும் இருந்த அரச குடும்பத்தினரின் பங்கு முக்கியமானது. சில நிறுவனங்கள் அரச குடும்பத்தினரின் ஆர்டர்களை வைத்தே, பிரபலத்தையும், பெரும் சம்பாத்தியத்தையும் பெற்றன.

மேலும், பணத்துக்கு பஞ்சமில்லாமலும், எதிலும் தனக்கென ஒரு தனி முத்திரை வேண்டும் என்று நினைப்பது பல அரச குடும்பத்தினரின் வாடிக்கை. அவ்வாறு, உலகில் சில அரச குடும்பத்தினரின் கார்களில் இருக்கும் விசேஷ அம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 01. ராஜ்கோட் மஹாராஜா கார்

01. ராஜ்கோட் மஹாராஜா கார்

1934ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் குஜராஜ் மாநிலம், ராஜ்கோட் மஹாராஜாவுக்காக கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது. அவரது 11 கார்களில் இதுவும் ஒன்றாக அன்றைய காலத்தில் பெருமை சேர்த்தது. ஹென்றி ராய்ஸ் டிசைன் செய்த கடைசி ரோல்ஸ்ராய்ஸ் கார் மாடல் என்ற பெருமைக்குரிய இந்த காரை, 1968ம் ஆண்டு ஐரோப்பாவை சேர்ந்த ஒருவரிடம் ராஜ்கோட் மஹாராஜா குடும்பத்தினர் விற்று விட்டனர். இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்த பெபுள் பீச் விண்டேஜ் கார் திருவிழாவில் இந்த கார் ஏலத்திற்கு வந்தது. அதனை ராஜ்கோட் மஹாராஜாவின் பேரன் மந்ததஷின் ஜடேஜா ரூ.3.22 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து மீண்டும் இந்தியா கொண்டு வந்தார். அந்த காரை தனது தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இந்த காரின் விசேஷ அம்சம், காவி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் மாடல் என்பதுடன், குஜராத்தில் முதல் கார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் சிறப்பான பராமரிப்பில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 02. மெர்சிடிஸ் புல்மேன் 600

02. மெர்சிடிஸ் புல்மேன் 600

கரகாட்டக்காரன் படத்தில் வரும் காருக்கும், இந்த காருக்கும் ஒரு விதத்தில் ஒத்துப் போகிறது. உலகின் பல்வேறு நாட்டு அரச குடும்பத்தினரின் கையில் இருந்த, இந்த மெர்சிடிஸ் புல்மேன் 600 கார் இப்போது, பெல்ஜியம் அரச குடும்பத்தினரிடம் உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட பெல்ஜியம் நாட்டு அரசர் பாதின், இந்த காரை ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக மாற்றி பயன்படுத்தினார் என்பதே இதன் விசேஷம்.

03. லுமா சிஎல்ஆர் 730ஆர்எஸ்

03. லுமா சிஎல்ஆர் 730ஆர்எஸ்

சவூதி அரேபிய மன்னர் சாத் பின் அப்துல்லா பின் அப்துலாஸிஸ் அல் சவுத்திற்காக, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல கார் கஸ்டமைஸில் புகழ்பெற்ற லுமா நிறுவனம் மாறுதல்களை செய்து கொடுத்த மாடல். பிஎம்டபிள்யூ எம்5 இ60 கார் மாடலையே இவ்வாறு பல்வேறு கூடுதல் விசேஷங்களுடன் மாற்றிக் கொடுத்துள்ளனர். மன்னர் மட்டுமல்ல, இளவரசரும் பயன்படுத்தும் விசேங்களை கொண்டிருக்கிறது இதன் கஸ்டமைஸ் வேலைப்பாடுகள்.

04. லெக்சஸ் எல்எஸ் 600எச் லான்டலெட்

04. லெக்சஸ் எல்எஸ் 600எச் லான்டலெட்

மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்டின் திருமணத்திற்காக ஆர்டர் செய்யப்பட்ட கார் மாடல் இது. இதன் விசேஷம் என்னவெனில், இதன் கூரை முழுவதும் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கரத் டச்சடிலெட் என்ற சொகுசு கார் கஸ்டமைஸ் நிறுவனம் இந்த காரை கஸ்டமைஸ் செய்து கொடுத்தது. இந்த கார் மிட்நைட் புளூ என்ற பிரத்யேக வண்ணம் தீட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

05. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

05. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

சவூதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் அல் சவுத்தின் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் கார் மாடல். இந்த காரில் விசேஷ ஓக் மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எல்சிடி டெலிவிஷன், தனித்தனி ஏசி வென்ட்டுகள், ஷாம்பெயின் ஸ்டோரேஜ் வசதி என எண்ணிலடங்கா வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கினார்.

06. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி55 ஏஎம்ஜி

06. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி55 ஏஎம்ஜி

உலகில் அதிக கார்களை வைத்திருப்பவர்களில் ஒருவரான துபாய் மன்னர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும் தினசரி பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் மாடல்தான் இது. இந்த காரில் சக்திவாய்ந்த எஞ்சின், வசதிகள் இருக்கிறது. கார்பன் ஃபைபர் பாடி கிட், நான்கு ஸினான் ஹை பீம் ஹெட்லைட்டுகள், 8 பனி விளக்குகள் என்று தாறுமாறாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடல்.

07. பகனி ஸோண்டா

07. பகனி ஸோண்டா

செல்வ வளம் கொழிக்கும் கத்தார் அரச குடும்பத்தினரின் இந்த கார் விசேஷ வெளிர் நீல வண்ணத்தை கொண்டது. 7.3 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார் 690 குதிரைசக்தி திறன் கொண்டது. இந்த காரின் விசேஷம், கத்தார் அரச குடும்பத்தினரின் அனைத்து கார்களும் இதே வெளிர் நீல வண்ணத்தில்தான் இருக்கும். அதே வரிசையில், இந்த காரை கஸ்டமைஸ் செய்து வாங்கினர். மேலும், இதுதான் கடைசியாக தயாரிக்கப்பட்ட பகனி ஸோண்டா கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

08. பென்ட்லீ ஸ்டேட் லிமோசின்

08. பென்ட்லீ ஸ்டேட் லிமோசின்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ கார். குண்டு துளைக்காத வசதி, முழுவதும் கண்ணாடி கூரை, அதிக உயரம் கொண்ட கூரை அமைப்பு, 90 டிகிரி வரை திறக்கும் கதவு அமைப்பு என்று விசேஷமாக உருவாக்கப்பட்ட கார் மாடல் இது.

09. புருனே சுல்தான்

09. புருனே சுல்தான்

புருனே நாட்டின் 29வது சுல்தான் ஹசனலும் உலகில் அதிக கார்களை வைத்திருப்பவர்களின் பட்டியலில் முதன்மையானவர். உலகில் அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர்களில் முதன்மையானவர். அவர் பயன்படுத்தும் ரோல்ஸ்ராய்ஸ் காரில் சிசர் டோர் இருப்பதே முக்கிய விசேஷம்.

10. டொயோட்டா லிமோ

10. டொயோட்டா லிமோ

ஜப்பான் நாட்டு மன்னரின் அதிகாரப்பூர்வ கார் மாடலை டொயோட்டா தயாரித்து கொடுத்திருக்கிறது. 20 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட இந்த லிமோசின் காரில் 20 பேர் வரை பயணிக்க முடியுமாம். இந்த காரில் 5.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. குண்டு துளைக்காத வசதி கொண்டது.

11. அஸ்டன் மார்ட்டின் டிபி6 மார்க்-II வோலன்டே

11. அஸ்டன் மார்ட்டின் டிபி6 மார்க்-II வோலன்டே

இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் பாரம்பரிய விழாக்களில் பயன்படுத்தும் கார். இந்த காரின் விசேஷம் என்னவெனில், ஆல்கஹால் எரிபொருளில் இயங்கும் இந்த காருக்கான எரிபொருள், இங்கிலாந்து அரண்மனைக்கு சொந்தமான தோட்டத்தில் விளையும் திராட்சையிலிருந்து எடுக்கப்படும் ஆல்கஹால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. லிட்டருக்கு 2 கிமீ மைலேஜ் தருமாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Over the past century or so certain automakers have gained a name for themselves in producing ultra luxurious automobiles and they, by default are also rides used by royals. Learn more about a few such cars owned by kings and queens in this list.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark