டூவீலருக்கு ஏர்பேக் வந்துடுச்சு! விலை இவ்வளவு கம்மியா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் பவர்ஃபுல் பைக்குகளை தயாரித்த வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இ்நநிறுவனம் டூவீலர்களுக்கான ஏர்பேக் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காலணாம் வாருங்கள்.

கார்களில் பயணிக்கும் போது கார் எகதிர்பாராத விதமான விபத்தில் சிக்கினால் காரில் இருக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கவும், அவர்களுக்கு பாதிப்பை குறைக்க அல்லது தடுக்க அது உதவும். இது தற்போது கார்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் டூவீலரில் செல்பவர்களுக்கும் இப்படியாக ஏர்பேக் வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் மத்தியில் பேச்சு எழுந்து வந்தது.

Royal Enfield Airbag Vest

இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டோர் வாகன பயணங்களுக்கான உபரங்களை விற்க தனி பிராண்ட் ஒன்றை நடத்திவருகிறது. இதில் சமீபத்தில் புதிய தயாரிப்புகளை அறிமகப்படுத்தியளு்ளது. இதில்முக்கியமாக ஏர்பேக் வெஸ்ட் என்ற தயாரிப்பு இடம் பெற்றது. இது ரூ35,000 என்ற விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது டூவீலர்களுக்கான ஏர்பேக் போல செயல்படும்.

டூவீலரில் பயணித்துக்கொண்டிருகு்கும்போது விபத்தில் சிக்கி இதை அணிந்திருப்பவர் கீழே விழும் போது இதில் உள்ள ஏர்பேக் உடனடியாக விரிந்து அவரது ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். இ்நத தயாரிப்பு ரூ35,000 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதே போல இந்த வெஸ்ட் கேட்ரேஜை மாற்றும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முறை கேட்ரேஜை மாற்ற ரூ2000 செலவாகும்.
இதுபைக்கில் பயணிப்பவர்களுக்கு சுலபமாக இருகு்கும். இது சிஇ சான்று பெற்ற தயாரிப்பாகும். நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பிற்காக இது ஒரு நல்ல தயாரிப்பாக உள்ளது.

இது ரைடரின் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. பின்பக்க பாதுகாப்பிற்காக லெவல் 2 பாதுகாப்பை வழங்குகிறது. இந்த ஏர்பேக் வெறும் 100 மில்லி நொடிகளிலேயே காற்றி ஏற்றி விரிந்துவிடும். இந்நிறுவனம் இந்த ஏர்பேக்கிற்கு 2 ஆண்டுகள் வாரண்டியும் கேட்ரேஜிற்கு 10 ஆண்டுகள் வாரண்டியும் வழங்குகிறது.

இந்த தயாரிப்பை அந்நிறவனம் மோட்டோவெர்ஸ் 2025 நிகழ்ச்சியில் மற்ற ரைடிங் கியர், கம்யூனிகேசன் டெக், உள்ளிட்ட அம்சங்களுடன் சேர்த்து ெவளியிட்டுள்ளது. இது போக அந்நிறவனம் காமிக் ஹெல்மெட்டையும் வெளியள்ளது. இது நல்ல தரமானதாகவும் அத நேரம் நீண்ட தூர பயணத்திற்கு ஏர்ஃப்ளோ இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோட்டோவெர்ஸ் எக்ஸ் 2 நிகழ்ச்சியில் இந்நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ப்ளூடூத் கம்யூனிகேஷன் சிஸ்ட்ததை வெளியிட்டுள்ளது. இதனால் ரைடர்கள் எப்பொழுதும் கனெக்டிவிட்டியலேயே இருக்க முடியம். முக்கியமாக நேவிகேஷன் மற்றும் போன் பேச இது உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது மக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்ட தூரும் பயணிப்பவர்கள், ஆஃப்ரோடு பயணம் செய்பவர்களுக்க இது மிக பயனுள்ளதாக இருக்கும் சான்றிழிக்கபபட்ட தயாரிப்பு குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது நிச்சயம் மிகப்பெரிய சாதனை தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃஜபீல்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் பல்வேறு விதமான தயாரிப்புகளை வெளியிடும் அப்டியான ஒரு தயாரிப்பு தான் இது. இது நிச்சயம் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 29, 2025, 11:45 [IST]
English summary
Royal enfield airbag vest launch price 35000 india
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+