வேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...

அதிகவேகமாகச் சென்றுக்கொண்டிருக்கும் திடீரென ராயல் என்பீல்டின் அலாய் உடைந்து விபத்துக்குள்ளானது. அதிர்ச்சியான வைரல் வீடியோ குறித்த செய்தியை இந்த பதிவில் காணலாம்.

வேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...

இளைஞர்கள் மத்தியில் அதிகம் மவுசுக் கொண்டதாக ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. இதன் அசத்தலான தோற்றத்தில் மோகம் கொண்ட இளைஞர்கள் இதன் அலாதி பிரியம் கொண்டுள்ளனர். இதனால், இதன் விற்பனை தனிக்காட்டு ராஜாவாக கொடிகட்டி பறந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக இந்த பைக்கின் விற்பனையானது தொடர் சரிவைக் கண்டு வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

வேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...

அதன்படி, பாரம்பரியமிக்க தோற்றத்தில் களமிறக்கப்பட்ட ஜாவா பைக்கின் வருகை மற்றும் அந்த நிறுவனத்தின் சென்னை பிளாண்டில் நடைபெற்ற ஊழியர்கள் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்கள் இந்த சரிவிற்கு காரணமாக கூறபடுகிறது. இருப்பினும், ராயல் என்பீல்ட் பைக் மீது காதல் கொண்ட இளைஞர்கள் இன்றளவும், எள்ளளவுகூட ஆசை குறையாமல் பார்த்து இருந்து வருகின்றனர்.

வேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...

அதேபோன்று, இந்த மோட்டார் சைக்கிளை வாங்கும் சிலர், அதன் தயாரிப்பாளர் வழங்கிய சில பாகங்களை மாற்றி, ஸ்டைலிஸான தோற்றத்தைக் கொடுக்கும் எக்ஸ்டெர்னல் அணிகலன்களைப் பொறுத்துகின்றனர். அவ்வாறு, சமீபத்தில் இளைஞர் ஒருவர், அவரது ராயல் என்பீல்ட் கிளாசிக் பைக்கில், ஒரு சில மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி, மோட்டார்சைக்கிளின் முன் மற்றும் பின்பக்க வீலினை அலாய் வீலாக மாற்றியுள்ளார்.

வேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...

இந்த நிலையில், அவர் கடந்த வாரம் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது திடீரென அவரது அலாய் முழுமையாக உடைந்து, இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில், சிறியக் காயங்களுடன் அவர் தப்பித்தார். இதுகுறித்த பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை ராயல்என்பீல்டு பைக் கிளப்பினர் முகப்புத்தகத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர்.

வாகனங்களின் உதிரிபாகங்களை மாற்றும்போது எந்த அளவிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ பதிவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

வேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...

அந்த வீடியோ காட்சியில், இளைஞர் சாலையில் ரயால் என்பீல்டு கிளாசிக் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு முன்பாக ஒரு சில வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன. அதனைக் கடந்த அவர், அவருக்கு முன்பாக வாகனங்கள் எதுவும் இல்லாதநிலையில், சற்று வேகமாக தனது மோட்டார்சைக்கிளை இயக்க ஆரம்பிக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார்சைக்கிளின் முன்பக்க அலாய் வீல் முழுமையாக உடைந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த அதிர்ச்சி விபத்தில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார்.

வேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...

இந்த விபத்தில் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்புகிறார். கையுரை மற்றும் ஹெல்மெட் உள்ளிட்ட சில பாதுகாப்பு கவசங்களை அவர் அணிந்திருந்ததே இதற்கு காரணம். இதனால், அவருக்கு நேரவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தின் அத்தனை காட்சிகளும் அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் இருந்த கேமிராவில் பதிவாகி இருந்தது.

இந்த விபத்திற்கு முக்கிய காரணம், தரமற்ற அலாய் வீல் தான். இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை மலிவான விலையில் விற்பனைச் செய்யும் சிலர், தரமற்ற பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். இதுபோன்ற தரமற்ற வீல் வண்டியின் வேகத்தை தாங்க முடியாமல் சில காலங்களிலேயே சேதமடைந்து விடுகிறது.

வாகனத்தின் வீலைப் பொறுத்தவரை, வேகத்தின் அழுத்தமானது வீலில்தான் செலுத்தப்படுகிறது. ஆகையால், தரமற்ற அலாய் வீலை நம் வாகனங்களில் பயன்படுத்துவதனால், அவை வானத்தின் வேகமான அழுத்தத்தை தாங்கிக்கொள்ளாமல் சாலையில் வேகமகா செல்லும்போது உடைந்து, இதுபோன்ற விபத்தை ஏற்படுத்துகிறது.

வேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...

ஆகையால், வாகனத்தில் ஏதேனும் பாகம் மாற்றவேண்டுமானால், தேர்ந்தெடுக்கப்பட்ட, நற்சான்றுடன் இயங்கும் நிறுவனங்களில் உதிரிபாகங்களில் வாங்குவதே நமக்கு நன்மையை ஏற்படுத்தும். மாறாக சில நூறுகளை மிச்சப்படுத்த நினைத்து வீண் ஆபத்தினை பெரும்செலவில் வாங்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாகும்.

Source: Rushlane

Article Published On: Thursday, March 14, 2019, 13:48 [IST]
English summary
Royal Enfield Alloy Wheel Gets Break While Speedy Drive Video. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+