பெட்ரோல் இல்லாம பைக் நடுவழியில் நின்னுட்டா இப்படி கூட பண்ணலாமா! இந்த ஐடியா நமக்கு தோணாம போயிருச்சே!

பைக்குகளில் பயணம் செய்யும்போது, திடீரென பெட்ரோல் தீர்ந்து, நடுவழியில் தவித்த நிகழ்வுகள், நம் பலருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது நடந்திருக்கும். இது போன்ற சமயங்களில் எல்லாம் நமக்கு முன்பு ஒரு சில ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தன. ஒன்று நாம் பெட்ரோல் பங்க் வரை பைக்கை தள்ளி கொண்டு செல்ல வேண்டும்.

இல்லாவிட்டால் நண்பர்களை செல்போன் மூலம் அழைத்து, பெட்ரோல் வாங்கி வர சொல்ல வேண்டும். இதுவும் முடியாவிட்டால், சாலையில் செல்லும் யாராவது ஒருவர் பைக்கை தள்ள உதவி செய்ய வேண்டும். முன்பெல்லாம் நடுவழியில் பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டால், நமக்கு இது போன்ற ஒரு சில ஆப்ஷன்கள் மட்டுமே நமக்கு இருந்தன.

Royal Enfield Bike Rider

ஆனால் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இதை பயன்படுத்தி, இளைஞர் ஒருவர் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். நடுவழியில் பைக்கில் பெட்ரோல் தீர்ந்து போன நிலையில், அவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். இது இதற்கு முன்பு நாம் பெரிதாக கேள்விப்படாத ஒரு வழி ஆகும். அது என்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

shubham.parmarvlogs என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு வைரல் வீடியோ (Viral Video) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் ரேபிடோ பைக் டாக்ஸி ரைடர் ஒருவர், பைக்கை 'புக்' செய்திருந்த பயணி ஒருவரை தேடி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த பயணியை கண்டுபிடித்ததும், ரேபிடோ பைக் டாக்ஸி ரைடர் குழம்பி விட்டார்.

Royal Enfield Bike Rider Uses Rapido To Fill Petrol

ஏனெனில் அந்த பயணி ஏற்கனவே பைக்குடன் நின்று கொண்டிருந்தார். அது ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக் ஆகும். இது குறித்து பயணியிடம் கேட்டபோது, தன்னுடைய ராயல் என்பீல்டு பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். எனவே பெட்ரோல் நிரப்ப தனக்கு உதவி செய்ய வேண்டும் என அவர், ரேபிடோ பைக் டாக்ஸி ரைடரிடம் கேட்டு கொண்டார்.

இதன் காரணமாகவே ரேபிடோ பைக் டாக்ஸியை 'புக்' செய்ததாகவும், அவர் தெரிவித்தார். ஆனால் முதலில் அவருக்கு உதவி செய்ய ரேபிடோ பைக் டாக்ஸி ரைடர் சற்று தயங்கினார். ஏனெனில் ராயல் என்பீல்டு பைக் எடை அதிகமானது. அதை ஸ்கூட்டர் மூலமாக உந்தி தள்ள உதவி செய்தால், இன்ஜின் பாதிக்கப்படலாம் என்ற ரீதியில் அவர் யோசித்தார்.

இருப்பினும் இறுதியில், ராயல் என்பீல்டு பைக் ரைடருக்கு உதவி செய்ய, ரேபிடோ பைக் டாக்ஸி ரைடர் ஒப்பு கொண்டார். இதன் பின் ராயல் என்பீல்டு பைக் ரைடர் முன்னால் செல்ல, அந்த பைக்கை பெட்ரோல் பங்க் வரை, பின்னால் இருந்து உந்தி தள்ள, ரேபிடோ பைக் டாக்ஸி ரைடர் உதவினார். இறுதியில் பெட்ரோல் பங்க் வந்ததும், ரேபிடோ பைக் டாக்ஸி ரைடர் பணத்தை பெற்றுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு போன்ற அதிக எடை கொண்ட பைக்கை, தொலைவில் உள்ள பெட்ரோல் பங்க் வரை தள்ளி செல்வது என்பது மிகவும் சிரமமான காரியம். எனவே ராயல் என்பீல்டு பைக் ரைடர் சமயோசிதமாக யோசித்துள்ளார் என்றே நாங்கள் கருதுகிறோம்.

பெரு நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு, நடுவழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால், ரேபிடோ பைக் டாக்ஸி மூலம் பெட்ரோல் பங்க் வரை செல்லும் ஐடியா ஏற்கனவே தோன்றியிருக்கலாம். ஆனால் அதை எத்தனை பேர் செயல்படுத்தியிருப்பார்கள்? என்பது சந்தேகம்தான். எனவேதான் இந்த ராயல் என்பீல்டு பைக் ரைடரின் செயல், செய்தியாக மாறியுள்ளது.

இருப்பினும் நடுவழியில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றால், வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போதே, எவ்வளவு பெட்ரோல் உள்ளது? என்பதை 'செக்' செய்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அவசரமாக அலுவலகம் அல்லது மருத்துவமனை போன்ற இடங்களுக்கு சென்று கொண்டிருக்கும்போது, நடுவழியில் தவிக்க நேரிடலாம்.

Image Source: @shubham.parmarvlogs via Instagram

More from DriveSpark

Article Published On: Friday, July 11, 2025, 23:24 [IST]
English summary
Royal enfield bike rider uses rapido to fill petrol viral video full details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+