Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 3 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இளைஞரின் சேட்டை... சூடாக இருக்கும் புல்லட் பைக்கின் சைலென்சரில் பாப்கார்ன் செய்ய முடியுமா? வீடியோ
இளைஞர் ஒருவர் புல்லட் பைக்கின் சைலென்சரை பயன்படுத்தி பாப்கார்ன் செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ராயல் என்பீல்டு பைக்குகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளை டிராக் ரேஸ்களில் ஈடுபடுத்திய நிகழ்வுகள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம்.

அத்துடன் ராயல் என்பீல்டு பைக்குகளில் செய்யப்பட்ட வித்தியாசமான மாடிஃபிகேஷன்கள் பற்றியும் நாம் பல முறை கேள்விபட்டுள்ளோம். இது தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏராளமான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால் யூ-டியூபர் ஒருவர் தனது ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் மிகவும் வித்தியாசமான காரியம் ஒன்றை தற்போது செய்துள்ளார்.

ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) மோட்டார்சைக்கிளை, பாப்கார்ன் செய்வதற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். ராயல் என்பீல்டு பைக்கை பயன்படுத்தி ஒருவரால் செய்யப்பட்ட மிகவும் வித்தியாசமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக இதனை கூறலாம். சோனு பிளாகா என்ற யூ-டியூப் சேனலில் இதுதொடர்பான காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தனது புல்லட் 350 பைக்கின் சைலென்சரை பயன்படுத்தி, பாப்கார்ன் செய்யும் தனது திட்டத்தை இளைஞர் ஒருவர் விவரிப்பதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. இந்த காணொளியில் கூறப்பட்டிருக்கும் தகவல்களின்படி, சோதனை செய்யப்படுவதற்கு முன்பாக, ராயல் என்பீல்டு புல்லட்டை சிறிது தூரம் ஓட்டியுள்ளனர்.

இதன் காரணமாக சைலென்சர் கொஞ்சம் சூடாக இருந்துள்ளது. இதன்பின் காய்ந்த மக்காசோளத்தை சிறிது கொண்டு வந்து, பைக்கின் சைலென்சருக்கு உள்ளே அவர் போடுகிறார். அந்த சமயத்தில் சைலென்சர் கொஞ்சம்தான் சூடாக இருந்துள்ளது. பெரிய அளவில் வெப்பமாக இல்லை. இதையெல்லாம் செய்யும் முன்பாக பைக்கை ஆஃப் செய்து விட்டனர்.

அதாவது பைக்கை ஆஃப் செய்த பிறகே, காய்ந்த மக்காசோளம் சைலென்சருக்குள் போடப்பட்டது. உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக காய்ந்த மக்காசோளம் வெளியே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பைக் ஆஃப் செய்யப்பட்டது. இதன்பின் அங்கிருந்த தனது நண்பரிடம் பைக்கை ஸ்டார்ட் செய்யுமாறு, அந்த இளைஞர் கூறுகிறார்.

பைக் ஸ்டார்ட் செய்யப்பட்ட சமயத்தில், சைலென்சரின் வாய் பகுதியை அந்த இளைஞர் கருப்பு துணியை வைத்து மூடி கொண்டார். அதன்பின்னர் கொஞ்ச நேரத்திற்கு பைக்கின் ஆக்ஸலரேட்டர் மிக வேகமாக முறுக்கப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் கழித்து, சைலென்சரின் வாய் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த துணியை அந்த இளைஞர் அகற்றினார்.

அப்போது சைலென்சர் உள்ளே இருந்து பாப்கார்ன் தெறித்து கொண்டு வந்து வெளியே விழுந்தது. காய்ந்த மக்காசோளங்கள், பாப்கார்னாக மாறியிருந்தன. பொதுவாக ராயல் என்பீல்டு பைக்கின் சைலென்சர்கள் மிகவும் சூடாக இருக்கும். கொஞ்ச நேரம் பைக்கை ஓட்டினாலே, சைலென்சர்கள் மிகவும் சூடாகி விடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
எனவே மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி பாப்கார்ன் தயாரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பைக்கின் சைலென்சரில் தயாரிக்கப்பட்ட பாப்கார்னை சாப்பிடுவது என்பது நல்ல யோசனை கிடையாது. இது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.