புல்லட் பைக்கில் மணல்மேட்டின் மீது ஜம்ப் செய்த இளைஞர்கள்... கீழே விழுந்ததுதான் மிச்சம்... வீடியோ!

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் மணல்மேட்டின் மீது ஜம்ப் செய்த இளைஞர்கள், நிலை தடுமாறி கீழே விழுந்த காணொளி வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புல்லட் பைக்கில் மணல்மேட்டின் மீது ஜம்ப் செய்த இளைஞர்கள்... கீழே விழுந்ததுதான் மிச்சம்... வீடியோ!

மோட்டோக்ராஸ் பந்தயங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது, வீரர்கள் எப்படி மோட்டார்சைக்கிளில் 'ஜம்ப்' செய்கிறார்கள் என நாம் ஆச்சரியம் அடைவதுண்டு. அதேபோன்று நாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் இத்தகைய முயற்சிகள், தவறாக முடிந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புல்லட் பைக்கில் மணல்மேட்டின் மீது ஜம்ப் செய்த இளைஞர்கள்... கீழே விழுந்ததுதான் மிச்சம்... வீடியோ!

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில், இரண்டு பேர் மணல்மேட்டின் மீது 'ஜம்ப்' செய்ய முயன்றுள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களால் அதனை சரியாக செய்ய முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளனர்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

புல்லட் பைக்கில் மணல்மேட்டின் மீது ஜம்ப் செய்த இளைஞர்கள்... கீழே விழுந்ததுதான் மிச்சம்... வீடியோ!

தி மல்லுஸ் வேர்ல்டு என்ற யூ-டியூப் சேனலில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில், இரண்டு பேர் மணல்மேட்டின் மீது 'ஜம்ப்' செய்ய முயல்வதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. இந்த மணல்மேடு இயற்கையாகவே அமைந்த ஒன்றாக தெரிகிறது.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350? வீடியோ!

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை ரைடர் வேகமாக ஓட்டி வருகிறார். அவர் பின்னால் மற்றொருவர் அமர்ந்துள்ளார். மணல்மேட்டின் மீது மோதியதும், அவர்கள் சற்று நேரம் காற்றில் பறக்கின்றனர். ஆனால் அந்த பைக் பத்திரமாக தரையிறங்கவில்லை. நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டது. பைக்கில் இருந்த இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

புல்லட் பைக்கில் மணல்மேட்டின் மீது ஜம்ப் செய்த இளைஞர்கள்... கீழே விழுந்ததுதான் மிச்சம்... வீடியோ!

அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது போல் தெரியவில்லை. அவர்கள் இரண்டு பேருமே ஹெல்மெட் அணியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற விபரீத முயற்சிகளின்போது, ஹெல்மெட் அணியாமல் இருந்தால், அது சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விடும்.

புல்லட் பைக்கில் மணல்மேட்டின் மீது ஜம்ப் செய்த இளைஞர்கள்... கீழே விழுந்ததுதான் மிச்சம்... வீடியோ!

ஹெல்மெட் அணியாதது மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு தவறுகளையும் அவர்கள் செய்துள்ளனர். முதலில் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை பயன்படுத்தியதே தவறுதான். அந்த பைக்கின் எடை சுமார் 190 கிலோ. ஆனால் பெரும்பாலான மோட்டோக்ராஸ் பைக்குகளின் எடை வெறும் 100 கிலோ என்ற அளவில்தான் இருக்கும். அதாவது புல்லட்டின் எடையில் பாதிதான் இருக்கும்.

புல்லட் பைக்கில் மணல்மேட்டின் மீது ஜம்ப் செய்த இளைஞர்கள்... கீழே விழுந்ததுதான் மிச்சம்... வீடியோ!

அத்துடன் பின்னால் ஒருவரை அமர வைத்து கொண்டு இந்த முயற்சியை செய்ததும் தவறுதான். ராயல் என்பீல்டு புல்லட் பைக் ஏற்கனவே எடை மிகுந்தது என்னும் சூழலில், இது பைக்கின் மீது இன்னும் அதிக எடையை ஏற்றியது போல் அமைந்து விட்டது. இப்படி செய்தால், முடிவு மோசமாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேதான் இங்கும் நடந்துள்ளது.

அத்துடன் மோட்டோக்ராஸ் பைக்குகள், இதுபோன்ற சாகசங்களை செய்வதற்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்போது சாதாரண கம்யூட்டர் பைக்குகள் அல்லது க்ரூஸர் பைக்குகளில் இதுபோன்ற ஸ்டண்ட்களை செய்வதும் தவறுதான். அத்துடன் போதிய பயிற்சி இல்லாமலும் ஸ்டண்ட்களை செய்வது ஆபத்துதானது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Royal Enfield Bullet Accident - Video. Read in Tamil
Story first published: Monday, November 23, 2020, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X