இப்படியும் மனிதர்கள்... கழுத்தில் இருப்பது மட்டும் எத்தனை கிலோ தெரியுமா?

எப்போதும் கிலோ கணக்கில் தங்கத்தை அணிந்துக் கொண்டு சுற்றி திரியும் மனிதர்களை இந்தியாவில் பரவலாக நிறைய இடங்களில் காண முடியும். நம் தமிழ்நாட்டில் கூட ஹரி நாடார் போன்றோரை பார்த்திருப்பீர்கள். ஹரி நாடாருக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை பீகாரை சேர்ந்த கோல்டு மேன் எனப்படும் பிரேம் சிங். இன்னும் சொல்ல போனால், பிரேம் சிங் ஒருபடி மேலே சென்று தனது ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளுக்கும் கோல்டு முலாம் பூசியுள்ளார். யார் இந்த பிரேம் சிங்? இவரிடம் இருப்பது எந்த மாதிரியான ராயல் என்ஃபீல்டு பைக் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் விளம்பரத்தை தேடி இவ்வாறு எப்போதும் கெத்தாக பொது வெளியில் உலா வருபவர்கள் ஏராளம். குறிப்பாக, தன்னிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு காட்ட எப்போதும் கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை போட்டுக்கொண்டு திரியும் நபர்கள் ஊருக்கு ஒருத்தர் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இத்தகையவர்கள் இன்னும் அதிகமாக வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளனர்.

bike with real gold film

அத்தகையவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் மிகவும் லக்சரியானதாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். சிலர் மேட்சிங்கிற்காக தங்களது வாகனத்திற்கும் கோல்டு நிற பெயிண்ட் அடித்துள்ளனர். இருப்பினும், அது நிஜமான தங்கமாக இருக்காது. ஏனெனில், வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துவதால், திருட்டு பயத்தினால் கோல்டு நிற பெயிண்ட்டை மட்டுமே வழங்குகின்றனர்.

ஆனால், பீகாரை சேர்ந்த பிரேம் சிங்கின் கதையே வேறு. ஏனெனில், இவர் தனது ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கிற்கு நிஜ தங்க படலத்தை கொடுத்து பிரம்மிக்க வைத்துள்ளார். இதற்கு ஆன செலவு மட்டும் ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது. இந்த கோல்டு புல்லட் பைக் குறித்து யூடியூப்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தங்க முலாம் பூசப்பட்ட அந்த புல்லட் பைக்கை காணலாம்.

bike with real gold film

ஒற்றை இருக்கையை கொண்ட இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கின் மட்கார்ட், ஹெட்லைட் கௌல், பெட்ரோல் டேங்க், செண்டர் பாக்ஸ் மற்றும் பின்பக்க மட்கார்டில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், பைக் கீழே விழும்போது பாதிப்பு ஏற்படக்கூடாது என பொருத்தப்படும் கம்பிக்கு கூட தங்க முலாம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, பைக்கின் என்ஜின் & எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.

பைக்கில் 12 லட்ச ரூபாய் தங்கம் இருக்க, கோல்டு மேன் பிரேம் சிங்கின் கழுத்தில் இருப்பது சுமார் 5.4 கிலோ எடையிலான தங்க ஆபரணங்கள் ஆகும். இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இவ்வளவு தங்க நகைகளை அணிந்துக் கொண்டு வெளியே செல்வதற்கு பயமாக இல்லையா? பிரேம் சிங்கிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, எல்லாரும் தன்னை விரும்புவதாக கூலாக பதிலளிக்கிறார்.

bike with real gold film

பிரேம் சிங்கை சாலையில் பார்க்கும் பலர் அவரிடம் ஆர்வமாக வந்து நெருக்கமாக செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். அப்போதும் கூட தனக்கு எந்தவொரு பயமும் இல்லை என கூறும் பிரேம் சிங், முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்த பிறகு பீகாரில் சட்டம், ஒழுங்கு நிறையவே மாறிவிட்டது எனவும், இவ்வளவு நகைகளை போட்டுக் கொண்டு வெளியே உலா வருவது தனக்கு பயத்தை தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய பீகார் கோல்டு மேன் பிரேம் சிங், தன்னை அனைவரும் விரும்புவதாகவும், என்னை யாரும் துன்புறத்த மாட்டார்கள் எனவும் கூறியதோடு, உலக அரங்கில் பீகார் மற்றும் இந்தியாவின் பிரதிநியாக தெரிய வேண்டும், அதனால்தான் இத்தனை தங்க ஆபரணங்களை அணிந்துள்ளதாக கூறியுள்ளார். பிரேம் சிங்கிடம் இருப்பது ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை அணிந்துக் கொண்டு திரிபவர்களை பரவலாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காண முடியும். ஏற்கனவே கூறியதுபோல், நம் தமிழ்நாட்டில் கூட ஹரி நாடார் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், பயன்படுத்தும் பைக்கிற்கும் பல இலட்சங்கள் மதிப்பில் தங்க முலாம் பூசியிருப்பது ஆச்சிரியமான ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 4, 2024, 16:00 [IST]
English summary
Royal enfield bullet bike with real gold film owned by bihar goldman all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X