மியூசியத்தில் தரிசனம் தரும் ஹாரி பாட்டர் சினிமாவில் கலக்கிய புல்லட்!

By Saravana

இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஹாரி பாட்டர் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார்சைக்கிள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பல சாகச காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இந்த மோட்டார்சைக்கிளை காண்பதற்கு பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

மாறுதல்கள் செய்யப்பட்ட இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 மோட்டார்சைக்கிள்தான் உலக புகழ்பெற்ற ஹாரி பாட்டர் சினிமாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட புல்லட் மோட்டார்சைக்கிள்.

சைடு கார்

சைடு கார்

ஹாரி பாட்டர் சினிமாவிற்காக இந்த புல்லட் மோட்டார்சைக்கிளில் சைடு கார் ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது. பழமையான தோற்றம் தரும் வகையில் மோட்டார்சைக்கிளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

சில வாரங்களுக்கு...

சில வாரங்களுக்கு...

ஹாரி பாட்டர் சினிமாவை தயாரித்த வார்னர் பிரதர்ஸ். ஸ்டூடியோஸ் லீவெஸ்டன் நிறுவனத்திடமிருந்து இந்த மோட்டார்சைக்கிள் சில வாரங்களுக்கு மட்டும் பெற்றுள்ளது லிவர் பூல் மியூசியத்தின் நிர்வாகம். எனவே, ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே அங்கு காட்சிக்கு இருக்கும்.

சாகசம்..

சாகசம்..

ஹாரி பாட்டரின் உற்ற நண்பனாக வரும் ஹாக்ரிட்தான் இந்த மோட்டார்சைக்கிளை ஓட்டுவார். படத்தின் சில முக்கிய காட்சிகளில் இந்த மோட்டார்சைக்கிள் சாகச காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

பவர்ஃபுல் மோட்டார்சைக்கிள்

பவர்ஃபுல் மோட்டார்சைக்கிள்

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் 499சிசி எஞ்சின் அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

 விலை

விலை

இந்தியாவில் ரூ.1.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை மதிப்பு கொண்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The motorcycle used in the famous Harry Potter movie has been displayed at the Liverpool Museum. This motorcycle is from the iconic motorcycle manufacturer, Royal Enfield.
Story first published: Saturday, May 21, 2016, 9:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X