‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

இந்தியர்கள் பெரிதும் விரும்பிய மோட்டார்சைக்கிள்களுள் நிச்சயமாக ராயல் என்பீல்டு புல்லட்டையும் ஒன்றாக சொல்லலாம். ஒரு சிலருக்கு புல்லட் பைக் உடனான பிணைப்பு அந்த அளவிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். பழமையான கிளாசிக் தோற்றத்தில் இருப்பினும் இப்போதும் பல மாடர்ன் பைக்குகளுக்கு சிம்ம சொப்பனமாக புல்லட் விளங்குகிறது என்றால், அதில் மிகையில்லை.

‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

பொதுவாகவே ராயல் என்பீல்டு பைக்குகளின் அடையாளமாக அவற்றின் எக்ஸாஸ்ட் சத்தத்தினை சொல்வார்கள். அதிலும் புல்லட் பைக்குகளின் எக்ஸாஸ்ட் சத்தம் பலரது ஃபேவரட் என்று சொல்லலாம். இருப்பினும் சிலருக்கு இந்த உறுமும் சத்தம் கூட போதவில்லை போல. ஏனெனில் மாடிஃபை செய்யப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உடன் ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகளை பயன்படுத்தி வருவோரை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

இந்த வகையில் இனி இந்த செய்தியில், சட்டவிரோதமான எக்ஸாஸ்ட்-ஐ கொண்ட புல்லட் பைக்குடன் பொதுமக்கள் ஒலி இரைச்சலை ஏற்படுத்தி வந்த இளைஞரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம். வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போலீஸாரின் பார்வையில், இரைச்சலை ஏற்படுத்தியவாறு ஓர் இளைஞர் புல்லட் பைக்குடன் சிக்குகிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதை நேஷன் மிரர் என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவில் காணலாம்.

இவ்வாறான மாடிஃபை மாற்றங்களை தங்களது பைக்குகளில் தைரியமாக மேற்கொள்வோர் பெரும்பாலும் உள்ளூர் ரவுடிகளாகவே இருக்கின்றனர். ஆதலால் கையும் களவுமாக பிடித்தாலும் அத்தகையவர்களிடம் இருந்து மன்னிப்பு எதையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது. ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் இரைச்சலை ஏற்படுத்தியவாறு உலாவந்த இந்த இளைஞரும் போலீஸாரை அதட்டும் பாணியில் தான் தனது உரையாடலை துவங்குகிறார்.

‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

இருந்தாலும் போலீஸ்காரர்கள் விடுவார்களா! இதற்கும் சேர்த்து மொத்தமாக அந்த நபருக்கு ரூ.15,000 அபராதமாக விதித்துள்ளனர். சில நிமிட வாக்குவாதங்களுக்கு பிறகு இந்த புல்லட் ரைடரை போலீஸார் செல்ல அனுமதிப்பதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இருப்பினும் இந்த புல்லட் இளைஞர் தொடர்ந்து தனது எக்ஸாஸ்ட் சத்தத்தை மற்றவர்களுக்கு இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் போலீஸார் கண்முன்பே செல்வது நம்மை திகைப்பூட்டுகிறது.

‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

இவ்வாறு மற்றவர்களுக்கு ஹீரோ போல் காட்சியளிக்க வேண்டும் என சிலர் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்கின்றனர். இந்த வீடியோவில் இந்த இளைஞர் மீதுதான் முழு தவறும். தயாரிப்பு நிறுவனங்கள் பைக்கில் பொருத்தும் எக்ஸாஸ்ட் குழாயை மாடிஃபை செய்வது சட்டப்படி குற்றமாகும். அதனை வேண்டுமென்றே பொது இடங்களில் உறும செய்தவாறு செல்வது அதனை காட்டிலும் தவறான விஷயமாகும்.

‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

இந்த நிகழ்வில் அந்த இளைஞர் போலீஸாரின் முன்பே இவ்வாறு செய்வது, அவரது ஒழுங்கின்மை தன்மையைதான் காட்டுகிறது. உண்மையான ராயல் என்பீல்டு பைக் பிரியர்கள் இவ்வாறான மாடிஃபை எக்ஸாஸ்ட் குழாய்களை விரும்புமாட்டார்கள். அத்துடன் இத்தகைய எக்ஸாஸ்ட் சத்தம் அதன் உரிமையாளருக்கு வசிக்கும் பகுதியிலும் தவறான பெயரை பெற்றுத்தரும்.

‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

இதனாலேயே இவ்வாறான எக்ஸாஸ்ட் குழாய்களை பயன்படுத்துவோரை போலீஸார் விரட்டி விரட்டி பிடிக்கின்றனர். ராயல் என்பீல்டு மட்டுமின்றி எந்தவொரு பைக்கின் எக்ஸாஸ்ட் குழாயை மாடிஃபை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். ஆனால் என்னமோ ராயல் என்பீல்டு உரிமையாளர்களே பெரிதும் இவ்வாறான தவறுகளில் ஈடுப்படுகின்றனர். ஏனெனில் ஏற்கனவே உறுமிக்கொண்டிருக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் எக்ஸாஸ்ட் குழாயை மாடிஃபை செய்தால் முற்றிலும் வித்தியாசமாக சத்தம் கிடைக்கிறது.

‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

ஆனால் இந்த சத்தம் தான் அவர்களை போலீஸாருக்கு அடையாளம் காட்டி விடுகின்றன என்பதில் அவர்களில் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. அதுமட்டுமின்றி இத்தகைய எக்ஸாஸ்ட் மாடிஃபிகேஷன்கள் பைக்கின் என்ஜினின் ஆயுட்காலத்தையும் குறைக்கின்றன. இதனால் பைக்கின் என்ஜின் அமைப்பில் அடிக்கடி பழுதுகளை எதிர்க்கொள்ள நேரிடும்.

‘இரைச்சல்’ எக்ஸாஸ்ட் உடன் திமிராக பேசிய ‘புல்லட்’ இளைஞர்!! ரூ.15,000 அபராதம் விதித்து அனுப்பி வைத்த போலீஸார்!

அதிலும் நீண்ட காலத்திற்கு உழைக்கும் பைக் என்ற பெயர் எடுத்த ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் இவ்வாறான எக்ஸாஸ்ட் மாடிஃபிகேஷன்களை கொண்டுவருவது உண்மையில் நல்ல முடிவு கிடையாது. இந்திய சந்தையில் கடந்த 2020ஆம் ஆண்டில்தான் அப்டேட் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட பிஎஸ்6க்கு இணக்கமான 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், காற்று-குளிர்விப்பான், 346சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 19.3 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Royal enfield bullet rider fined rs 15 000 for modified exhaust makes cracker noises
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X