எவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு சிஇஓ... வயசு எல்லாம் ஒரு பொருட்டே இல்ல!! எடுத்துனு போன பைக் தான் மேட்டரு!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) போன்ற உலகின் முன்னணி பைக் நிறுவனத்துக்கு சிஇஓ-ஆக இருந்துக்கொண்டு இப்படியொரு சாதனையை செய்திருக்கிறாரா!! என நம்மை ஆச்சிரியப் படுத்தக்கூடிய அளவிற்கு ராயல் என்ஃபீல்டின் சிஇஓ ஹிமாலயன் 450 பைக்கில் லடாக் வரையில் பயணம் செய்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் தோன்றி இன்று சென்னையை கோட்டையாக கொண்டுள்ள ராயல் என்பீல்டு மார்க்கெட்டில் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் ஒரு பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு பைக்கை அறிமுகப்படுத்துவது என்பது ராயல் என்பீல்டின் திட்டம்.

royal enfield ceo reached ladakh

இந்த வகையில் விரைவில் புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இன்னும் விற்பனைக்கு வராத புதிய ஹிமாலயன் 450 பைக்கில் லடாக் வரையில் ராயல் என்பீல்டின் சிஇஓ பி.கோவிந்தராஜன் பயணம் செய்துள்ளார். ராயல் என்பீல்டு நிறுவனம் "தி ஃபைனல் டெஸ்ட்" என்ற பயணத்தை துவங்குவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

விற்பனைக்கு வரும் புதிய ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளுக்கு தான் இந்த ஃபைனல் டெஸ்ட் ஆகும். இந்த பயணத்தில், ராயல் என்பீல்டின் சிஇஓ நேரடியாக பங்கேற்றுள்ளார். அவரது தலைமையில் மேலும் சில ரைடர்கள் ஹிமாலயன் 450 பைக்குகளில் ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் அமைந்துள்ள உம்லிங் லா பாஸ் வரையில் சென்றுள்ளனர்.

royal enfield ceo reached ladakh

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19,024 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்திற்கு சாலை வசதி உள்ளது. இதன் மூலமாக, உலகிலேயே மோட்டார் வாகனங்களுக்கான சாலை வசதியை கொண்ட மிக உயரமான பகுதியாக இது புகழப்படுகிறது. உலளவில் பிரபலமான இத்தகைய இடத்திற்கு தங்களது குழு சென்றிருப்பதை ராயல் என்பீல்டு வீடியோவுடன் தெரிவித்துள்ளது.

கீழே செய்தியின் இறுதியில் பதிவிடப்பட்டுள்ள அந்த யுடியூப் வீடியோவில், புதிய ஹிமாலயன் 450 பைக்கின் சில கிளீயர் ஷாட்ஸையும் காணலாம். இந்த பயணத்தில் பங்கேற்றது மட்டுமின்றி, இந்த வீடியோவிற்கு சிஇஓ பி.கோவிந்தராஜன் வாய்ஸ் ஓவரும் கொடுத்துள்ளார். இந்த பயணம் சென்னை, ஓரகடத்தில் அமைந்துள்ள ராயல் என்பீல்டின் தொழிற்சாலையில் துவங்கி, 5000கிமீ-க்கும் அதிகமான தொலைவு பயணத்திற்கு பிறகு லடாக்கின் உம்லிங் லா பாஸை தொட்டுள்ளது.

royal enfield ceo reached ladakh

சென்னையின் ஓரகடம் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 22 அடி உயரத்தில் உள்ளது. ஆக, பைக் நீண்ட தொலைவிற்கு இயங்கியுள்ளது மட்டுமின்றி, கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 5.5 கிமீ உயரத்திற்கும் சென்றுள்ளது. இந்த நீண்ட தொலைவு பயணம் முழுவதும் ராயல் என்பீல்டின் சிஇஓ அவரது பைக்கை முழுவதுமாக அவர் தான் ஓட்டினார் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 வருகிற 2023 நவம்பர் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லடாக் வரையில் மோட்டார்சைக்கிள் பயணங்களை மேற்கொள்பவர்கள் இந்தியாவில் ஏராளம். புதிய ஹிமாலயன் 450 அறிமுகமான பின்பு இந்த பைக்கையும் நிறைய பேர் இந்த பகுதிக்கு கொண்டு செல்லலாம். ஏனெனில், இவ்வாறான தொலைத்தூர பயணங்களுக்கு இவ்வாறான அட்வென்ச்சர் பைக்குகளே ஏற்றவை. ஆனால், முதல் ஹிமாலயன் 450 பைக்கை கொண்டு சென்றவர் ராயல் என்பீல்டின் சிஇஓ தான்... அதை மாற்ற முடியாது.

More from DriveSpark

Article Published On: Monday, October 23, 2023, 12:26 [IST]
English summary
Royal enfield ceo govindarajan reached ladakh umling la pass with himalayan 450
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X