ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ் பாபர் மாடலில் புதிய வடிவம், புதிய செயல்திறன்...!

Written By:

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சிசி பைக்குகளை பாபர் மாடல்களாக கஸ்டமைஸ் செய்வதில்  புகழ்பெற்ற ஜெடாய் நிறுவனம், இனி வடிவமைக்கும் முறையில் சிறியளவிலான அணுகுமுறைகளை கையாள உள்ளது.

பாபர் ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்ஃபீல்டு...!!

ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் கிளாசிக் 350 மாடல் பைக்குகளை பாபர் மாடலாக மாற்றுவதில் புதிய அனுகுமுறைகளை கையாள பிரபல ஜெடாய் கஸ்டமைஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பல்வேறு வழிமுறைகளையும் மாறும்படியான செயல்பாடுகளையும் கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பாபர் ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்ஃபீல்டு...!!

மும்பையில் அமைந்திருக்கும் ஜெடாய் நிறுவனம், இதுவரை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சிசி மோட்டார் சைக்கிளை பெரியளவில் கஸ்டமைஸ் செய்துள்ளது. இதில் இனி தயாரிக்கக்கூடிய பாபர் ரக மாடல்களை இலகுவான எடைக்கொண்டு உருவாக்கவுள்ளது.

பாபர் ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்ஃபீல்டு...!!

சிறியளவிலான வடிவமைப்பில் தயாரிக்கப்படும் இந்த கஸ்டமைஸ் மாடல்கள், மிகுந்த செயல்திறன் கொண்ட வகையில் எடைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும் எனவும் ஜெடாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாபர் ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்ஃபீல்டு...!!

ராயல் என்ஃபீல்டின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கிளாசிக் பாபர் வண்டியில் எரிவாயுவை நிரப்பும் டேங்க், கடலை வடிவில் இருக்கும். முதல் தர லெதரை கொண்டு உருவாக்கப்பட்ட இருக்கைகள் இருக்கும்.

பாபர் ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்ஃபீல்டு...!!

மேலும் இதனுடைய முகப்பு விளக்குகள் கிரில்லுடன் பொருத்தப்பட்டுயிருக்கும். இதை பார்க்கும்போது ஒரு பழைய கால பைக் வடிவங்கள் நமது நினைவுக்கு வருகிறது.

பாபர் ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்ஃபீல்டு...!!

மிகவும் ஸ்டலான, கிளாஸான மல்டி ஸ்போக் கொண்ட சக்கரங்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் கஸ்டமைஸ் பாபர் மாடலுக்கு ஒரு நிறைவான கட்டமைப்பை தரும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

பாபர் ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்ஃபீல்டு...!!

இந்த மோட்டார் சைக்கிளின் எஞ்சின் 346சிசி பவர் கொண்டது, சிங்கள் சிலிண்டர் கொண்ட இதில் 5-ஸ்பீடு கியர் பாகஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கஸ்டமைஸ் பாபர் மோட்டார் சைக்கிளில் 19.8 பி.எச்.பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Royal Enfield Classic Bobber by Jedi Customs follows the minimalistic design approach built on the Classic 350 platform.
Story first published: Tuesday, April 18, 2017, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark