சிஇஓ-யிடம் இருந்து இப்படியொரு பரிசு வரும்னு சுத்தமா எதிர்பார்க்கல! பைக் டெலிவிரி எல்லாமே வீடியோ காலில்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகள் என்றாலே நம்மில் நிறைய பேருக்கு பிடிக்கும். ஆனால், அதனை நிஜமாக்கும் வாய்ப்பு என்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அதுவும், நம்மில் பெரும்பாலானோர் வாங்குவது எல்லாம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி பைக்குகள் ஆகவே உள்ளன. சிலர் கொஞ்சம் அட்வான்ஸாக யோசித்து ஹிமாலயன் (Himalayan) என்கிற அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்கை வாங்குகின்றனர்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி பைக்குகளை மிகவும் சிலர் மட்டுமே வாங்குகின்றனர் என்பது ஒவ்வொரு மாதமும் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது. அளவில் பெரியதான 650சிசி என்ஜின் உடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் பல்வேறு விதமான உடலமைப்புகளில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

royal enfield continental gt650 gift

அவற்றுள் இந்திய மக்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமானவை இண்டர்செப்டர் 650 (Interceptor 650) மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 (Continental GT650) ஆகும். இதில், இண்டர்செப்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.3.31 லட்சம் வரையிலும், காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் விலைகள் ரூ.3.19 லட்சத்தில் இருந்து ரூ.3.45 லட்சம் வரையிலும் உள்ளன.

இது எல்லாம் இந்த பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலைகள் (On-road Prices) ரூ.4 லட்சத்தை தாண்டி செல்லும். இவ்வளவு விலைமிக்கவை ஆக இருப்பதினால்தான் இந்த பவர்ஃபுல்லான பைக்குகளை நம்மில் நிறைய பேர் வாங்குவது இல்லை. அப்படியிருக்க, இங்கு ஒரு தனியார் நிறுவனத்தின் சிஇஓ (CEO) தனது நிறுவனத்தின் பொது மேலாளருக்கு ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.

royal enfield continental gt650 gift

இதுதொடர்பான விபரங்கள் 'ப்ளூமவுண்டெயின்_ஆட்டோஸ்' (Bluemountain_Autos) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நாம் இந்த தொகுப்பில் பார்க்கும் தனியார் நிறுவனம் எதுவென்றால், மொபைல் போன்களை (Mobile Phones) மொத்தமாக வாங்கி சில்லறை விற்பனை செய்யும் 'மை ஜி' (MyG) ஆகும்.

நம் தமிழ்நாட்டிலும் மைஜி செயல்படுகிறது என்றாலும், 'பூர்விகா', 'சத்யா' உள்ளிட்ட மற்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள் முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், கேரளாவில் மைஜி நிறுவனத்திற்கு பெரிய அளவில் ஷோரூம் நெட்வொர்க் (Showroom Network) உள்ளது. இத்தகைய மொபைல் போன் ரீடெயில் (Retail) நிறுவனத்தின் சிஇஓ ஆக இருப்பவர், ஏகே ஷாஜி (AK Shaji) ஆவார்.

royal enfield continental gt650 gift

இவர் தனது நிறுவனத்தின் பொது மேலாளருக்கு (GM) சர்பிரைஸ் பரிசாக ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை வழங்கி உள்ளார். கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து தனது மேலாளருக்கான பிராண்ட்-நியூ காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை ஏகே ஷாஜி வாங்கி உள்ளார்.

இதுதொடர்பான விபரங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது வேறு யாருமில்லை, சம்பந்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஷோரூம் ஆகும். இந்த பைக் டெலிவிரி (Bike Delivery) நிகழ்வு யாவும் மொபைல் போனில் வீடியோ அழைப்பு (Video Call)-இல் முடிந்துள்ளது. அதாவது, ஏகே ஷாஜி தனது காரில் இருந்து கொண்டு வீடியோ அழைப்பில் பேச, மறுபுறம் பரிசை பெறும் அவரது பொது மேலாளர் வேறு இடத்தில் இருக்க, மூன்றாவதாக ஒரு நபர் ஷோரூமில் இருந்து பைக்கை டெலிவிரி பெறுவதை வீடியோ அழைப்பில் காண்பித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் இருந்து பைக்கை டெலிவிரி பெறுவதற்கு கூட ஷோரூமுக்கு வர முடியாத அளவிற்கு மைஜி நிறுவனத்தின் பொது மேலாளர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. செய்யும் தொழிலில் கடினமாக உழைத்தால் இவ்வாறு அதற்கேற்ற ஊதியங்களை பெறலாம் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியாகும். பெட்ரோல் டேங்கில் பளிச்சிடும் ஆரஞ்ச் நிறத்தில் ஸ்ட்ரிப் (Strip) உடன் கிரே நிறத்தில் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை ஏகே ஷாஜி வாங்கி கொடுத்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 21, 2025, 16:30 [IST]
English summary
Royal enfield continental gt650 bike gift by ceo to general manager in kerala
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X