பைக் ஜாக்கெட்டின் விலை இவ்வளவா... தலையே சுத்துது!! ராயல் என்ஃபீல்டு தயாரிப்புனா சும்மாவா...

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனம். சமீபத்தில் கூட, குரில்லா 450 (Gurrilla 450) என்கிற மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதுடன், பைக் & ரைடர்களுக்கான ஆக்ஸஸரீகளையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்கிறது. பைக் ஓட்டும்போது ரைடர்களுக்கு தேவையான அனைத்து ஆக்ஸஸரீகளும் இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதியதாக ரைடர் ஜாக்கெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

கிராஸ்ரோடர் (Crossroader) என்கிற பெயரில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது ட்யூயல்-ஸ்போர்ட் ரைடிங் ஜாக்கெட் ஆகும். இந்தியாவில் இதன் விலையாக ரூ.14,950 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை இவ்வளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் அளவிற்கு இந்த ரைடிங் ஜாக்கெட்டின் சிறப்பம்சம் என்னவென்று பார்த்தால், இதன் வடிவமைப்பில் டைட்டானியம் உலோகத்தை ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தி உள்ளது.

royal enfield crossroader riding jacket

டைட்டானியம் ஆனது இரும்பை விட வலிமையான உலோகம் ஆகும். இந்த கிராஸ்ரோடர் ரைடிங் ஜாக்கெட்டின் ஷோல்டர் பகுதிகளில் வேறெந்த உலோகமும் கலக்கப்படாத 100% சுத்தமான டைட்டானியத்திலான ஷீல்டு பொருத்தப்பட்டுள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இது, விபத்து சமயங்களில் பைக்கை ஓட்டும் ரைடருக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வாறு டைட்டானியம் பயன்படுத்தப்பட்ட பைக் ரைடிங் ஜாக்கெட் இந்தியாவிற்கு மிகவும் புதுசு ஆகும். ஆதலால், ராயல் என்ஃபீல்டின் கிராஸ்ரோடர் தான் இவ்வாறான ஜாக்கெட்களில் முதல்முறையாக நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ராயல் என்ஃபீல்டின் டீலர்ஷிப் ஷோரூம்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் மூலமாக இந்த ரைடிங் ஜாக்கெட்டை வாங்கலாம்.

royal enfield crossroader riding jacket

அதுமட்டுமின்றி, அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இது விற்பனைக்கு கிடைக்கும். டைட்டானியம் ஷீல்டுகள் உடன் மாடர்ன் டிசைன் அம்சங்களில் இந்த ஜாக்கெட்டை ராயல் என்ஃபீல்டு வடிவமைத்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 'சூப்பர்-வெண்டிலேட்ட்' 2-வீலர் டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, கால வெப்பநிலையை பொறுத்து ரைடருக்கு குளிர்ந்த காற்று மற்றும் சூடான காற்று கிடைக்கும்.

ஷோல்டர்களிலும், எல்போக்களிலும் க்னாக்ஸ் மைக்ரோலாக் லெவல் 2 பாதுகாப்பான்கள் உள்ளன. அதேபோல், எர்கோ புரோ டெக் லெவல் 2 முதுகு கவசம் மற்றும் லெவல் 1 மார்பு கவசம் உள்ளிட்டவற்றையும் இந்த பைக் ரைடிங் ஜாக்கெட் கொண்டுள்ளது. ஜாக்கெட்டின் முக்கியமான இடங்களில் கோர்டுரா மேல் தையல்கள் உள்ளதால், இதனை நீண்ட காலத்திற்கு உபயோகப்படுத்தலாம்.

ஒளி எதிரொலிப்பான்கள் ஜாக்கெட்டின் முன் மற்றும் பின்பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. 8000மிமீ நைலானில் இந்த மழை ஜாக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. காகித ஆவணங்களை மழையில் நனையாமல் பத்திரமாக வைத்துக் கொள்ள ஜாக்கெட்டிற்கு உள்ள பாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாக்கெட்டின் முன்பக்கத்தில் ஒய்கேகே ஜிப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

புதிய கிராஸ்ரோடர் ஜாக்கெட் குறித்து ராயல் என்ஃபீல்டின் முதன்மை கமர்ஷியல் அதிகாரி வாட்விந்தர் சிங் குலேரியா கூறுகையில், "எங்கள் ரைடிங் சமூகத்துடனான விரிவான ஈடுப்பாட்டின் மூலம், சவுகரியம், தகவமைப்பு மற்றும் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் பல்துறை ஜாக்கெட்டை நாங்கள் உருவாக்கி உள்ளோம். எங்களின் வளர்ந்துவரும் மோட்டார்சைக்கிள்களின் வரம்பில் ஒவ்வொரு ரைடரும் எந்த சாகசத்தையும் மேற்கொள்ளும் வகையில் முழுமையாக தயாராக இருப்பதை உறுதி செய்கிறோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டைட்டானியம் ஷீல்டு உடன் பைக் ரைடிங் ஜாக்கெட் என்பது உண்மையில் கவர்ச்சிக்கரமான அம்சமாகும். இத்தகைய ஜாக்கெட்டை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்ததற்கு ராயல் என்ஃபீல்டை பாராட்ட வேண்டும். இருப்பினும், விலையை சுமார் ரூ.14 ஆயிரத்திற்கும் மேல் நிர்ணயித்து இருப்பது சற்று அதிர்ச்சியை தருகிறது. அதுசரி... இந்தியாவில் ஒரு கிலோ டைட்டானியத்தின் விலை மட்டுமே ரூ.5,500 ஆக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 17:00 [IST]
English summary
Royal enfield crossroader riding jacket introduced check price all details here
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+