கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

பெட்ரோல் பங்க் ஊழியர்களின் மற்றொரு மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது எப்படி நடக்கிறது? என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. எரிபொருளில் கலப்படம் செய்வது, வாகன ஓட்டிகள் கொடுத்த பணத்தை காட்டிலும் குறைவான தொகைக்கு எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட மோசடிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும், அதன் ஊழியர்களும் இதுபோல் பல்வேறு வழிகளில் முறைகேடுகளை செய்கின்றனர்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

ஆனால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் மற்றொரு மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

தான் ஏமாற்றப்பட்டதை அறியாமல், அந்த இளைஞரும் பெட்ரோல் பங்க்கில் இருந்து சென்று விட்டார். ஆனால் அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. பெட்ரோல் பங்க்கில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் இந்த கேமராவில் பதிவாகியிருந்தன. அந்த வீடியோவை பார்த்தபோதுதான் அந்த இளைஞருக்கே தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம்? என்பது தெரியவந்தது.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

நடந்தது என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும். ஆனால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பெட்ரோல் பங்க்கில் இருக்கும் ஒரு சில மோசடி பேர்வழிகளிடம் இழந்து விடாமல் இருக்க இந்த செய்தி உங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம். பெட்ரோல் பங்க்கில் என்ன நடந்தது? என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

சம்பவத்தன்று அந்த இளைஞர் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த பெட்ரோல் நிரப்பும் ஊழியரிடம் 50 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர்தான் அந்த ஊழியர், பைக்கில் பெட்ரோலை நிரப்பினார். அதன்பின் பணம் வசூலிக்கும் மற்றொரு ஊழியர் அங்கு வந்தார்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

அவரிடம் அந்த இளைஞர் 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது பணம் வசூலிக்கும் ஊழியர், ''காலை நேரத்தில் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாகவே வருகிறது'' என்ற ரீதியில் பேசினார். இதற்கு அந்த இளைஞர், ''என்ன செய்வது? இது ஞாயிற்று கிழமை. ஏடிஎம் இயந்திரத்தில் என்ன நோட்டு இருக்கிறதோ அதைதான் நான் எடுக்க முடியும்'' என்கிற ரீதியில் பதில் அளித்தார்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

இதன்பின் பணம் வசூலிக்கும் ஊழியர் தான் கையில் வைத்திருந்த மொத்த பணத்தையும், பெட்ரோலை நிரப்பிய ஊழியரிடமே கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதன்பின்புதான் மோசடி அரங்கேற தொடங்கியது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் வந்த இளைஞர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு 50 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பியிருந்தார்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

அவருக்கு மீதி 450 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். இப்போது எரிபொருள் நிரப்பிய ஊழியரிடம் ஏராளமான நோட்டுகள் கத்தையாக இருந்தன. எனவே மீதி பணத்தை கொடுப்பதற்காக அவர் தன்னிடம் இருந்த நோட்டுகளை எண்ணினார். முதலில் ஒரு 50 ரூபாய் நோட்டை அந்த இளைஞரிடம் அவர் கொடுத்து விட்டார். இதன்பின்பு நான்கு 100 ரூபாய் நோட்டுகளை அவர் எண்ணினார்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

முதலில் ஒரு முறை எண்ணிய பிறகு, அந்த இளைஞர் முன்பாக மீண்டும் ஒரு முறை அவர் எண்ணினார். 2 முறை எண்ணிய காரணத்தால், அந்த இளைஞரும் பணம் சரியாகதான் இருக்கிறது என தனக்கு தானே நினைத்து கொண்டார். ஆனால் அந்த இளைஞரிடம் மீதி நான்கு 100 ரூபாய் நோட்டுகளையும் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒப்படைத்தாரா? என்றால், இல்லை என்பதுதான் பதில்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

நான்கு 100 ரூபாய் நோட்டுகளை அந்த இளைஞரிடம் கொடுக்கும்போது, அதில் ஒரு நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர் லாவகமாக தன்னிடமே வைத்து கொண்டார். இதனை அந்த இளைஞர் உணரவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் அவ்வளவு சாமர்த்தியமாக முறைகேட்டில் ஈடுபட்டார்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

இதன்பின் பணம் சரியாக இருக்கிறதா? என எண்ணி பார்க்கமாலேயே அந்த இளைஞரும் பணத்தை பர்சுக்குள் வைத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். கிட்டத்தட்ட கண் கட்டி வித்தை போல உள்ள இந்த மோசடியை மேலோட்டமாக பார்த்தால் பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதற்காக, இந்த வீடியோ மெதுவாக ஓடும்படி எடிட் செய்யப்பட்டுள்ளது.

இது போல் நீங்களும் கூட பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஏமாந்திருக்கலாம். அது உங்களுக்கு தெரியாமலேயே போயிருந்தப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக நாம் பெட்ரோல் பங்க்கிற்கு அவசர அவசரமாகவே செல்கிறோம். எனவே மீதி பணத்தை எண்ணி பார்க்காமலேயே பர்சுக்குள் வைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விடுகிறோம்.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

இதனை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே பெட்ரோல் பங்க்குகளில் மீதி பணத்தை வாங்கிய பிறகு ஒரு முறைக்கு இரு முறை நன்றாக எண்ணி பாருங்கள். அதன் பின்பு அங்கிருந்து புறப்படுங்கள். நீங்கள் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் கூட உங்கள் பணம் மோசடி செய்யப்படுவதை தடுக்க முடியாது.

கண் கட்டி வித்தையில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் மோசடி அம்பலம்

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளையும் கூட நீங்கள் கையாளலாம். ஆனால் அதிலும் கூட நீங்கள் மிகவும் கவனமாக இருப்பதுதான் நல்லது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். அத்துடன் இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க உங்களிடம் ஏதேனும் ஐடியாக்கள் இருந்தால் அதனையும் தெரியப்படுத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2019, 13:12 [IST]
English summary
Royal Enfield Himalayan Bike Rider Conned At A Petrol Pump: Scam Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+