டாக்டராக்கிய அப்பாவிற்கு இப்படி ஒரு பரிசா? இந்த பிறந்தநாளை மறக்கவே மாட்டாரு!
டாக்டர் ஒருவர் தனது தந்தையின் நீண்ட நாள் கனவான ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த டாக்டர் மகனின் செயலை பாராட்டி வருகின்றனர். இப்படியாக இந்த வீடியோவில் என்ன இருக்கிறது? அவர் வாங்கி பரிசளித்த பைக் எது? அதில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.
தந்தை என்றாலே தியாகத்தின் மறு உருவமாக தான் இருப்பார்கள். குடும்பத்திற்கான தேவைகள் ஒன்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் தந்தைகள் தங்களுக்கு தேவையான விஷயங்களை குடும்பத்திற்காக தியாகம் செய்வார்கள். இப்படியாக தியாகம் செய்த தந்தைக்கு மகன்கள் வளர்ந்து சம்பாதிக்க துவங்கியதும் அவ்ரகளது ஆசைகளை நிரைவேற்றுவது வரம் தாம்.

இப்படியாக ஒரு மகன் தனது தந்தையின் கனவு பைக்கை வாங்கி பரிசளித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. டாக்டர் கெளரவ் என்பவர் தனது தந்தைக்காக ராயல் என்ஃபீல்டு மீட்டியோ 350 என்ற பைக்கை வாங்கி தனது தந்தைக்கு பரிசளித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இவர் தனது தந்தை தன்னை டாக்டருக்கு கஷ்டப்பட்டு படிக்கவைத்தார். அவருக்கு பிடித்த பைக்கை சர்ப்பிரைஸாக பரிசளிக்க விரும்பினார். இதற்காக அவர் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கி அதன் சாவியை ஒரு டப்பாவில் போட்டு கிஃப்ட் பேக் செய்தார். அந்த பரிசை தனது தந்தைக்கு வழங்கினர். முதலில் சிறிய டப்பாவிற்குள் ஏதோ சிறிய பரிசு இருக்கும் என்ற எண்ணத்தில் தான் தந்தை அந்த பரிசை பிரித்து பார்க்கிறார்.

உள்ளே பார்த்தால் ராயல் என்ஃபீல்டு பைக்கின் சாவி இருக்கிறது. வீட்டின் வெளியே பார்க்கிங்கில் அவருக்கு பிடித்த ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக் பைக் வர் போட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அவர் ஆர்வமாக வந்து கவரை திறந்து பார்க்கிறார். பின் குடும்பத்தினர் வந்து அந்த பைக்கிற்கு பூசை செய்கின்றனர். பின்னர் அவர தனது மனைவியை பைக்கில் ஏற்றி ஒரு ரவுண்டு வருகிறார். இந்த பைக்கின் நம்பர் பிளே 5768 என இருக்கிறது இது அவரது தந்தையின் பிறந்த நாள் ஆகும். பிறந்தாள் பரிசாக தந்தைக்கு இந்த பரிசை அவர் வழங்கியுள்ளார்.
ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கை பொருத்தவரை ரூ2.08 லட்சம் முதல் ரூ2.32 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. இந்த டாக்டர் தந்தைக் பரிசளித்த கருப்பு நிற மீட்டியோ 350 பைக் ரூ2.18 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த பைக்கில் செமிடிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்ர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்ப்டடுள்ளது. இது 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் குடும்பத்தினர் அனைவரும் இந்த பைக்கை சர்ப்பிரஸ் பரிசாக அளித்ததும் சந்தோசப்பட்டனர். தந்தை குடும்ப நலனிற்காக நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றாமல் வைத்திருந்த நிலையில் மகன் தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தந்தைகள் மகனுக்கு பைக் வாங்கிகொடுத்த பல சம்பவங்களை பார்த்திருப்போம். ஆனால் மகன் படித்து வளர்ந்து சம்பாதித்து தந்தைக்கு அவரது கனவை நிறைவேற்றியுள்ளார். இந்த வீடியோ பலரை நெகிழ்ச்சிடைய வந்துள்ளது. இதந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துகளைகமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









