இதுக்கு 32,000 அபராதமா! ராயல் என்பீல்டு ஓனரை அதிர்ச்சியில் ஆழ்த்திய போலீஸ்! இனி ஒருத்தரும் இத பண்ண மாட்டாங்க!
வாகனங்களில் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும்? என்பதை மோட்டார் வாகன சட்டம், 1988 தெளிவுபடுத்துகிறது. நம்பர் பிளேட்கள் எந்த நிறத்தில் இருக்க வேண்டும்? என்ன ஃபாண்ட் பயன்படுத்தப்பட வேண்டும்? என அனைத்து விஷயங்களும் மோட்டார் வாகன சட்டம், 1988-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில வாகன உரிமையாளர்கள் இதை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் பிளேட்களை டிசைன் செய்து கொள்கின்றனர். இது சட்ட விரோதமான செயல் என்பதை அவர்கள் உணர்வது இல்லை.
இன்னும் ஒரு சிலரோ ஒரு படி மேலே போய், நம்பர் பிளேட்டில் வாகனத்தின் பதிவு எண்ணையே குறிப்பிடுவதில்லை. மாறாக தங்கள் பெயர் மற்றும் சமூகம் போன்ற பெருமைகளை வெளிக்காட்டும் இடமாக வாகன நம்பர் பிளேட்களை பயன்படுத்தி கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட காரியத்தை செய்த ஒருவருக்கு தற்போது மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். இவர் ராயல் என்பீல்டு பைக் ஒன்றை வைத்துள்ளார். இதன் பதிவு எண் 'MP 07 ZF 5466' என்பதாகும். ஆனால் ஹர்ஷவர்தன் தனது ராயல் என்பீல்டு பைக்கின் நம்பர் பிளேட்டில் இந்த பதிவு எண்ணை குறிப்பிடவில்லை.
மாறாக 'ஹர்ஷ்' என்ற தனது பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். வாகன தணிக்கையின்போது காவல் துறை அதிகாரிகள் இதை கண்டறிந்து விட்டனர். இது சட்ட விரோத செயல் என்பதால், ஹர்ஷவர்தனுக்கு தற்போது 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை சமூக வலை தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மறுபக்கம் இன்னும் ஒரு சிலரோ, இது தவறுதான். ஆனால் அபராத தொகை மிக அதிகம் என கருத்து தெரிவித்து கொண்டுள்ளனர். உண்மைதான். ஹர்ஷவர்தனுக்கு காவல் துறை அதிகாரிகள் மிக அதிகமாக அபராதம் விதித்துள்ளதாகவே தோன்றுகிறது. ஏனெனில் நம்பர் பிளேட் விதிமுறைகளின்படி இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் என எதுவாயினும், அபராத தொகை இதுதான். ஆனால் ஹர்ஷவர்தனுக்கு 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அவர் வேறு ஏதேனும் போக்குவரத்து விதிமுறை மீறல்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.
எனவே அந்த போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாகனங்களில் தங்கள் இஷ்டத்திற்கு நம்பர் பிளேட்களை பொருத்தி பயன்படுத்தி வருபவர்களுக்கு எல்லாம் இந்த சம்பவம் ஒரு பாடம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்களில் நம்பர் பிளேட் ஏன் தெளிவாக இருக்க வேண்டும்? என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட வாகனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறினாலோ அல்லது குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ, வாகனத்தின் உரிமையாளரை உடனடியாக கண்டுபிடித்து விட முடியும் என்பதுதான் முதல் காரணம்.
அதேபோல் வாகனம் விபத்தில் சிக்கினாலும் கூட, நம்பர் பிளேட்டை அடிப்படையாக வைத்து, பாதிக்கப்பட்டவர் யார்? என்பதை கண்டுபிடித்து விடலாம். எனவேதான் வாகனங்களில் நம்பர் பிளேட் தெளிவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வாகனத்தில் நம்பர் பிளேட் விதிமுறைகளின்படி சரியாக உள்ளதா? என்பதை உடனடியாக சரி பார்த்து கொள்வது நல்லது என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








