அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

அதிகம் சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்துபவர்களை கோர்ட்டில் ஆஜர் செய்து பின் அவர்களை ஜெயிலில் போடவும் பஞ்சாப்பில் சட்டம் உள்ளது.

By Balasubramanian

அதிகம் சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்துபவர்களை கோர்ட்டில் ஆஜர் செய்து பின் அவர்களை ஜெயிலில் போடவும் பஞ்சாப்பில் சட்டம் உள்ளதாக ராயல் என்பீல்டு பைக் வைத்திருக்கும் ஒருவர் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் குறித்து வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

ராயல் என்பீல்டு பைக்கில் புகைவெளியிடும் கருவியான எக்ஸாட்டை பலர் மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். அதிக சத்தம் வருவதாலும், அதனால் ரோட்டில் செல்லும் போது அதிகம் கவனிக்கப்படுவதாலும் இந்த செயலில் சில இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

இப்பிரச்சனை இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. இதை தடுக்க அந்தந்த மாநில போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் எக்ஸாட் மாற்றும் பழக்கம் குறைந்த பாடில்லை.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

இது குறித்து ராயல் என்பீல்டு பைக்கை பயன்படுத்தி வரும் ஒருவர் தற்போது ஏன் எக்ஸாட்டை மாற்றக்கூடாது எனவும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும் தண்ணடனை குறித்தும் ஒரு வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது விவதாத்தற்குள்ளாகி வருகிறது. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதில் இவர் அதிக சத்தம் வரும் எக்ஸாட்களை பயன்படுத்துவோரை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிக சத்தம் எழுப்பும் எக்ஸாட்கள் பொதுமக்களை அதிகம் எரிச்சலூட்டுகிறது. இதய நோய் உள்ளவர்கள், நோயாளிகள், வயது முதியவர்கள் என பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

இந்தியாவில் போலீசார் அதிக சத்தம் எழுப்பும் எக்ஸாட் வைத்திருப்பவர்கள் மீது பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெங்களூருவில் அதிக சத்தம் வரும் எக்ஸாட் வைத்திருப்பவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்து ரோடு ரோலர் மூலம் அழித்து வருகின்றனர். என கூறியுள்ளார்

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

இது போல் பஞ்சாப் மாநிலத்தில் அதிக சத்தம் உள்ள எக்ஸாட்களை பயன்படுத்துபவர்களுக்கு அதிக தொகை அபாராதமாக விதிக்கின்றனர். தொடர்ந்து அது போன்ற செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் செய்கின்றனர்.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

அங்கு அவர்களுக்கு அபராதமோ அல்லது 3 மாத ஜெயில் தண்டனையோ வழங்கப்படாலாம். ஆம் அதிக சத்தம் உள்ள எக்ஸாட்களை பயன்படுத்தினால் ஜெயில் தண்டனை வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

மஹாராஷ்டிரா மற்றம் டில்லியில் வெளி மார்க்கெட்டில் அங்கீகாரம் இன்றி விற்கப்படும் எக்ஸாட்களை வாங்கி பயன்படுத்தினால் பெரும் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

சட்டப்படி கார்/பைக் நிறுவனங்கள் பரிந்துரைக்கான எக்ஸாட்களை வாங்கி பொதுவெளியில் பயன்படுத்துவது குற்றமாகும். ரேஸ் ஓட்டும் டிராக்குகளுக்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தினால் இனி ஜெயில் தான்

ராயல் என்பீல்டு பைக் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதிக சத்தம் உள்ள எக்ஸாட்களுக்கு மார்கெட்டில் தேவை அதிகமாக உள்ளது. அதனால் இது அதிக அளவில் தயாரிக்கப்பட்டும் வருகிறது.

Article Published On: Wednesday, May 2, 2018, 12:32 [IST]
English summary
Royal Enfield owner warns RE users of ‘jail time’ if caught using ‘pataka’ silencers. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+