1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள் அசத்தலாக புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 1,140சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 130 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய

By Saravana Rajan

அம்பாசடர் காரும், புல்லட் மோட்டார்சைக்கிளும் சாகா வரம் பெற்ற மாடல்கள் என்று நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். இந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள் புத்துயிர் பெற்றிருக்கிறது.

1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

இது மட்டும் ஆச்சரியம் தரும் விஷயமல்ல, இந்த மோட்டார்சைக்கிளில் 1,140சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதுதான் ஹைலைட். 1938ம் ஆண்டுகளில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு கேஎக்ஸ் விளங்கியது.

1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அந்த காலக்கட்டத்தில் விற்பனை செய்த 18 மாடல்களில் முக்கிய மாடலாகவும் இருந்தது. அதில் ஒரு ராயல் என்ஃபீல்டு கேஎக்ஸ் மோட்டார்சைக்கிள் இப்போதும் புதுப்பொலிவுடன் புதிது போல வாழ்ந்து வருகிறது.

1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

இந்த மோட்டார்சைக்கிளை அச்சரம் பிசகாமல் அசத்தலாக புதுப்பித்துள்ளனர். இந்த மோட்டார்சைக்கிள் 1938ம் ஆண்டு ஜூன் மாதம் 7ந் தேதி பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. உரிமையாளர்கள் மாறி இப்போது வாகன சேகரிப்பு ஆர்வலர் கையில் இருக்கிறது. பல்வேறு மோட்டார்சைக்கிள் கண்காட்சிகளில் பார்வையாளர்களை கவரும் மாடலாக மாறி இருக்கிறது.

1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் டவின் சிலிண்டர் 1,140சிசி எஞ்சின் மிகவும் சக்திவாய்ந்தது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்கில் கியர் லிவர் கொடுக்கப்பட்டு இருப்பதும் இதன் தனித்துவமான விஷயம்.

1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் திறனை வழங்குகிறது. லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

பஞ்சை வண்ண பெயிண்ட்டிங் செய்யப்பட்ட இந்த மோட்டார்சைக்கிளில் மஞ்சள்- சிவப்பு வண்ண பெயர் ஸ்டிக்கர் அசத்துகிறது. எஞ்சின் பாகங்கள் குரோமிய பாகங்களுடன் பளபளக்கிறது.

1,140சிசி எஞ்சினுடன் மிரட்டும் 80 ஆண்டுகள் பழமையான புல்லட் மோட்டார்சைக்கிள்!

இந்த மோட்டார்சைக்கிளின் ஹேண்டில்பார், பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு மற்றும் இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றை மிகவும் சவுகரியமான ஓட்டுதல் உணர்வையும், பயணத்தையும் தர வல்லதாக மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களால் புகழப்படுகிறது.

இந்த மோட்டார்சைக்கிள் ஏலத்தில் ரூ.40 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் வாய்ப்புள்ளது. எத்துனை ஆண்டுகள் ஆனாலும் சாகா வரம் பெற்ற புல்லட் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாகவே இது இருக்கும் என்பது திண்ணம்!

Source: Motorworld by V Sheyanov on Youtube

Article Published On: Thursday, May 3, 2018, 15:05 [IST]
English summary
Royal Enfield with a 1,140cc engine.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+