இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண நிகழ்ச்சியின் போது பயன்படுத்திய ஜாக்குவார் கார் ரகசியங்கள் அம்பலம்
இங்கிலாந்து இரண்டாம் இளவரசரான ஹாரியின் திருமணம் கடந்த 19ம் தேதி நடந்து. அவர்களது திருமணத்தின் போது அவர்கள் பயன்படுத்திய ஜாக்குவார் கார் குறித்து பலருக்கு இருந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் அந்த கார் குறித்து முழு விபரங்களையும் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

லண்டன் அரச குடும்பத்தை சார்ந்த இரண்டாம் இளவரசாரன பிரின்ஸ் ஹாரிக்கு கடந்த 19ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேக்கன் மார்க்கல் உடன் திருமணமானது. அந்த திருமண நிகழ்ச்சியின் போது அவர்கள் பயன்படுத்திய ஒரு கார் பெரிதும் பேசப்பபட்டது, அந்த கார் குறித்த தகவல்கள் ரசியமாக வைக்கப்பட்டிருந்தன.

லண்டன் அரச குடும்பத்தின் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம் ஆடம்பரம் பிரம்மாண்டம் என எதற்குமே குறையிருக்காது. அவர்களது திருமணத்தை இந்த நாடே கொண்டாடியது. இவர்களது திருமண நிகழ்வின் போது மாலை நடக்கும் நிகழ்ச்சிக்காக இவர்கள் ஜாக்குவார் இ டைப் காரில் சென்றனர்.

இந்த ஜாக்குவார் இ டைப் கார் என்பது சுற்றுப்புற சூழலை மாசு படுத்ததாவ வண்ணம் கான்சப்ட் ஜீரோ என்ற மாடலில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1968ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜீரோ எமிஷன் காரின் மேம்படுத்தப்பட்ட வடிவம் தான் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கான்சப்ட் ஜீரோ கார்.

இந்த கார் குறித்து ஜாக்குவார் நிறுவன இயக்குநர் டிம் ஹன்னிங் கூறும் போது : " இது முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டது. இந்த காரின் வெளிப்புறத்தோற்றம் முழுவதும் பழைய இ டைப் கார்களை மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உள்ள இன்ஜின், அம்சங்கள், வசதிகள் எல்லாம் புதிய ரக கார்களுக்கு போட்டியாக வடிவமைத்துள்ளோம் " என கூறினார்.

இந்த கார் 5.5 நொடிகளில் 0-100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட முதல் சீரீஸ் இ டைப் கார்களை விட இது 1 நொடி முன்பாகவே மேற்கூறியபடி பிக்கப்பை பெறுகிறது.

இந்த காரின் டிசைன்கள் பெரும்பாலும், பழைய டைப் காரை ஒத்தே அமைந்துள்ளது. பழைய காரின் அதே தீம்மில் இந்த கார் கட்டுமானங்கள் முழுவதும் அமைந்துள்ளது. இந்த காரில் உள்ள பேட்டரி சார்ஜை மிச்சப்படுத்த எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 40 கிலோ வாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 275 கி.மீ. வரை பயணம் செய்யக்கூடியது. ஜாக்குவார் லாண்ட் ரோவர் கிளாசிக் குழு இந்த காரை முழுமையாக வடிவமைத்துள்ளனர்.

இந்த காரின் விலை இந்திய மதிப்பு படி ரூ3.2 கோடியாகும். திருமண நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட கார் நீலநிறத்தால் ஆனது. இந்த காரின் நம்பர் பிளேட் மிகவும் பிரத்தியோமானது. அவர்களது திருமண நாளை குறிக்கும் வண்ணம் 190518 என்ற எண் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் இந்தியாவில் உள்ளது போல வலதுபுற டிரைவ் தான். ஆனால் இந்த கார் இடதுபுற டிரைவ்வின் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஹாரியின் மனைவி அமெரிக்கன் என்பதால் இப்படிபட்ட காரை அவர்கள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சிக்காக ஹாரியும் மேக்கனும் அந்த காரில் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளது. இந்த காரை ஹாரிதான் ஓட்டி செல்கிறார். வீட்டில் இருந்து வெளியே வந்த ஹாரியும் மேக்கனும், கார் அருகே வந்தவுடன் ஹாரி, மேக்கனுக்கு கார் கதவை திறந்து விடுகிறார். காருக்குள் மேக்கன் ஏறியுடன் பின் ஹாரி டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்து செல்லும்விதமாக இந்த காட்சி உள்ளது. இதை நீங்கள் கீழே பார்க்கலாம்.
அவர்கள் சென்ற திருமண நிகழ்ச்சியை பிரின்ஸ் ஆப் வாலஸ் என அழைக்கப்படக்கூடிய சார்லஸ் முன் நின்று நடத்தி வைத்தார். அவரது திருமண நிகழ்ச்சி வழக்கமாக அரச குடும்பத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி போல மிகவும் ஆடம்பரமாகவும், பெரிய பொருட்செவில் உருவாக்கப்பட்ட விருந்துகளுடன் நடந்தது.
டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
Video Source:NBC News


Click it and Unblock the Notifications








